
மார்கழி IV வாரம் ராசி பலன் – பகுதி – 3 Margazhi 2021 4 Week Raasi Palan Weekly Astrology Predictions – Part 3
தனுசு
சாதகங்கள் :
ஆளுமை அதிகரிக்கும். அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பணிச் சுமை சற்று அதிகரிக்கும். அரசு மூலம் லாபமடைவீர்கள். இட மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது . குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். குழந்தை பிறப்பு எதிர்பார்த்திருக்க, சாதகமான வாய்ப்பு உண்டு. பூர்வீகச் சொத்தில் இருந்த தடைகள் நீங்கும். குறுகிய காலத்தில் பதவி உயர்வு உங்களைத் தேடி வரும் .பெண்கள் குடும்பத்தில் அனுசரணையோடு நடந்துகொள்வார்கள். இரண்டில் சனி ஆட்சி. மனைவி மூலம் ஆதாயம் உண்டு. தனகாரகன் குரு வீட்டில் சுக்கிரன் இருக்கிறார் வீடு வாகன யோகங்கள் உறவினர்கள் நண் பர்களால் ஆதாயம் முதலியவை உண்டு.
கவனம் தேவை:
பேச்சில் கவனம் தேவை. யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம் .செலவுகளை யோசித்துச் செய்வது நல்லது. 8, 9 தேதிகளில் கவனம் தேவை.
பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள். சனிக்கிழமை அனுமன் ஆலயம் செல்லுங்கள் .
மகரம்
சாதகங்கள்:
தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும் .வீட்டில் மனநிறைவோடு வாழ்வீர்கள். மருத்துவச் செலவுகள் கட்டுக்கடங்கியிருக்கும். குடும்ப குதூகலம் உண்டு. உறவினர்கள் உங்களை மதிப்புடன் பார்ப்பார்கள். புதிய நட்புகளும் உறவுகளும் கிடைக்கும். ஊதிய உயர்வு எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இவ்வாரம் ஊதிய உயர்வு கிடைப் பதற்கான ஒரு வாய்ப்பு உண்டு. குழப்பமான எண்ணங்கள் மறையும். தோற்றப்பொலிவு கூடும் அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவார்கள் .கலைத்துறையில் இருப்பவர்க்கு வாய்ப்பு அதி கரிக்கும். நட்புகள் கைகொடுக்கும். இவ்வாரம் புண்ணியத் தலங்கள், யாத்திரைகள், கோயில்கள் செல்லும் வாய்ப்பு ஏற்படும். செவ்வாய் வலுவாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ள முடியும். நிலம் முதலிய விஷயங்கள் சுமுகமாகி பத்திரப் பதிவு முடிந்துவிடும்.
கவனம் தேவை
நீங்களே நேரடியாக இறங்கி காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் காரியம் பழுதாகும். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள். இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். பேச்சுக்களில் எச்சரிக்கை தேவை. 13, 14 தேதிகளில் கவனம் தேவை.
பரிகாரம்
குலதெய்வத்தை வழிபடுங்கள். அனைத்தும் நன்மையாகும்.
கும்பம்
சாதகங்கள்:
7க் குடைய சூரியன் 11-ல் குரு வீட்டில் இருக்கிறார். செவ்வாய் தொழில் முயற்சியை வெற்றியடையச் செய்யும்.சகோதர சகோ தரிகளால் அனுகூலம் உண்டு. புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த தகராறு நீங்கும். உடல் நலம் மேம்படும். அரசாங்க உதவி கிடைக்கும். உங்கள் நெடுநாள் ஆசை ஒன்று பூர்த்தியாகும் . அரசியல் மேலிட ஆதரவு உண்டு. கலைத் துறை யினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தர்ம காரியத்தில் நீங்கள் செலவு செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு. மனைவி மூலம் ஆதாயம் உண்டு. கணவன் மனைவி உறவு அன்பு கொண்டதாக இருக்கும். சுக்கிரனுடைய சஞ்சாரத்தினால் பணவரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகளையும் செய்யக்கூடிய வாய்ப்பும் ஏற்படும்.
கவனம் தேவை
வாகன பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். எதையும் ஒரு தரத்திற்கு இரண்டு தரம் யோசித்துச் செய்யுங்கள். கூட்டுத்தொழிலில் எச்சரிக்கை தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விரயத்தை கட்டுப்படுத்துங்கள். 13, 14 தேதிகளில் கவனம் தேவை.
பரிகாரம்:
கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.
மீனம்
சாதகங்கள்:
புதிய பொறுப்பு கிடைக்கும். சம்பள உயர்வு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த சலுகை இவ்வாரம் கிடைப்பதற்கான வாய்ப்பு பிர காசமாக இருக்கிறது. புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எதிரி களின் பலம் குறையும். மனதில் இருந்த அழுத்தங்கள் அகன்று மனதில் சந்தோஷங்கள் நிலவும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். சீரான வருமானம் இருக்கும். மேலதிகாரிகள் உங்கள் மீது அன்பு செலுத்துவார்கள். உங்கள் செயல்களை பாராட்டுவார்கள். அரசியல் வாதிகளுக்கும் ஓரளவு இந்த வாரம் சாதகமான பலன்களே நடக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டு. ராசிநாதன் 12ல் , சுப விரயங்கள் ஏற்படலாம். சூரியன், தனுசு ராசியில் இருப் பதால், அரசாங்கம் ஒப்பந்தம் வேலை போன்ற ஆதாயங்கள் உண்டு. பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாக முடியும்.
கவனம் தேவை
கடன் கொடுக்கும் போது உஷாராக இருக்க வேண்டும். வண்டியை அதிக வேகத்தோடு ஓட்ட வேண்டாம். வீண் அலைச்சலை குறைத் துக் கொள்ளவும். 10, 11, 12 தேதிகளில் கவனம் தேவை.
பரிகாரம்:
குலதெய்வத்தை வணங்குங்கள்.

