திருமதி. இந்திரா பத்மநாபன் – Tmt. Indhira Padmanaban, Trichy
இரத்தினத்தின் மதிப்பை அறிந்தவன் அதை விலைக்கு விற்காமல் ஆபரணம் செய்து அணிந்து மகிழ்வான். அனுபவிப்பான்.இரத்தினமாகிய இறைவன் மோட்சம் தர வல்லவன் என்று அறிந்து கொள்பவன், தேனே பாலே கன்னலே அமுதே என்று தாமே அனுபவிப்பான்.

இரத்தினத்தை இழந்தவன் வருத்தப்பட்டு கதறி அழுவான் .அதைப்போலவே இறைவனை அனுபவிக்க முடியாது பக்தனும் கதறி அழுவான். அதற்கு உதாரணமாக இராமனைப் பிரிந்த பரதன், ராம ரத்தினத்தை இழந்து விட்டோமே என்று அவையில் கதறி அழுததைச் சிந்திக்க வேண்டும்.
இரத்தினத்தை உடையவனுக்கு ஒரு கர்வம் இருக்கும். எம்பெருமானை உள்ளத்தில் கொண்டவர்களும்,“இல்லை எனக்கு எதிர், இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே “என்று சாத்வீக கர்வத்தோடு இருப்பார்கள் .
இரத்தினம் உடையவனை உலகமக்கள் வந்து சூழ்ந்து ஆதரிப்பார்கள். எம்பெருமானை தஞ்சமாக அடைந்தவரை மக்கள் ஆஸ்ரயிப்பார்கள்.
நல்ல இரத்தினம் வாங்கவேண்டும் என்று சொன்னால், அதற்கு நிபுணரான ஒரு இடைத்தரகர் தேவை. ஒரு ஆசாரியரை முன்னிட்டுத் தான் பகவான் என்கின்ற இரத்தினத்தை அடைய முடியும்.

இரத்தினம் என்னதான் இரத்தினமாக இருந்தாலும், அதைத் தங்கத்திலோ , மற்ற நவமணிகளைச் சேர்க்கும் பொழுதோ தான் ஜொலிக்கும்.
எம்பெருமானும் அப்படியே. எம்பெருமான் என்கின்ற இரத்தினம், ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவாக்கில் புகுந்து புறப்படும் பொழுது ஜொலிப்பார். அவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருப்பதிகளில் பெருமாளுக்கு ஏற்றம் அதிகம்.
இரத்தினம் ஒளிவீசும். ஒளியை விட்டு எப்பொழுதும் விலகி இருக்காது. எம்பெருமானும் பிராட்டியை விட்டு எப்பொழுதும் பிரிந்து இருக்க மாட்டான்.
இரத்தினம் கடல், மலை இவற்றில் கிடைக்கும். எம்பெருமானும் திருப்பாற்கடல், திருமலை, சோலைமலை, என்று குடி கொள்கிறான்.
எத்தனை விலை உயர்ந்ததானாலும் இரத்தினத்தை ஒரு துண்டு, தலைப்பில் முடிந்து கொண்டு எடுத்துச் செல்லலாம். அவ்வளவு எளிமையாக இரத்தினத்தைக் கையாளலாம்.
எம்பெருமானும் அப்படியே.
நாம் தரிசிக்க வேண்டும் என்பதற்காகவே மிக எளிமையாக, அர்ச்சா ரூபி யக திவ்ய தேசங்களில் நமக்குக் காட்சி தருகின்றான். இரத்தினத்தை உடைய வர்கள் இழந்து விட்டால் என்ன செய்வது என்று கண்ணுறங்காமல் தவிப் பார்கள். எம்பெருமானாகிய இரத்தினத்தை பெற்றவரும், அடைவதற்கு முன்பும், அடைந்த பின்னும் தூங்க மாட்டார்கள்.
- ஹிந்து மதம் முரண்பாடுகள் உள்ள மதமா?

- ஸ்வாமி தேசிகன் உபதேசங்கள் Desikan Upadesangal – Sri.D.K.Srinivasan

- ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி

- ஸ்ரீமஹாவீர வைபவம் (vedantha Desikan’s Sri Raghuveera kathyam)

- ஸ்ரீ வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி விழா 2020 -2021

- ஸ்ரீ ரங்கநாதர் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொடுக்கும்விழா(4.2.2023 – சனிக்கிழமை

