
(6.11.2021 முதல் 12.11.2021 வரை)
இவ்வார கிரகநிலைகள்:
ரிஷபத்தில் ராகு ,துலா ராசியில் புதன்,சூரியன், செவ்வாய், விருச்சிகத்தில் கேது,தனுசு ராசியில் சுக்கிரன், மகரத்தில் குரு, சனி
மேஷம்
சாதகங்கள்:
ராசிநாதன் செவ்வாய் ஏழாம் வீட்டில் சூரியனுடன் இணைந்துள்ளார். ராசிநாதன் பார்வை உங்கள் ராசி மற்றும் இரண்டாம் வீட்டின் மீது விழுகிறது. செயல் தடங்கல்கள் மாறும். சூரியன், புதன் பார்வையும் ராசியின் மீது விழுவதால் நல்ல யோகம்.செவ்வாய் அற்புதமான நன்மைகளைச் செய்யும்.முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் உள்ளதால் யோகமான கால கட்டமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.10ல் சனி என்பதால் உத்தியோகம், தொழில் போன்றவை சுமுகமாக நடக்கும். கலைத்துறையினருக்கு மிக நல்ல வாரம். புதிய நட்புகள் கிடைக்கும். அரசாங்க உத்தியோ கஸ்தர்களால் அனுகூலம் உண்டு. மேலதிகாரிகள்ஆதரவு உண்டு.. அரசியல் ஆதாயமாக இருக்கும் .
கவனம் தேவை:
7ல் சூரியன்.கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சல சலப்புகள் வரலாம். பேச்சில் நிதானம் தேவை. விட்டுக்கொடுத்து செல்லவும். வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற மனஸ்தாபங்கள் வேண்டாம். வீண் பகைக்கு இடம் தர வேண்டாம். 8 மற்றும் 9 ம் தேதிகளில் கூடுதல் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்:
6 ம் தேதி முழு நாளும், 7ம் தேதி இரவு 9 மணி வரையிலும் சந்திராஷ்டமம் என்பதை கவனத்தில் கொண்டு பேச்சிலும் செயலிலும் கவனத்தோடு இருங்கள்.
பரிகாரம்:
திருப்பதி ஏழுமலையான் படத்திற்கு, தினம் மாலை, விளக்கு ஏற்றி, ஏதேனும் பாசுரம் சொல்லி வணங்குங்கள். சனிக்கிழமை பெருமாள் ஆலய தரிசனம் செய்யுங்கள். சுகம் கிடைக்கும்.

——————————————————————————————————–
ரிஷபம்
சாதகங்கள்:
இந்த மாதம் உங்கள் தொழில் வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். லாப கரமான ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்படலாம். கொடுத்த வேலையைச் செய்து முடித்து அதிகாரிகளால் பாராட்டு பெறுவீர்கள்.புதிய சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும்.சென்ற வரம் போலவே பண பிரச் சனை, மனப் பிரச்சனை இரண்டும் நல்ல விதமான முன்னேற் றத்தை நோக்கி நகரும். மகிழ்ச்சி தரும் வாரம் இது. ஆன் மிகம்,வழிபாடு பூஜை என்று இருப்பீர்கள் .கலைத் துறையினருக்கு கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி.
கவனம் தேவை :
பிறர் செயல் பஞ்சாயத்துகளில் தலையிட வேண்டாம் .புதிய முத லீடுகள் இப்போது கூடாது . அலைச்சலைக் குறைத்துக் கொள் ளுங்கள். மற்றவர்களோடு விரோத மனப்பான்மை இல்லாமல் இருங்கள்.
சந்திராஷ்டமம்:
7.11.21 ம் தேதி இரவு 9.00 மணி முதல் 9.11.21 ம் தேதி இரவு 10.37 மணி வரையிலும் சந்திராஷ்டமம்.கவனத்தோடு இருங்கள். பயணங் களில் அதிக கவனம் தேவை.
பரிகாரம்:
சுக்கிரனுக்குரிய மகாலட்சுமியை தினம் பூஜை செய்து வழிபட்டு வாருங்கள்.பல பிரச்சினைகள் தீரும்.
————————————————————————————————-
மிதுனம்
சாதகங்கள்:
ராசி அதிபதி வலுவாக உள்ளார்.நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டில் நிம்மதியாக இருக் கலாம்.அஷ்டம ஸ்தானத்தில் உள்ள குரு பாக்ய ஸ்தானத்திற்கு செல்வதால், இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். குருவால் நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். மன நிம்மதியும் , வருமானமும் வரும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திருமணம் சுபகாரியம் தொடர்பாக காரியங்கள் அனுகூலமாகும் . பெண்களுக்கு இது வெற்றிகரமான வாரம். சனி ஆட்சி என்பதால் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும் .
கவனம் தேவை
6,7,10,11 தேதிகளில் அதிக கவனம் தேவை .சூரியன் ஆறில் நீசம். யாரோடும் கருத்து வேற்றுமை வேண்டாம்.அது சிக்கலைத் தரும். அதை மாற்றிக் கொள்ளுங்கள் .அவசரப்பட்டு வாக்குறுதி தர வேண் டாம் .ஜாமின் போட வேண்டாம்.முன்கோபத்தைத் தவிர்க்கப் பாருங்கள்.
சந்திராஷ்டமம்:
9.11.21ம் தேதி இரவு 10.37 மணி முதல் 12.11.21 ம் தேதி காலை 2.51 மணி வரையிலும் சந்திராஷ்டமம். மிகுந்த கவனத்தோடு இருங்கள்.பேச்சில் ஜாக்கிரதை உணர்வு வேண்டும்.இரவு பயணங் களில் அதிக கவனம் தேவை.
பரிகாரம்:
அம்மன் கோயிலில் அகல் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். ஏதேனும் ஒரு அம்மன் கோயிலில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெய ரைச் சொல்லி குங்கும அர்ச்சனை செய்யுங்கள்.
——————————————————————————————————————-
கடகம் :
சாதகங்கள்:
இரண்டாம் வீட்டு அதிபதி சூரியனுடன் பத்தாம் வீட்டு அதிபதி செவ்வாய் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் 3,12 க்குரிய புதனுடன் இணைந்துள்ளார். 5ல் கேது சஞ்சரிக்கிறார். புதிய முயற் சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவுகள் சுமுகமாகும் . வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.ராசியையும் லாப ஸ்தானத்தையும் தைரிய வித்யாஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் நஷ்டங்கள் குறையும்.கலைத்துறையினருக்கு சில ஆதாயங்கள் உண்டு. சகோதர உறவுகளும் கை கொடுக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வீடு கட்டும் யோகமும் சிலருக்கு உண்டு.
கவனம் தேவை:
தசை புத்தி சரியில்லாதவர்களுக்கு பண முடக்கங்கள் இருக்கும். கடன் வசூல் பணம் தாமதமாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை .பங்கு வர்த்தகத்தில் இவ்வாரமும் இழப்பு ஏற்படும். கவலைகளைத் தவிருங்கள். கவனமாக வண்டி ஓட்டுங்கள்.
பரிகாரம்:
அனுமனை வணங்குங்கள்.அனுமன் சாலீசா பாராயணம் அற்புதமான பலனளிக்கும். சுந்தர காண்டம் தினம் ஒரு அத்தியாயம் படித்து வா ருங்கள்.புத்தி பலம் தரக்கூடியவர் அவர். எல்லாம் நலமாகும்.
- கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி – Kannadasan – Krishna Bhakthi
- செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சென்ற ஆண்டு நடந்தவை
- Learned From Lock down! லாக் டவுன் – இயற்கை நமக்குத் தந்த வாய்ப்பு!
- இலக்கிய நோக்கில் திருப்பாவை – Thiruppavai – Ilakiyam – Sri Andal
- இராமானுஜ நூற்றந்தாதி 108 – Ramanuja Nootrandhadhi 108 Part 1
- ஆன்மீக கவிதைகள் Aanmeega kavithaigal