புரட்டாசி முதல் வாரம் ராசி பலன் – பகுதி – 3
Purattasi 1 Week Raasi Palan Weekly Astrology Predictions in Tamil – Part – 3
(25.9.2021 முதல் 1.10.2021 வரை)
தனுசு
ராசி அதிபதியும் தனகாரகனுமான குரு நீசபங்கம் பெற்று தனா திபதியான சனியோடு இணைவது நன்மையே. தொழில் ஸ்தான பத்தில் சூரியன் இருப்பதும், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதும் கூடுதல் நன்மைகள் தரும். இவைகள் ஆதாய சுப கிரக அமைப் புக்கள். வருமானம் உயரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். சுக வரவுகளும் சுப வரவுகளும் உண்டு. வேலை, தொழில், சுமுகமாக பிரச்சினை இன்றி நடக்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். 26 முதல் 30 ஆம் தேதி வரை நல்ல தினங்கள். 12-ல் உள்ள கேது அவ்வப்போது மனக்குழப்பம் தந்து தடுமாற வைக்கும். சிறு உடல் உபாதைகள் மற்றும் விபத்துக்கள் நிகழும் வாய்ப்பு உண்டு. பயணங்களிலும் வேலை செய்யும் இடங்களிலும் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்:
முப்பதாம் தேதி காலை 5 மணி முதல் 1ம் தேதி வரை உண்டு.இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.வண்டி,வாகனம் இயக்குவதில் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளவும்.
என்ன பரிகாரம்?
விநாயகர் அல்லது ஆஞ்சநேயர் அல்லது உங்கள் இஷ்ட தெய் வத்தை பிரார்த்தனை செய்து வாருங்கள். சனிக்கிழமை காலை குளித்து விட்டு ஒரு சில நிமிடங்கள் பெருமாளை எண்ணி தியானம் செய்யவும்.தீமைகள் வராது கவசம் போல் காக்கும்.
————————————————————————————-
மகரம்
உங்கள் ராசிநாதன் சனி, ராசியில் ஆட்சி. 3, 12-க்குடைய குரு அவரோடு இணைந்து இருக்கிறார். ஒன்பதில் சூரியன் செவ்வாயும், பத்தில் சுக்கிரன் புதன் இணைவும், பெற்ற கிரக நிலையில் நன்மையும் தீமையும் சரிசமமாக இருக்கும். இந்த வாரம் வாரத்தின் முற் பகுதியை விட, பிற்பகுதியில், 29 முதல் ஒன்றாம் தேதி வரை ஓரளவு முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். எதிலும் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் மட்டுமே இவ்வார தொல்லைகளை சமாளிக்க முடியும்.காரணம், ராசியில் சனி குருவின் சேர்க்கை, ஐந்தில் உள்ள ராகு போன்ற கோள்களின் சகாயற்ற தன்மை.புதிய முயற்சிகளை தவிர்ப்பதும் தள்ளிப் போடு வதும் நல்லது. கூடுதல் பொறுப்புகளும் ஏற்க வேண்டியிருக்கும். 11-ல் உள்ள கேது ஆற்றலைத் தருவார்.. செலவு அதிகரிப்பது போலவே பணமும் கிடைக்கும்.5க்குடைய சுக்ரன் 10ல் ஆட்சி பெறுவதால் பெரியோர் அருள் ,தெய்வ அருள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற வினர்களால் மனக்கசப்பு ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்கு இரு முறை எண்ணி செயலில் ஈடுபட்டால் தப்பிக்கலாம்.
என்ன பரிகாரம்?
மாலை நேரம் அகலில் நெய் விளக்கு போட்டு பால் நிவேதனம் செய்து ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வணங்க நிம்மதி கிடைக்கும். துன் பங்கள் குறையும்.தைரியம் பிறக்கும்.
————————————————————————————-
கும்பம்
தனாதிபதி குரு 12-ல் சனியோடு இருக்கிறார். ராசிநாதனாகிய சனியும் பன்னிரண்டில் இருந்தாலும், ராசிநாதன் என்பதால், அதிக தொல்லைகள் தர மாட்டார் .வருமானம் சீராக இருக்கும். வேலை களில் முன்னேற்றம் இருக்கும். சக ஊழியர்கள் மற்றும் மேல் அதி காரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஒன்பதில் சுக்கிரன் ஆட்சி நிலையில் இருப்பதால், சுக போக்கியங்களில் சிக்கல் வராது . அரசியல்வாதிகளுக்கு புதிய வெளிச்சம் கிடைக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி நிகழும். 25, 29, 30, 1 ஆகிய தேதிகள் மனநிறைவு தரும். உருவாகும். ராசியாதிபதி 12 ல் உள்ளதால் செலவுகள் கட்டுப்படுத்தாவிட்டால் சிக்கல் வரும். காரணம் விரயம் பலமாக இருக்கும் வாரம் இது. சுப முயற்சிகளில் சற்று பின்னடைவும், ஏமாற்றமும் ஏற்படலாம். உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். நாலில் உள்ள ராகு உறவு விரோதத்தை ஏற்படுத்தும். 8ல் உள்ள சூரியனும் உங்கள் ஆரோக் கியத்தை கவனிக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது. கடன் வாங்கி புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.
என்ன பரிகாரம்?
பெருமாள் பிராட்டியை சனிக்கிழமை துளசி மாலை சாற்றி வழிபடவும். இயன்றால் தீபம் அல்லது தீபத்திற்கான நல்லெண் ணெய் சமர்ப்பிக்கவும். தீமைகள் மாறி நன்மைகள் கூடும் .நிலவும்.
————————————————————————————-
மீனம்
உங்கள் ராசி மற்றும் தொழில் என்ற இரண்டு நிலைக்கு உரிய குரு லாபஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சனியோடு இருப்பது நல்லது. 3ல் ராகுவும் 9ல் கேதுவும் எதிர்பாராத சில வாய்ப்புகளை தொழில் உத்தி யோகத்தில் ஏற்படுத்தும். சுபநிகழ்ச்சிகள் உறுதியாகும்.ஏழுக்குடைய புதன் எட்டுக் குரிய சுக்கிரனோடு இருப்பதால் கணவன் மனைவி கருத்து வேறு பாடுகள் வரலாம். கவனம் தேவை தொழிலில் லாபம் அதிகரிக்கும். கலைத்துறையில் உள்ளவர்கள் புதிய வாய்ப் புகளைப் பெறுவார்கள்.27, 28 தேதிகளில் சில நல்ல செய்திகள் கிடைக்கலாம்.25, 29, 30 ஆகிய தேதிகளில் கவனம் தேவை. எதிர்பாராத சிறு தடங்கல்கள் விபத்துக்கள் ஏற்படலாம்.உங்கள் நியாயத்தை பேசாமல் உறவுகளை விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இவ்வாரமும் உங்களுக்கு ஓர் சீரான வாரமே.
என்ன பரிகாரம்?
சுக்கிரனும் புதனும் அஷ்டமத்தில் இருப்பதால் பெருமாள் தாயார் சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அது பலனளிக்கும். மாலையில் விளக்கேற்றி வீட்டிலும் அலர்மேல் மங்கை சமேத ஏழு மலையானை தரிசனம் செய்யுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
