சிம்மம்
சாதகங்கள் :
ஐந்தில் சூரியன் இருக்கிறார். அரசு தேர்வு எழுதுபவர்களுக்கும் எதிர் பார்ப்பவர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும். தொழில் யோகம் உண்டாகும். வேலை செய்பவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் இருக்கும். திருமண தாமதம் ஏற்பட்ட வர்களுக்கு வரன் அமையும். சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். குழந்தைகள் சந்தோஷமாக இருப்பார்கள். சொத்து பிரச்சினை நல்லபடியாக முடிந்து உங்கள் கைக்கு வந்து சேரும். புதிய தொழில்களில் கவனம் செலுத்துவீர்கள். ராசியை குரு பார்ப்பதால் சுப காரியங்கள் நடக்கும், வாரத்தின் பெரும் பகுதி சுப பலன் களாகவே இருக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிப்பதால் கோயில் குளங்களுக்கு சென்று வருவீர்கள்.
கவனம் தேவை:
மன அழுத்தம் வேண்டாம்.பெரிய எதிர்பார்ப்பு வைத்துக் கொள்ள வேண்டாம்.எதிலும் நம்பிக்கையுடன் இருங்கள்.வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கையோடு கையாளுங்கள். நட்பில் அவ்வப் போது சிறு உரசல்கள் வரும். 10 ,11, 12 தேதிகளில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்:
8.1.2022 காலை 12.15 முதல் 10.1.2022 காலை 8.49 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா காரியங்களிலும் கவனம் தேவை. இரவுப் பயணங்களை தவிர்க்கவும்.
பரிகாரம்
சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் சூரிய ஸ்தோத்திரம் பாருங்கள். பலன் உண்டு.
கன்னி
சாதகங்கள்:
10-ஆம் இடத்தை 5ம் பார்வையாக (திரிகோண சுப பார்வை) குரு பார்ப்பதால் உங்களுக்கு தொழில் விருத்தி அமைகின்ற வாரம் இது. குறிப்பாக அந்த இடம் புதனுடைய இடமாக இருப்பதால் பத்திரிக்கை துறை, எழுத்து, ஆசிரியர் மற்றும் ஆடிட்டர் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல சாதகமான பலன்கள் நடக்கும். 4ல் சூரியன் அமர்ந்திருப்பதால் அரசு உதவிகள் கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தரகு ஏஜென்ட் கமிஷன் முதலிய துறையில் உள்ளவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். வீட்டு விசேஷங்கள் நடக்கும். அதற்காக சிறு பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.சுகஸ்தானத்தில் சூரியனும், சுக்கிரனும் இணைந்திருக்கிறார்கள். இது சாதகமே. புண்ணியத் தலங்களுக்கும் கோயில்களுக்கும் செல்லும் வாய்ப்பு ஏற்படும். கலைத் தொழிலில் உள்ளவர்களுக்கும் அரசியலில் உள்ளவர்களுக்கும் ஆதாயமான வாரம் இது.
கவனம் தேவை
குரு 12 இல் பார்ப்பதால், சில தவிர்க்க முடியாத செலவுகள் ஏற் படும். பேச்சில் கவனம் தேவை. அக்கம் பக்கம் உள்ளவர்களோடு சுமுகமாக இருப்பதன் மூலமாக பல பிரச்சினைகளை சமாளிக் கலாம். 10, 11, 12 தேதிகளில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்:
10.1.2022 காலை 8.49 முதல் 12.1.2022 இரவு 8 45 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்துப் பேசுங்கள்.
பரிகாரம்
குலதெய்வத்தை நீங்கள் வணங்க வேண்டும் .புதன், சனிக் கிழமைகளில் பெருமாள் கோயில்களில் வழிபாடு செய்யவும்.

துலாம்
சாதகங்கள்:
பணியிட மாற்றம் இருக்கும். நிலம் வீடு ஆகியவற்றில் பணம் வருமானம் கிடைக்கும் .தகவல் தொழில் நுட்பத்தில் நல்ல ஆதாயம் இருக்கும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கடன்கள் வசூலாகும். கலை ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் .ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். நற்காரியங்கள், சுப காரியங்களில் பணம் செலவு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. நன்கொடைகள் தருவீர்கள். ராகு எட்டில் இருப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டு. மூன்றில் சூரியன் அற் புதமானது. மனோ பலமும், ஆத்ம பலமும் அதிகரிக்கும். அரசாங்க ஆதரவு கூடும். தந்தை வழி ஆதரவு வரும். தொழில் உத்தியோகம் முதலியவற்றில் சாதகமான திட்டங்களும் யோசனைகளும் பிறக்கும்.
கவனம் தேவை
கண்களில் பிரச்சினை ஏற்படும் என்பதால் கண்களை கவனத்துடன் பாதுகாப்பது நல்லது. 2-ல் கேது செவ்வாய் இருப்பதால் வாக்கில் கவனம் தேவை. 13, 14 தேதிகளில் கவனம் தேவை .
சந்திராஷ்டமம்:
12.1.2022 இரவு 8.45 முதல் 15.1.2022 காலை 9. 51 மணி வரை சந் திராஷ்டமம் உண்டு. எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். புதிய வேலைகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களில் ஜாக்கி ரதையாக இருக்கவும்.
பரிகாரம்
வியாழன் அன்று குரு தட்சிணாமூர்த்தி சுவாமி, ராகவேந்திரரை வணங்குங்கள்.
விருச்சிகம்
சாதகங்கள்:
சூரியன் இரண்டில் இருக்கிறார்.கூட விரயதிபதி சுக்கிரன் வக்கிர கதியில் இருக்கிறார். தந்தை மூலமாக அல்லது தந்தையின் உற வினர்கள் மூலமாக நல்ல ஆதாயம் கிடைக்கும். சொத்து சேர்க் கைகள் நடக்கும். வெளியூர் பயணங்கள் லாபகரமாக இருக்கும் . பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். திடீர் பணவரவு ஏற்படும். மனதில் தைரியம் தோன்றும் .கடவுள் பக்தி அதிகரிக்கும். நீண்ட காலமாக சந்திக்காத உறவினர்கள் சந்திப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்த அந்த சந்தர்ப்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.ராசிநாதன் செவ்வாய் ஆட்சி. தொழில் ஆதாயம் முதலியவை நன்மையாக ஏற்படும் அரசாங்க ஆதாயம் உண்டு. வீடு வாகன யோகம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும்..
கவனம் தேவை
வாக்குவன்மை அதிகரிக்கும். அதில் சற்று வேகமும் கம்பீரமும் இருக்கும். ஆயினும், தசாபுக்தி சரியில்லாதவர்களுக்கு அதுவே பிரச்சனையையும் கொடுக்கும்.நண்பர்களுடன் பழகுவதில் எச்ச ரிக்கை தேவை. செவ்வாயும் கேதுவும் இணைந்து இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் வரும். 8 ,9 தேதிகளில் கவனம் தேவை.
பரிகாரம்:
லட்சுமி நரசிம்மரை வணங்கவும்.

