தனுசு
சாதகங்கள் :
5, 12 க்கு உரிய செவ்வாய் சுக்கிரனோடு இணைந்த நிலை அருமை. எதிர்பாராத சில வாய்ப்புக்கள் அறிமுகங்கள் கிடைக்கும். சிறு பிரயாணங்கள் ஏற்படும். செயலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தந்தையின் வழி உதவிகள் கிடைக்கும். அரசாங்க கடன் உதவிகள் உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். 23 ,27 தேதிகள் நல்லது. ஆளுமை அதிகரிக்கும். அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பணிச் சுமை சற்று அதிகரிக்கும். அரசு மூலம் லாபமடைவீர்கள். இரண்டில் சனி ஆட்சி. இட மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது . பூர்வீகச் சொத்தில் இருந்த தடைகள் நீங்கும். பெண்கள் குடும்பத்தில் அனுசரணையோடு நடந்துகொள்வார்கள்.
கவனம் தேவை:
வியாபார முதலீடுகளை இப்போதைக்கு தவிர்த்து விடுங்கள்.கணவன் மனைவி உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. சில தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது மூலமாக பொருளாதார சிக்கல்களை சமாளிக்கலாம். பேச்சில் கவனம் தேவை. யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம் .செலவுகளை யோசித்துச் செய்வது நல்லது.
பரிகாரம்:
இராமபிரானை வழிபடுங்கள். நலன்கள் கிடைக்கும்..

மகரம்
சாதகங்கள்:
பன்னிரண்டில் சுக்கிரன் வக்கிர கதியில் இருக்கிறார் .செவ்வாயோடு கூட்டு சேர்ந்து இருக்கிறார். மாறுதலான அனுபவங்களை அவர் கொடுப்பார். சில வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய அனுபவங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் திறமைகள் அதன் மூலமாக வெளிப்படும். ஆரோக்கியம் மேம்படும். குடும்ப கௌரவம் அதிகரிக்கும். குடும்ப பூர்வீக சொத்துக்கள் சிக்கலின்றி உங்களுக்குச் சாதகமாக கிடைக்கும். சாதுரியமான நடவடிக்கைகள் மூலமாக சில வெற்றிகளைப் பெறுவீர்கள். ஆயினும் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். பேச்சில் சில சங்கடங்கள் வரும். 25, 28 தேதிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும் .
கவனம் தேவை
வைத்தியச் செலவுகள் ஏற்படலாம்.நீங்களே நேரடியாக இறங்கி காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் காரியம் பழுதாகும். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள். இரவு நேர பயணத்தைத் தவிர்க்கவும். பேச்சுக்களில் எச்சரிக்கை தேவை.
சந்திராஷ்டமம்:
22ஆம் தேதி மாலை 4.30 மணி வரை சந்திராஷ்டமம் உண்டு. எல்லா விஷயங்களிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக பேச்சில் எச்சரிக்கை தேவை.
பரிகாரம்
அம்மன் வழிபாடு அற்புதங்களைச் செய்யும். மாரியம்மன் வழிபாடு நல்லது.
கும்பம்
சாதகங்கள்:
சனி 12ல் ஆட்சி. நிதானமாக உங்கள் வெற்றிகள் மேம்படும். இதுவரை இருந்த மனக்குறை நீக்கும். தொழில் விருத்தி அடையும். ஆனாலும் கடுமையான உழைப்பு தேவைப்படும். பிறரிடம் பாராட்டு பெறுவீர்கள். வீண் செலவுகள் தவிர்க்க வேண்டும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பொறுமையோடு இருந்தால் உரசல்களைத் தவிர்த்து விடலாம் .கருத்து வேறு பாடுகளை நீக்கி கொள்ளலாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக் கும். தூர பயணங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம் இது. சகோதர சகோதரிகளால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்தில் இருந்த தகராறு நீங்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுக்கிரனுடைய சஞ்சாரத்தினால் பணவரவு அதிகரிக்கும்.
கவனம் தேவை
எதிலும் சிக்கனம் வேண்டும். வாகன பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். எதையும் ஒரு தரத்திற்கு இரண்டு தரம் யோசித்துச் செய்யுங்கள். கூட்டுத்தொழிலில் எச்சரிக்கை தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விரயத்தை கட்டுப்படுத்துங்கள்.
சந்திராஷ்டமம்:
22ஆம் தேதி மாலை 4.48 மணி முதல் 24 ஆம் தேதி இரவு 11.08 மணி வரை சந்திராஷ்டமம் உண்டு. எல்லா விஷயங்களிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும். குறிப்பாக பேச்சில் எச்சரிக்கை தேவை.
பரிகாரம்:
குலதெய்வ வழிபாடு சாலச்சிறந்தது. அது குதூகலத்தை கொடுக்கும்.

மீனம்
சாதகங்கள்:
சிறப்பான எதிர்காலம் உண்டு. இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். வேலை நெருக்கடிகளும் தீரும். அரசு உதவிகளும் வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய வாகனங்கள் அல்லது வீடுகளின் முதலீடுகள் செய்வதைக் கொஞ்சகாலம் தவிர்க்கவும். 22 ஆம் தேதி உங்களுக்கு சாதகமான நாள் . புதிய பொறுப்பு கிடைக்கும். சம்பள உயர்வு அதிகரிக்கும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். மேலதிகாரிகள் உங்கள் மீது அன்பு செலுத்துவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டு. ராசிநாதன் 12ல் , சுப விரயங்கள் ஏற்படலாம். சூரியன், தனுசு ராசியில் இருப்பதால், அரசாங்க ஒப்பந்தம், வேலை போன்ற ஆதாயங்கள் உண்டு. பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாக முடியும்.
கவனம் தேவை
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தவறான முதலீடுகளைச் செய்து ஏமாற வேண்டாம். பேச்சில் கவனம் தேவை.. களத்திர உறவுகளில் சிறு விரிசல்கள் ஏற்படக்கூடும். பெரிதுபடுத்தாமல் அதனை எதிர்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைகள் வளராமல் தவிர்ப்பதன் மூலமாக இதை தவிர்த்து விடலாம்.
சந்திராஷ்டமம்:
24.1.2022 இரவு 11.08 முதல் 26 ந் தேதி காலை 3.12 வரை சந்திராஷ் டமம் உண்டு .எதிலும் கவனத்துடன் இருக்கவும். புதிய முயற் சிகளை மேற்கொள்ள வேண்டாம். தள்ளிப் போடவும். வாகனங்களில் செல்லும் போது கவனத்துடன் செல்லவும்.வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ளவும்.
பரிகாரம்:
லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள் நலம் பெறுங்கள்.
- மாதா பிதா செய்தது மக்களுக்கு….. சரியா?

- திருக்கண்ணபுரம் தெப்பம்(12.3.23- ஞாயிற்றுக்கிழமை)

- தமிழால் பெருமாளை எழுப்பியவர் (திருமழிசை ஆழ்வார்)

- ஞானவேள்வி மறுபடியும்! Aalayadharisanam Now in E Version

- சமூக ஊடகங்கள்/ ஸ்மார்ட் போன் – வரமா? சாபமா? Smartphone addiction solution

- சங்கடங்களில் இருந்து வெளியே வர… (How to overcome sorrows?)

