எந்த ஒரு விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொண்டால் தான் அந்த விஷயத்தை நாம் எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்து கொள்ள முடியும். நாம் அந்த விஷயத்தில் கரை கண்டவராக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் அடிப்படையில் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒரு கடையில் பொருள் வாங்குகின்றோம் என்று சொன்னால், நாம் பொருளைத் தயாரிப்பவர்களாகவும், விற்பவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அந்தப் பொருளின் செயல் பாட்டையும் தரத்தையும் ஓரளவாவது நாம் தெரிந்து கொண்டால் தான், சரியான பொருள்களை, சரியான இடத்தில்,சரியான விலையில் வாங்க முடியும்.
சாத்திரங்களைக் குறித்த விஷயங்களும் அப்படித்தான். ஒரு திருமணம் நடக்கிறது. அந்தத் திருமணத்தில் பல சடங்குகள் செய்யப்படுகின்றன. மந்திரங்கள் ஒதப்படுகின்றன.. நாம் மந்திரங்களையோ சடங்குகளையோ முழுமையாக கரைத்து குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை .ஆனால் இந்தச் சடங்குகள் ஏன் நடத்தப்படுகின்றன? இந்த மந்திரத்தில் என்ன இருக்கிறது? என்பதை ஓரளவுக்குத் தெரிந்து கொண்டால் அதனு டைய பயன்பாட்டை நாம் தெரிந்து கொண்டு , முழு மனதோடு ஈடுபட்டுச் செய்ய முடியும்.அதனால் நமக்கு நற்பலன்கள் விளையும்.
ஜோதிட சாஸ்திரமும் அப்படித்தான். வாஸ்து சாஸ்திரமும் அப்படித்தான். மருத்துவச் சாஸ்திரமும் அப்படித்தான். மற்ற சாஸ்திரங்களும் அப்படித் தான். இப்படி இந்த சாஸ்திர அடிப்படையை நாம் புரிந்து கொள்ளா விட்டால்,பல நேரத்தில் தவறான முடிவுக்கு வந்து விடுவோம். அதன் அடிப்படையில் தான் சென்ற இதழில் ஆயுளைப் பற்றி (மிக முக்கிய மான, சில அசாதாரணமான நேரங்களில் தவிர) அதிகம் கேட்காதீர்கள் என்று சொல்லி இருந்தேன். ஒரு சின்ன உதாரணத்தைச் சொல்லு கின்றேன். 46 ஆண்டு களுக்கு முன்னால் நடந்தது இது.
ஒரு உறவினர் வீட்டில் ஒரு நண்பர் ஜோதிடம் பார்க்க வந்திருந்தார். அப் பொழுதெல்லாம் வீட்டிற்கு வந்து ஜோதிடம் பார்ப்பார்கள். காலையில் வந்து விட்டால், வீட்டில் உள்ள அத்தனை பேர் ஜாதகங்களையும் ஒன்றுக்கு பின் ஒன்றாகக் காட்டுவார்கள். ஜோதிடருக்கு அங்கேயே காபி டிபன் சாப்பாடு நடக்கும். சமயத்தில் ஜோதிடர் வந்ததைத் தெரிந்து கொண்டு பக்கத்து வீடு, எதிர் வீட்டுக்காரர்கள் கூட வந்து காட்டுவார்கள்.எல்லாம் முடித்த பிறகு போகும் போது அவரவர்கள் சக்திக்கேற்ற தட்சிணையைத் தருவார்கள்.
இப்படித்தான் அந்த ஜோதிடர் வந்தார். முதலில் ஒன்று இரண்டு ஜாதங்களை பார்த்தார். கடைசியில் அவர்களுடைய சிறிய பையனின் ஜாதகத்தைப் பார்த்தார். பார்த்துவிட்டு ஆயுள் கண்டம் இருக்கிறது. ஆயுள் தோஷம் இருக் கிறது என்று பெரிய குண்டை தூக்கிப் போட்டார். சுற்றிலும் இருக்கக்கூடிய பெண்மணிகள் பேயறைந்தது போல் ஆகிவிட்டனர். ஏன் அப்படி சொல்கிறார்? என்பதை யாரும் கேட்கவில்லை. அவர் சொன்னதில் ஒன்று இரண்டு நடந்து இருப்பதினால் இதுவும் நடக்கும் என்பது மனதளவில் அவர்களுக்கு உறுதியாகி விட்டது.
ஜோதிடர் காசு வாங்கிக்கொண்டு போய்விட்டார். பையனின் அப்பாவுக்கு இது தெரியாது. ஆனால் அம்மாவும் சகோதரிகளும் மிகவும் நொந்து போய் விட் டனர். பல நாட்கள் நடைபிணமாகி மாறி கஷ்டப்பட்டனர். அந்த குடும் பத்தின் சந்தோஷமே போய்விட்டது. இதைத் தெரிந்து கொண்ட பெரி யவர் ஒருவர் அந்த அம்மாவுக்கு அப்பொழுது சொன்ன ஆறுதல் என் னுடைய நினைவில் இன்றும் இருக்கிறது.
“இப்பொழுது மெனக்கிட்டு பையனின் ஆயுளைத் தெரிந்து கொள்வதில் என்ன உங்களுக்கு வந்தது?சரி,. ஒன்று நடக்கும் என்று சொன்னால், நீங் களும் நானும் மாற்றி விட முடியுமா என்ன?. எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதானே. அதை நினைத்து ஏன் துக்கப்பட வேண்டும்? சரி சரி. கோவிலுக்குப் போய் ஒரு விளக்கு போட்டு அர்ச்சனை செய்து வாருங்கள் ஒரு தோஷமும் வராது என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
ஒரு தோஷமும் வரவில்லை.அந்தப் பையன் சகல வசதிகளோடு இன் றைக்கும் சௌக்கியமாக இருக்கிறார். அதற்கு பிறகு தான் இந்த ஜோதி டத்தில் என்னதான் இருக்கிறது என்பதை நானே கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அதில் பலிப்பதற்கான சதவீதம் எத்தனை சதவீதம் ?பலிக் காமல் இருப்பதற்கான சதவீதம் எத்தனை சதவீதம் என்பதையும் ஓரளவு கவனிக்க முடிந்தது. என்னுடைய இன்னொரு நண்பர் ஒருவர். சிறந்த ஜோதிடர் என்பதை விட நல்ல ஜோதிடர்.
அவர் கோயம்புத்தூரில் வாசியோகம் பயின்ற மகரிஷியிடம் பயிற்சி பெற்றவர். ஜோதிட சிந்தாமணியில் அவருடைய கட்டுரைகள் வரும். அவர் ஜோதிடம் சொல்வதைப் பற்றி ஒரு குறிப்பு கொடுப்பார்.
“இதோ பாருங்கள். கணக்கு பலமாக இருந்தால் மட்டும் ஜோதிடம் பலித்து விடாது. சொல்பவன் வாக்கும் பலமாக இருக்க வேண்டும். அந்த வாக்கும் எல்லா நேரத்திலும் பலமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே தான் நான் சில தீமையான விஷயங்கள் நடப்பதாக மனதில் படுகின்ற பொழுது, அதை பக்குவமாக, “இப்படிகண்டங்கள் இருக்கிறது, காலம் கொஞ்சம் சரியாக இல்லை. வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யாதீர்கள் .ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மருந்து மாத்திரைகளை ஒழுங் காகச் சாப்பிடுங்கள். இந்தக் காலம் போகட்டும். அதற்குப் பிறகு எல்லாம் சரியாகி விடும். பொறுமையும் ,நம்பிக்கையும் அவசியம் என்று ஆறுத லாகச் சொல்வேன். என்னதான் உண்மை என்று நம் மனத்துக்கு பட் டாலும், அந்தத் தீமை நடந்தே தீரும் என்று உறுதியாக சொல்லக்கூடாது. உறுதியாகச் சொல்லா விட்டால் அவர் சரியான ஜோதிடர் இல்லை என்று சொன்னாலும் கூட நம்முடைய வாக்கு ஜெயிப்பது இங்கே முக்கியமல்ல. ஜோதிடம் பார்க்க வந்தவனுடைய வாழ்க்கை ஜெயிக்க வேண்டும்.அதற்குத்தான் இந்த ஜோதிடம். சாஸ்திரத்தில் ஏதாவது ஒரு முறை இருந்தால் அதை எடுத்துச் சொல்லி அவரை வெற்றிகரமாக மாற்றுவதற்கு உதவுங்கள்” என்பார்.
நம் சிற்றறிவை விட,பிரபஞ்சம் பெரியது. அதன் நுட்பத்தில் சிறு துளி தெரிந்து கொண்டுதான் நாம் சொல்கிறோம் .செயல்படுத்துகிறோம். பிரபஞ்சம் எல்லா நேரத்திலும் உண்மையை உள்ளபடி உரைத்து விடாது. படைக்கப்பட்ட கிரகங்களை விட படைத்த இறைவன் பெரியவன்.
விதியைத் தெரிந்து கொண்டாலும் மதியை நம்புங்கள். ஆரோக்கி யமானஎண்ணங்களுடனும்,நல்லசிந்தனைகளுடனும்,செயல்படுங்கள்.பல நேரங்களில் விதி உங்களிடம் தோற்பதில் சந்தோஷமடையும்.
இந்த அடிப்படையை எல்லாம் ஜோதிடம் பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கிரக வலிமையின் மூலம் ஆயுள் தோஷத்தை தெரிந்து கொண்ட மார்க் கண்டேயன், அதை மாற்றும் வழி திருக்கடையூரில் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு சிவபெருமானுடைய காலடியை பிடித்து ,கால தேவனின் பாசக் கயிறிலிருந்து தப்பித்தான்.
சுவேதன் என்னும் மன்னன், கிரகங்களை விட, கிரகங்களைப் படைத்த பெருமாள் வல்லவர் என்பதைத் தெரிந்து கொண்டு திருவெள்ளக் குளத் தில் சுவேத புஷ்கரணியில் தவம் செய்து ஆயுளை வளர்த்துக் கொண் டான். விதியை எதிர்கொள்ளவே மதி .
சமீபத்தில் என்னிடம் ஒரு ஜாதகம் வந்தது. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அவர்கள் சேருவார்களா மாட்டார்களா என்ன செய்ய வேண்டும். நான் ஜாதக ஆலோசனை மட்டும் சொல்லவில்லை கொஞ்சம் உளவியலையும் கலந்தே சொன்னேன் இங்கே உளவியல் என்பதும் ஜாதகம் தான் அது சந்திரன் சம்பந்தப்பட்டது. விதியை வெல்வதற்கான சில வழிகள் மதி இடம் உண்டு. நான் அவர்களிடம் சொன்னேன் அவர்கள் இருவரும் இடைவதற்கான சில சாத்திய கூறுகளும் ஜாதகத்தில் உள்ளது என்பதால் நீங்கள் முயற்சி செய்யுங்கள் காலம் என்பது சில தவறான கண்ணோட்டங்களை மாற்றும் என்று சொன்னேன் அப்பொழுது நான் பார்த்த ஜோதிடர்கள் சேருவதற்கு வழியே இல்லை என்று சொன்னார்களே என்று கேட்டார் அப்போது நான் சொன்னேன். ஒரு நோயாளி பிழைக்கவே மாட்டார் என்று எந்த டாக்டரும் சொல்வது கிடையாது அது அவருக்கு தெரிந்திருந்தாலும் கூட. பத்து சதவீதம் பிழைப்பதற்கான வழி இருந்தாலும் கூட ஒரு நல்ல மருத்துவம் பார்த்து பிழைக்க வைக்க முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்ட ஒரு பத்து சதவீத வாய்ப்புகள் இந்த ஜாதகத்தில் உள்ளது என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன். நாம் முழு மனதோடு இந்த பத்து சதவீத வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சமாதானத்தில் ஈடுபடும் பொழுது மீதி இருக்கக்கூடிய 90% எதிர்மறைகளும் மாறி இந்த 10 சதவீதத்தில் சேர்ந்து கொண்டு உங்களுக்கு வெற்றியை தரலாம். தந்துவிடும் என்று சொல்லவில்லை தரலாம் என்று தான் சொன்னேன். மரணத்தின் எல்லை வரை சென்ற பல நோயாளிகள் கடுமையாக போராடி பிழைத்து வந்த கதை நமக்குத் தெரியும். ஜோதிடத்தில் வெற்றிகரமாக வாழக்கூடிய வாய்ப்புகள் எங்கேயாவது புதைந்திருந்தாலும் அதை பிடித்துக் கொண்டு மேலே வர வேண்டும் அதைத்தான் ஜோதிட சாஸ்திரம் சொல்ல வேண்டும். அந்த முயற்சி வழிக்காமல் போகலாம் அது இறைவன் திருவுள்ளம் என்று எடுத்துக் கொண்டு போக வேண்டும். மருத்துவர் முயற்சி வழிக்காவிட்டால் யாரும் மருத்துவரை குறை கூறுவது கிடையாது. அப்படியானால் நாம் அதை பற்றி அடிப்படையை தெரிந்து கொள்கிறோம் என்று பொருள். அதேதான் ஜோதிட சாஸ்திரத்திலும். நல்ல விஷயங்களை சொல்லுகிறார்களா உற்சாகமாக செயல்பட்டு அதை வெற்றிகரமாக மாற்ற முயலுங்கள். கொஞ்சம் தீமையான விஷயங்களை சொல்லுகின்றார்களா? அதை மிகவும் எச்சரிக்கையுடன் எதிர்கொண்டு அதை வெற்றி கொள்ளவோ சமாளிக்கவோ கடந்து விடவோ பாருங்கள் ஜோதிடத்தின் அடிப்படையை வரளவாவது நீங்கள் புரிந்து கொண்டு அதனுடைய எல்லையை தெரிந்து கொண்டால் தான் அதை சரியாக உங்களால் பயன்படுத்த முடியும்.
