Sani Prathosham-சனி பிரதோஷம்(17.9.2024) மகாவிஷேசம்
பிறதோஷம் நீங்க பிரதோஷம் விரதம் இருக்க வேண்டும்.அதிலும் சனி பிரதோஷம் மகாவிஷேசம் திதியும் கிழமையும் சேர்வது அற்புதம்.நாளை காலை பூராடம், சுக்கிரன் நட்ஷத்திரம் என்பதாம் மகாலட்சுமிக்கு உரியது.
மாலை உத்திராடம். சூரியன் ஆவணி மாதத்திற்கு உரியவன்.
உயிர்களைக் காக்க ஆழகாலம் விஷத்தை சாப்பிட்ட நேரம் பிரதோஷ நேரம்
வைஷ்ணவத்தில் பிரகலாதனைக் காக்க, பிரகலாதனுடைய வாக்கைக் காக்க நரசிம்மர் அவதரித்த நேரம் என்று இந்த பிரதோஷ நேரத்தைச் சொல்வார்கள் அதனால் பிரதோஷ கால நரசிம்ம வழிபாடு சிறந்தது சிவாலயம் செல்பவர்கள் அபிஷேகத்துக்கு ஏதாவது ஒரு பொருளைக் கொண்டு செல்வது நல்லது. தியானிக்க வேண்டிய திருவாசகம்.
நாயேனைத் தன் அடிகள் பாடுவித்த நாயகனை
பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை
நீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்ட ருளும்
தாயான ஈசற்கே சென்று ஊதாய் கோத்து ம்பி
அன்று கோயிலுக்கு போக முடியாதவர்கள் வீட்டில் பூஜை அறையில் சந்தன லிங்கம் செய்து தூப தீபம் காட்டி படைக்கலாம். அதனால் பிரதோஷத்தின் முழுமையான பலனை அடையலாம். இதனுடைய பலன்கள். 1.தடைபட்ட சுப காரியங்கள் தடை நீங்கி சிறப்பாக நடைபெறும்
2.குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்
3.கடன்கள் தீரும் அதாவது ஆறாம் பாவம் வலிமை இழக்கும்
