கிருபானந்த வாரியார்
திருமுருக கிருபானந்த வாரியார் (25 ஆகத்து 1906 – 7 நவம்பர் 1993) சிறந்த முருக பக்தர் ஆவார். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.2021 ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகவாக அவதரித்தவர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில், பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியைத் தனது 19-ஆவது வயதில் கல்யாணம் புரிந்தார்.
இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.
தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார்.
தமிழகம் முழுவதும் ஆன்மீகத்தையும், சைவத்தையும், தமிழையும்பரப்பியவர் திருமுருக கிருபானந்த வாரியார்.தமிழ் இலக்கியங்களை மிகஎளிதாக எடுத்துச் சொன்னவர். திருப்புகழுக்கு மிக விரிவான விரிவுரைசெய்தவர். மகாபாரதம், இராமாயணம் முதலிய இதிகாசங்களைபட்டிதொட்டியெல்லாம் பரப்பியவர், அவருடைய நினைவு தினம் இன்று,அவருடைய ஆன்மீக சிந்தனைகளை இன்று நினைவு கொள்வோம்.
1.பசை வேண்டும்
இரண்டு பலகைகளை ஒட்ட வைக்க வேண்டுமானால் பசை வேண்டும்.
அதுபோல் மக்களாகிய நாமும் பரமாத்மாவான சுவாமியும் சேர்ந்து
ஒன்றாக வேண்டுமானால் பக்தி என்னும் பசை வேண்டும்.
பேராசை வேண்டாம்
ஒரு மனிதனுக்கு பற்று அவா ஆசை பேராசை என்று நான்கு வகைஎழுச்சிகள் உள்ளன.
– நம்மிடம் உள்ள பொருளில் வைத்திருக்கும் பிடிப்புக்கு பற்று என்றுபொருள்
– அது வேண்டும் இது வேண்டும் என்கின்ற நினைவுக்கு அவா என்று பொருள்
– பிறர் பொருளை விரும்புவது ஆசை எனப்படும்
– எத்தனை வந்தாலும் திருப்தி இல்லாமல் நெய்யை ஊற்ற ஊற்றஎரிகின்ற தீயின் தன்மையைப் போல எல்லையில்லாத ஆசைக்குபேராசை என்று பெயர் இந்த பேராசைக்கு உதாரணமாக தாயுமானவரின் பாடலை மேற்கோளாகச் சொல்வார்.
ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாங்கட்டிஆளினும் கடல்மீதிலே
ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராகஅம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்நெடுநாள் இருந்த பேரும்
நிலையாக வேயினுங் காயகற் பந்தேடிநெஞ்சுபுண் நாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்உறங்குவது மாகமுடியும்
உள்ளதே போதும்நான் நானெனக் குளறியேஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனதற்றபரிசுத்த நிலையையருள் வாய்
பார்க்கும்இட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே.
மரணத்தை யாரும் விரும்புவதில்லை
எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் மனிதன் எப்படியாவது இந்த உலகத்தில்
வாழ்ந்து விட வேண்டும் என்றுதான் நினைக்கிறான் என்பதற்கு ஒரு
அழகான உதாரணம் சொல்வார்.
ஒரு எண்பது வயதுத் கிழவன் தலையில் விறகு சுமந்து கொண்டு
வந்தார். ஒரு சுமைதாங்கி மீது வைத்துவிட்டு “ எப்பொழுது எமன் வந்து
அழைத்துக் கொண்டு போவான்?” என்று முணுமுணுத்தார். எமன் நேரே
வந்து விட்டான்." பெரியவரே, நீங்கள் கூப்பிட்டதால் வந்தேன். புறப்
படுங்கள். உங்களை நான் அழைத்துச் செல்கிறேன்" என்று சொன்ன போது
கிழவன் சொன்னாராம்.
“நான் என்னை அழைத்துச் செல்ல உன்னைக் கூப்பிடவில்லை. இந்த
சுமை தாங்கி மேல இருக்கக்கூடிய விறகு கட்டையை எடுத்து என் தலை
மேல் தூக்கிவைக்கவே கூப்பிட்டேன்”
மரணம் என்பதை எந்த வயதிலும் யாரும் விரும்புவதில்லை என்பதற்கு
இப்படி அழகான உதாரணத்தைச் சொல்லுவார் வாரியார். அவருடைய
நினைவு தினத்தில் அவருடைய சிந்தனைகளைச் சிந்திப்போம்.
ஒரு_இளைஞன்………….
#அவன்_பெயர்_கடைசியில்.
அது சுதந்திரத்திற்கு முன்பிருந்த இந்தியா
காந்தி நேரு படேல் போன்றவர்களைச் சுற்றி இந்திய அரசியல் சுழன்று கொண்டிருந்த நேரம்.
அந்தக் காலத்தில் சென்னையிலேயே அதிக மருத்துவ வசதிகள் கிடையாது.
மற்ற ஊர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்
ஒரு சிறுவன் அவனது காலில் புண் ஏற்பட்டது. சின்னப் புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை
நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூர புரையோடிப் போனதால் அவனுக்கு உள்ளே குத்து வலி ஏற்பட்டது
வலி தாங்கமுடியாது தவித்த அவனை அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர்
அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி இப்படியா விட்டு வைப்பது? உடனே பட்டணம் போய் காண்பியுங்கள் என்றார்.
பையனைச் சோதித்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார். உள்ளே செப்டிக் ஆகி விட்டது
உடனே காலை எடுக்க வேண்டும். இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர்
காலை எடுப்பதற்கு நீங்கள் எந்த மருத்துவ மனைக்குப் போனாலும் குறைந்தது 5000 ரூபாய் ஆகும்
இந்த மருத்துவ மனை என்றால் 3000 ஆகும். நீங்கள் எனக்குத் தெரிந்தவர் என்பதால் நான் என்னுடைய ஃபீஸைக் கூட குறைத்துக் கொள்கிறேன் மருத்துவமனை
செலவுகளுக்காக மட்டும் 1500 ரூபாய் கட்டி விடுங்கள்
சிகிச்சையைத் தொடரலாம் என்றார்..
அந்த நாட்களில் அரசாங்க அதிகாரிகளின் மாத சம்பளமே 15 ரூபாய் தான். 1500 ரூபாய் என்று கேட்டதும் அதிர்ந்து போனான் பையன்.
ஒரு காலை வெட்டி எடுக்க ஒரு மருத்துவருக்கு 1500 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால்
அந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தர முடியும்? இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம்.
இவ்வாறு நினைத்தவன் தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றான்
108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை. காலை மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான்.
சில மாதங்களில் யாராலும் நம்ப முடியாத அற்புதமாக, ஏன் அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில் தானே ஆற ஆரம்பித்த புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது
இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும்.அதுவே என் தொழில். அதுவே என் மூச்சு என்று ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன்.
அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல் நின்றபடியே முருகன் புகழ் பாடிய “திரு முருக கிருபானந்த வாரியார்” என அழைக்கப்பட்ட வாரியார் ஸ்வாமிகள்.