 
       
			
	ஐப்பசி I வாரம் ராசி பலன் – பகுதி – 1 Aippasi 1 Week Raasi Palan Weekly Astrology Predictions – Part 1
(16.10.2021 முதல் 22.10.2021 வரை) Raasi – Palan – Astrology predictions for Zodiac Signs in Tamil – Aippasi 1 rd Week – October 2021
இவ்வார கிரகநிலைகள்:
ரிஷபத்தில் ராகு ,கன்னியில் செவ்வாய், புதன் (வக்ரம்), துலா ராசியில் சூரியன், விருச்சிகத்தில் சுக்கிரன் கேது,மகரத்தில் குரு, சனி (வக்கிர கதி)
மேஷம்
சாதகங்கள்:
ராசிநாதன் எட்டாம் பார்வையாக ராசியைப் பார்ப்பதால், ராசிக்கு வலிமை அதிகம். எதையும் சமாளித்து கொள்ளலாம் என்று மனம் துணிச்சலோடு இருக்கும். அலுவலகச் சூழலும் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். மேலதிகாரிகள் உங்கள் விருப்பத்திற்கு தடை சொல்ல மாட்டார்கள். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். அரசியல் உறவுகள் ஆதாயமாக இருக்கும் .சொந்த பந்தங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 16, 17 மற்றும் 21, 22 தேதிகளில் நல்ல செய்திகள் வரும். சுக்கிரன் எட்டில் இருப்பது நல்லது. தன ஸ்தானத்தை பார்ப்பதால் வருமானம் குறைவிருக்காது. பாக்கியாதிபதி தொழில்காரகனான சனியோடு இணைந்து இருக் கிறார். செயல் தடங்கல்கள் மாறும்.
கவனம் தேவை:
வார்த்தைகளில் சற்று இனிமை காட்டுங்கள். எதிலும் அஜாக்கிரதை, கோபம் வேண்டாம். தேக ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வரும். அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். சூரியன் நீச்சம். ஆத்ம பலம் குறைவது போல் இருக்கும் . அஷ்டம சுக்கிரன் கேது சேர்க்கையால் மனக்குழப்பங்கள் வரும். 18 மற்றும் 20ம் தேதிகளில் கவனம் தேவை.
பரிகாரம்:
முருகன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்யுங்கள். சிவப்பு நிறப் பூவை சாற்றுங்கள். குரு அல்லது உங்களுக்கு பிடித்த மகானை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.எதையும் சமாளிக் கலாம்.
———————————————————————————————————-

ரிஷபம்
சாதகங்கள்:
சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார்.ராசி பலம் கூடுகிறது. அதனால் செயல்களில் ஊக்கம் பிறக்கும்.தாமதம் விலகும்.ராசியில் இருக்கும் ராகுவின் வீரியம் குறையும்.தொழில் வருமானம் அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள் . வீட் டில் நல்ல சுப நிகழ்வுகள் நடக்கும். 16 முதல் 20 ஆம் தேதி வரை சாதகமான நாட்கள்.அனுகூலங்கள் உண்டு.
கவனம் தேவை :
மூத்த சகோதரர்கள் அல்லது வீட்டில் பெரியவர்கள் உடல்நலம் பாதிப்படையலாம். பெரும் முதலீடுகள் இப்போது வேண்டாம். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நரம்பில் உபாதைகள் வரலாம். 21, 22 தேதிகளில் மிகுந்த கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும். சுக்கிரன் கேதுவுடன் இருப்பது நல்லது அல்ல. சிறு சிறு பிரச்சனைகள் கணவன்-மனைவிக்குள் வரும். கவனம் செலுத்தவும்.
பரிகாரம்:
பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். சனிக்கிழமை அன்று துளசி மாலை சாற்றி அர்ச்சனை செய்யுங்கள்.துன்பங்கள் விலகும்.
———————————————————————————————
மிதுனம்
சாதகங்கள்:
ராசியாதிபதி புதன் கேந்திரத்தில் ஆட்சியாக இருக்கிறார். வீடு-மனை யோகம் சிறக்கும். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழில் வருமானம் அதிகரிக்கும். அரசு ஒப்பந்தங்கள் மற்றும் உதவிகள் கிடைக்கும். பெரியோர் ஆசிர்வாதத்தைப் பெறுவீர்கள். 18ம் தேதி முதல் வார முடிவு வரை பெரும்பாலும் உங்களுக்குச் சாதகமான நாட்களே. புதிய ஒப்பந்தங்கள், வேலை வாய்ப்புகள் சாதகமாகும். குரு தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் பணவரவு கிடைக் கும். சனி ஆட்சி என்பதால் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும் .
கவனம் தேவை
எதிலும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தலையிலும் முதுகிலும் சிறு பிரச்சனைகள் வரலாம். பயணங்களில் எச்சரிக்கை தேவை. தொழில் மாறும் சிந்தனை உண்டாகும். 21 மற்றும் 22ம் தேதிகளில் சற்று கவனமுடன் செயலாற்றுங்கள். சிறு ஏமாற்றம் வரும்.பல கிரகங்கள் சாதகம் இல்லாத நிலையில் இருப்பதால் எச்சரிக்கையோடு இருங்கள் .
பரிகாரம்:
பைரவர் வழிபாடு நலம் தரும்.அஷ்டமி அன்று பைரவரை வழிபட மங்களங்கள் சேரும்.
———————————————————————————————
கடகம்
சாதகங்கள்:
குரு ஜென்ம ராசியைப் பார்ப்பது ஒரு சிறப்பு. அவர் பாக்கியாதிபதி அல்லவா. உங்கள் திட்டங்களில் சில சாதகமான நிலைக்கு அவர் நகர்த்திக்கொண்டு செல்வார். உங்கள் செல்வாக்கும் உயரும். சகோதர ஆதரவு உண்டு. வருமானம் நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்று . நினைத்த காரியம் நினைத்தபடி முடியும்.21 , 22 தேதிகளில் உங்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கும். மற்ற நாட்கள் அவ்வளவு சாதகமான நாட்கள் அல்ல .திருமணம் போன்ற சுப காரிய ஏற்பாடுகள் சிறப்பாக நடக்கும். 5ல் சுக்கிரன் இருப்பதால் கணவன் மனைவி கருத்து ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும்..
கவனம் தேவை:
பங்கு வர்த்தகத்தில் அதிக ஆர்வம் வேண்டாம். இழப்பு ஏற்படும்.அடி வயிற்றில் உபாதைகள் ஏற்படும். நேரத்துக்கு உணவு சாப்பிடுங்கள். தேவையற்ற கவலைகளைத் தவிருங்கள். அதிவேகப் பயணம் ஆபத்தில் முடியும்.கவனமாக வண்டி ஓட்டுங்கள்.
சந்திராஷ்டமம்
15.10.21 இரவு 9 மணி முதல் 18.10.21 காலை 4.32 வரை . சந்திராஷ்டம காலத்தில் எதிலும் கவனமுடன் இருங்கள். புதிய திட்டங்கள் இப்போதைக்கு வேண்டாம்.
பரிகாரம்:
பௌர்ணமி பூஜை பலன் தரும். சத்ய நாராயணரை வணங்குங்கள் சகலமும் நலமாகும் .

- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர் 
- தேரழுந்தூர் தேவாதிராஜன் Therazendur Devadhirajan 
- கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் கலி வடிவமா? 
- தினமும் எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi Daily ? 
- கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி – Kannadasan – Krishna Bhakthi 
- செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சென்ற ஆண்டு நடந்தவை 

 
                    	                    