புரட்டாசி III வாரம் ராசி பலன் – பகுதி – 1 Purattasi 3 Week Raasi Palan Weekly Astrology Predictions – Part 1
(29.9.2021 முதல் 8.10.2021 வரை) Raasi – Palan – Astrology predictions for Zodiac Signs in Tamil – Purataasi 3 rd Week – October 2021
இவ்வார கிரகநிலைகள்:
ரிஷபத்தில் ராகு, கன்னியில் சூரியன் செவ்வாய், புதன் வக்ரம் பெற்று தனது ராசியில் ஆட்சி அடைகிறார். துலாத்தில் சுக்கிரன்,விருச்சிகத்தில் கேது, மகரத்தில் குரு மற்றும் சனி வக்கிர நிலையில் இருக்கிறார்கள்.
மேஷம்
சாதகங்கள்:
சூரியன் செவ்வாய் 6ல் . இது நல்ல அமைப்பு. நம் மன விருப்ப த்தைப் பூர்த்தி செய்யும். நல்ல மன தைரியம் தரும். பிரச்சனை சமாளிக்கும் மன நிலையும், தெளிவும் கிடைக்கும். நிம்மதியான தூக்கம் வரும். பொருளாதாரம் சீர்படும். ஓரளவு சேமிப்பும் இருக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். ஏழில் சுக்கிரன் ஆட்சி என்பதால் கண வன், மனைவி, வேலை போன்றவற்றில் சுமுக சூழல் நிலவும். செவ்வாய் சூரியனோடு இணைந்து இருப்பது ஆரோக்கியம், வெற்றி முதலியவற்றைக் காட்டுகிறது. பாக்கியாதிபதி குரு 10ல் தொழில் காரகனான சனியோடு இணைந்து நீசபங்கம் பெற்று இருக்கிறார். யோகம் செயல்படத் தொடங்கும். செயல் தடங்கல்கள் மாறும். குடும்பச் சிக்கல்கள் விலகும். அரசியல் செல்வாக்கு கூடும்.
கவனம் தேவை:
பத்தில் குரு வக்ரம் பெற்றிருப்பதால் சில பிரயாணங்கள் விருப்ப மில்லாத செயல்கள் செய்வதற்கு நிர்ப்பந்தடுத்தப்படுவார்கள். 2,3,4 தேதிகளில் எதிலும் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். எதையும் யோசித்து பேசுங்கள். செய்யுங்கள். சமாளித்துவிடலாம்.
பரிகாரம்:
வேலவனை நினைத்து வேண்டியது கேளுங்கள். முருகப் பெரு மானைப் பற்றுங்கள். வேல்விருத்தம் படிக்க வினைகள் ஓடும். வெற்றி கிடைக்கும்.
————————————————————————————————–
ரிஷபம்
சாதகங்கள்:
ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் பல எதிர்மறை விளைவுகள் நேர்மறையாகும்.மன அழுத்தங்கள் இருப்பினும் ஒரு தைரியம் கிடைக்கும். ஆறில் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் வெற்றி கிடைக்கும். மனைவியுடன் சிறு உரசல்கள் வரும். குரு பகவானால் சில பெரியோர்களின் ஆசிகள் கிடைக்க, அது ஒன்றே இவ் வாரத்தின் பல பிரச்சனைகளை மறைமுகமாக தீர்க்கும். 3,4,5 தேதிகள் நல்ல பலன்களை அளிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டு .இட மாற்ற அனுகூலங்கள் உண்டு.கணவன் மனைவி உறவு கசப்பின்றி இருக்கும்.
கவனம் தேவை :
பல பிரச்சனைகள் வந்தாலும் நீரு பூத்த நெருப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மிக மிக முக்கியம். பல வழிகளிலும் வரும். பணம் உங்களை அறியாமலேயே செலவழியும். பணத்தைக் கையாளுவதில் கோட்டை விட்டுவிட்டு அவஸ்தைப்பட வேண்டாம். உறவும் நட்பும் பகை கொள்ளத் துடிக்கும் தொழிலிலும் சில எதிர் பாராத தடங் கல்கள் வருவதால் முன்யோசனையுடன் செயல்படுங்கள்.
பரிகாரம்:
வேல் விருத்தம், மயில் விருத்தம், கந்த சஷ்டி கவசம் பாராயணம் பலன் தரும் .ஸ்ரீராமஜெயம் எழுதுவதும், மாலை நேரம் விளக்கு வைத்து ஓரிரு நிமிடம் ஸ்ரீராமஜெயம் சொல்வதும் மிகுந்த பலனளிக்கும்.

————————————————————————————————–
மிதுனம்
சாதகங்கள்:
ராசிநாதன் கேந்திரத்தில் அமர்ந்து இருக்கிறார். சூரியன் செவ்வாய் இணைந்து தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பது அருமை. சூரியன் பார்ப்பதால் அரசாங்க ஆதரவு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வேலை வாய்ப்புகள் சாதகமாகும். குரு தன ஸ்தானத்தைப் பார்ப் பதால் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எட்டுக்குரிய சனி எட்டில் ஆட்சி என்பதால் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும் .சில எதிர் பாராத வரவுகளும் கிடைக்கும்.
கவனம் தேவை
சனியின் பார்வையால் தொழிலகங்களில் இனம்புரியாத நெருக்கடி நிலவும். ஆயினும் சமாளிப்பீர்கள். காரணம், ராசிநாதன் ஆட்சியாக இருக்கிறார். உங்கள் பழைய பாக்கிகளும் வசூலாவதில் தாமதம் நிகழும். உத்தியோக உயர்வுகள் தள்ளிப்போகும். கலைத் துறை யினருக்கு வாய்ப்புகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப் பதில் ஏமாற்றம் நிகழும். 6 ,7 தேதிகளில் உடல்நிலையில் கவனம் தேவை. ஏற்படும்.
பரிகாரம்:
மாலை நேரம் பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். வியாழக் கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். இல்லாதவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.உங்களுக்குப் பிடித்த இறைவன் நாமத்தை தொடர்ந்து மனதில் உச்சரித்து வாருங்கள். தொல்லைகள் நீங்கும்.
————————————————————————————————–
கடகம்
சாதகங்கள்:
சந்திரனின் சஞ்சாரத்தினால் 2, 6, 7 தேதிகளில் மன உற்சாகத்தோடு இருப்பீர்கள். தன வரவுகள் உண்டு. இதை 3 இல் உள்ள சூரியனும் செவ்வாயும் உறுதி செய்கிறார்கள். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் தைரியத்தையும் ஆற்றலையும் தரும். பெரியவர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். அதே நேரம் சனி, ராசியைப் பார்ப்பதால் தடங்கல் செய்யவும் சிலர் இருப்பார்கள். வருமானம் நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்று .
.கவனம் தேவை:
இவ்வாரம் அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் சற்று ஆரோக்கியக் குறைபாடு ஏற்படலாம். ஆனால் சீக்கிரம் குணமாகி விடும். 3, 4, 5, 8 தேதிகளில் மிகுந்த கவனம் தேவை. கணவன் மனைவி உறவுகளில் விட்டுக் கொடுக்கும் தன்மையால் சிக்கல்கள் வராமல் பார்த்துக் கொள்வது நன்று. குழந்தைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்:
மாலையில் விளக்கேற்றி மகாலட்சுமியை வணங்குங்கள். இயன்றால் சக்தி வாய்ந்த சுந்தரகாண்டத்தை பாராயணம் செய் யுங்கள் .தினம் சிறிது படிக்கலா.ம் கடக ராசியில் அவதரித்த ஸ்ரீ ராமரின் அருளால் சகல நன்மைகளும் கிடைக்கும்.வினைகள் தீரும்.

- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்

- அலகிலா விளையாட்டு – Alagila Vilayattu

- வடநாட்டு திவ்ய தேச புனிதப் பயண அனுபவம்

- வராக அவதாரம் ஏன் சிறப்புடையது? ஸத்ஸங்கம் கேள்வி – பதில்

- ஸ்வாமி தேசிகன் உபதேசங்கள் Desikan Upadesangal – Sri.D.K.Srinivasan

- சிறுநீரகங்களை பாதுகாப்போம்! Protect your Kidney – Dr K Sampathkumar

