இதுவரை சுட்டெரித்த கத்தரி என்னும் அக்னி நட்சத்திரம் இன்றோடு விடைபெறுகிறது அக்னி நட்சத்திர காலத்தை தோஷ காலம் என்று சொல்லி சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது பண்டைய நாளைய வழக்கம். இக்காலத்தில் அக்னிதோஷ நிவர்த்தி வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. காலை சர்க்கரை பொங்கல் அல்லது கோதுமைப் பொங்கல் வைத்து, சூரிய நமஸ்காரம் செய்து அக்னிதோஷ நிவர்த்தியைச் செய்து கொள்ளலாம். இந்த அக்னிதோஷ காலத்திற்குப் பிறகு சுப காரியங்களை நல்ல நாள் பார்த்து தாராளமாகச் செய்யலாம்.
அக்கினிக்கு தோஷம் உண்டா ? அக்னிக்கு தோஷம் கிடையாது. தோஷம் இல்லாதது மட்டுமல்ல …அக்னி நம் தோஷங்களை நீக்கும்.அக்னி தான் எல்லாவற்றிற்கும் காரணம்.யாகங்கள் ஹோமங்கள் எல்லாவற்றிற்கும் எல்லா தோஷங்களையும் போக்கும். அக்கினி சற்று இளைப்பாறும் காலம் தான். இது விஞ்ஞான ரீதியாய் பூமிக்கு மிக அருகில் வருகிறது. அக்னிதோஷ காலங்களில் எந்த வித புது முயற்சிகளும் குறிப்பாக வீடு மனை கட்டுதல், விலக்கி வைக்கப்பட்டது.
ஆனால் கால தேச வர்த்தமானதால் இப்போது எல்லாம் செய்கிறார்கள். இதில் முக்கிய வழிபாடு நம்முடைய உடலேஅக்னி மூலம் தான் இயங்குகிறது. உணவு செரிக்க வளர் சிதை மாற்றம் நிகழ அக்னி முக்கியம்.
உஷ்ணம். நீரும் நெருப்பும் என்று சொன்னார்கள். ஒரு துளி நீரில் பிறந்த தேகம் ஒரு துளி நெருப்பில் விடுகிறது. இதற்கு இடையில் தான் வாழ்க்கை .
நம் உடம்பைக் காப்பது தண்ணீரும் நெருப்பும்தான். அக்னியை நினைக்கும் போது இந்த வாழ்வியல் உண்மைகள் புரிய வேண்டும்.
ஆதிகால வழிபாட்டில் முக்கியமானது அக்கினி. அதுதான் இன்றைக்கு தீமிதி திருவிழா. தீச்சட்டி திருவிழா. எல்லாம் நடக்கின்றன.
முருகப்பெருமான் நெருப்பு சுடரில் பிறந்தவர் . பெருமாள் . காஞ்சியில் அக்னியில் அவதரித்தார். இப்படிப்பட்ட அக்னி பகவானின் 21 நாள் முடிகிறது. காண்ட வன கதையை சொல்லுவார்கள். இது முடிந்த பிறகு அக்கினி நமக்கு எல்லா அருளையும் வாரி வழங்குகிறது .
அக்னிதோஷ நிவர்த்தி நடக்கும் பொழுது நாம் சூரியனை வணங்க வேண்டும். காலை மாலை பூஜை செய்ய வேண்டும் .ஏதேனும் ஒரு இனிப்பு நிவேதனம் செய்ய வேண்டும் அது மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும் வாழை இலையில் அரிசியை பரப்பி கலசத்தில் நீரை நிறைத்து வைக்க வேண்டும்.
தாள்களை எனக்கே தலைத் தலை சிறப்பத்
தந்த பெயர் உதவிக்கு கைமாறா
தோள்களை ஆரத் தழுவி என் உயிரை
அறவிலை செய்த சோதி
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய்
துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்
தமியனேன் பெரிய அப்பனே
சூரியனை அன்று காலை கிழக்கும் மாலை மேற்கும் நோக்கி வணங்க வேண்டும்.
சோதியே சுடரே தினம் தோன்றும் கதிரே வாழ்க
ஆதியே நீயே எம்மை அனைத்து நல் வாழ்வு அருள்வாயே
நீதியாய் உலகில் நின்று நிலைக்கும் தேவே போற்றி
ஓதியே வாழ்த்துகின்றோம் உயர்ந்த நல் வாழ்வை தாராய்
ஓம் கோடீ சூரிய பிரகாசனே
உயரே தோன்றும் விளக்கே
தேடிய மாமுதலாய் வந்து
திக்கெங்கும் காத்திடும் சுடரே வாழ்க
