தெய்வீக திங்கள் இதழ்
ஆலய தரிசனம் மார்ச் 2024
தனிப் பிரதி விலை ரூபாய் 20 ஆண்டு ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் எஸ் பூவராகன்,
சிறப்பாசிரியர் :எஸ் கோகுலாச்சாரி, துணை ஆசிரியர் முனைவர் ஸ்ரீ ராம் அச்சாக்கம் ஸ்ரீ பாலாஜி பிரிண்டர்ஸ் புவனகிரி
வாசகர்களுக்கு, வணக்கம். சுமார் 25 வருடங்களாக விடாமல் நடத்தி வந்த ஆலய தரிசனம் தெய்வீகத் திங்கள் இதழ் சில காலம் பல்வேறு காரணங்களால் வெளியிடப்படவில்லை. நடுவில் கொரோனா நோய் தாக்கம் இந்த தடையை மேலும் அதிகரிக்கச் செய்தது.
அதற்குப் பிறகு வெளியிடலாம் என்று நினைத்தும், பல்வேறு காரணங்களாலும், இன்றைய காலப்போக்காலும் மிக அதிகமான பொருள் செலவையும் தொடர்ந்து வெளியிடுவது என்பது மிகுந்த சிரமத்திற்குரியதாக இருந்தது.
ஒரு பக்கம் பொருளாதாரச் சிக்கல் என்றால் இன்னொரு பக்கம் தனி ஒருவனாக இருந்து கொண்டு ஒரு மாத இதழை நடத்துவது.
கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பது, அச்சு கோர்ப்பது ,அச்சடிப்பது, சேர்ப்பது என்று எல்லா வேலைகளையும் செய்யும் பொழுது மிகுந்த சிரமத்தைத் தருகிறது.
அதே சமயம் வாசகர்கள் பலரும் தொலைபேசியிலும் நேரிலும் ஆலய தரிசனம் ஏன் வெளிவரவில்லை என்று கேட்கும் பொழுது, பலர் ஆலய தரிசனத்தை நான் பல காலம் விடாமல் படிக்கின்றேன் என்று சொல்லும் பொழுதும் இதை எப்படியாவது நடத்தியாக வேண்டும் என்கின்ற ஆர்வமும் ஏற்படுகிறது.
எனவே, எப்பாடுபட்டாவது இதனை நடத்தி விட வேண்டும் என்று மறுபடி இந்த இதழை துவங்கி இருக்கின்றோம்.
இனி இது மாத மாதம் வெளிவரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
