மார்கழி IV வாரம் ராசி பலன் – பகுதி – 1 Margazhi 2021 4 Week Raasi Palan Weekly Astrology Predictions – Part 1
(8.1.2022 முதல் 14.1.2022 வரை)
இவ்வார கிரகநிலைகள்:
ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, செவ்வாய். மகர ராசியில் சனி,புதன்.தனுசு ராசியில் சுக்கிரன்(வக்கிரம்),சூரியன்,கும்பத்தில் குரு.
மேஷம்
சாதகங்கள்:
சிறந்த முடிவுகளை எடுக்கும் தருணம் இந்த வாரம். புதன் சனி சேர்க்கை கடின உழைப்பையும், பலனையும் தரும். வியாபாரம் நல்லவிதமாக நடக்கும். அதிர்ஷ்டமும் செல்வாக்கும் கூடும். குடும்ப நிகழ்வுகள் சற்று சவால் நிறைந்ததாக இருக்கும்.சின்ன சின்ன வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.தடை தாமதம் விலகும். ஒன்பதில் சுக்கிரன் இருப்பதால் பணவரவு நன்றாக இருக்கும். அதற்கான முயற்சிகள் வெற்றி யடையும். குரு லாப ஸ்தானத்தில் இருப்பதால் தொழில் விருத்தி உண்டு. பூர்வ புண்ணிய பலன் கிட்டும். சொத்து தகராறுகள் முடி வுக்கு வரும். லாபம் அதிகரிக்கும். தரகு, கமிஷன்,ஏஜன்சி முதலிய துறைகள் நல்ல முன்னேற்றத்தைத் தரும். கலைஞர்களுக்கு யோகம் தரும் வாரமாக இருக்கும்.
கவனம் தேவை:
எட்டில் செவ்வாய் இருப்பதால், வீடு போன்ற விஷயங்களில் முதலீடு செய்வதில் சற்று எச்சரிக்கை வேண்டும். மனத்தை இளக் கமாக வைத்துக் கொள்ளுங்கள். திடீரென்று ஏற்படும் மன அழுத்தங் களை சமாளிக்க வேண்டியிருக்கும். கேது எட்டில் இருப்பதால் சற்று கவனத்துடன் இருங்கள் .குறிப்பாக பேச்சில் கவனம் தேவை. அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். அலைச்சலை குறைக்க வேண்டும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். 8,9,13,14 தேதிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.எல்லா விஷயங் களிலும் சற்று அதிக கவனம் தேவை.
பரிகாரம்:
அனுமன் சாலீசா பாராயணம் பலம் தரும்.

ரிஷபம்
சாதகங்கள்:
இவ்வாரம் நீங்கள் எதிர்பார்த்த பெரிய மாற்றங்கள் ஏற்படும். தொழில் நன்றாக நடக்கும். செவ்வாயும் 5-க்குடைய புதன் ஒன்பதில் இருப்பதால் புத்தி பூர்வமான எழுத்து, பேச்சு, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு லாபகரமாக இருக் கும். நான்காம் வீட்டை குரு பார்ப்பதால் வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நல்லிணக்கம் இருக்கும். இருப்பினும் ஏழில் உள்ள செவ்வாய் கேது சில நேரங்களில் சிறு விவகாரத்தை ஏற் படுத்தும். அதை அப்போதே நாம் கட்டுப்படுத்துவது நல்லது. 6ல் கேது வருவதால் வெற்றி தரும் சிந்தனைகள் தோன்றும். கலைத்துறையினர் மதிப்பு பெறுவார்கள்.
கவனம் தேவை :
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய தருணம் இது. “நான் மட்டுமே சரி, மற்றவர்கள் எல்லாம் தவறு” என்கிற மனப்பான்மை விட்டு விட்டால், உங்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும். படிப்பில் கவனம் தேவை. சிறு பிழைகள் உண்டாகும். கவனக் குறைவும் அவசரமும் பல காரியங்களை கெடுத்து விடும் என்பதால் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். உங்கள் திறமைகள் அதிகரித் திருந்தாலும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவது சற்று கடினம் தான். 10, 11, 12 தேதிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
பரிகாரம்:
மகாலட்சுமியை வணங்குங்கள். வெள்ளிக்கிழமை விரதம் வினை தீர்க்கும்.
மிதுனம்
சாதகங்கள்:
தொழில் துறையில் உள்ளவர்களுக்கு நன்மை நடக்கும். உத்தி யோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். 5 க்குரிய சுக்கிரன் 7ல் இருப்பதால் உங்கள் எண்ணங் களும் ஆசைகளும் நிறைவேறும். அரசு முறை பயணம் மேற் கொள்ள வேண்டிய வாய்ப்பு கிடைக்கும். பெரியோர் ஆசிகள் கிடைக்கும். எட்டில் சனி இருப்பதால் திடீர் பணவரவு உண்டாகும். செவ்வாய் 6-ல் இருப்பதால் மனதில் புதிய சிந்தனைகளும், தைரியமான திட்டங்களும், முன்னேறும் ஆசையும் உதயமாகும். சகோதர உதவிகள் கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கும் கோயில் களுக்கும் தரிசனம் செய்யும் வாய்ப்பு உண்டு.
கவனம் தேவை
கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். 12-ல் ராகு இருப்பதால் அலைச்சல் ஏற்படும். சில தவிர்க்க முடியாத தொல்லைகள் தருவார். எதிலும் நிதானத்துடன் இருந்தால், எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். சூரியன் ஏழில் இருப்பதால், கணவன் மனைவி உறவுகள் சற்று கவனக் குறைவாக இருந்தால் கருத்து வேறுபாடுகள் வந்துவிடும். ஆயினும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. சிலருக்கு இடமாற்றங்கள் உண்டு. 13 ,14 தேதிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
பரிகாரம்:
அன்னதானம் செய்பவர்களுக்கு ஏதேனும் நிதி உதவி செய்யுங்கள். பெருமாள் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்யுங்கள்.
கடகம்
சாதகங்கள்:
பணவரவு பெரிய பிரச்சனைகளை தராது. நீங்கள் பணத்தையோ மற்ற பொருள்களையோ யாருக்கும் இரவல் தராதீர்கள். குறிப்பாக உங்கள் வண்டி வாகனத்தை இரவல் தர வேண்டாம். ராகு 11-ல் இருப்பதால் நன்மைகளும் லாபமும் அதிகரிக்கும். செய்தொழில் நேர்த்தியாக செய்யும்பொழுது உங்களுக்கு பிரச்சினைகள் இருக்காது. கடவுள் பக்தி அதிகரிக்கக்கூடிய வாரம் இது. இருதய பிரச்சனை பிரச்சனை உள்ளவர்கள் அவசியம் மருத்துவரை அணுகி முன் யோசனையுடன் செயல்படுங்கள். சுக்கிரன் 6ல், இருப்பதால் பண வரவு உண்டு.மனைவி மூலம் ஆதாயம் இருக்கும். மனைவியின் பெயரில் செய்யக்கூடிய முதலீடுகளும் தொழிலும் லாபகரமாக இருக்கும்.
கவனம் தேவை:
ஆறில் சூரியன் இருப்பதால் குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் கோபம் இல்லாத நிலை ஏற்படுத்துங்கள். கருத்து வேறுபாடுகள் வருகின்ற பொழுது நிதானமாக அணுகி உடனடியாக சரி செய்து விடுங்கள்.ஷேர் மார்க்கெட்டிலும் இப்பொழுது நீங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டாம். வதந்திகளை நம்ப வேண்டாம். அதை பரப்பவும் வேண்டாம். திடீர் பயணம் ஏற்படும். உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். 8 ,9 தேதிகளில் கவனத்துடன் இருக்கவும்.
பரிகாரம்:
புதன்கிழமை பெருமாள் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழி படுங்கள்.
