Vishnupathy Punya Kalam (17.8.24) விஷ்ணுபதி புண்ணிய காலம்
சித்திரை ஆடி ஐப்பசி தை – இந்த நான்கு மாதங்களும் பிரம்மனுக்கு உரியது விஷூ புண்ணிய காலம்.
வைகாசி ஆவணி கார்த்திகை மாசி – இது விஷ்ணுபதி புண்ணிய காலம்
ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி இவை சங்கரனுக்குரிய அதாவது சிவனுக்குரிய மாதங்கள் சட ஷீதி புண்ணிய காலம்.
ஆவணி மாதம் முக்கியமான மாதம் . இந்த மாதத்தில் தான் ஆவணி அவிட்டம் வருகிறது வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது மூன்று வேதத்தின் திரளான காயத்ரி ஜபம் செய்யப்படுகிறது .
ஆவணியில் சிம்ம ராசியில் சூரியன் இருப்பார் இந்த வருடம் குருவுக்கு கேந்திரத்தில் சூரியன் இருப்பது சிறப்பு சூரியன் சுக்கிரன் புதன் கால புருஷனுக்கு திரிகோணத்தில் இருக்கிறார்கள்
இந்த நாளில் மகாவிஷ்ணுவை நினைக்க வேண்டும் மந்திர பூர்வமாய் அவன் எட்டெழுத்து மந்திரத்தை ஜபிக்க வேண்டும்
“ஓம் நமோ நாராயணாய ”
இந்த எட்டு எழுத்து மந்திரம் நமக்கு எல்லையற்ற செல்வத்தை தரும்.
குலம் தரும் செல்வம் தந்திடும்* அடியார்
படு துயர் ஆயின எல்லாம்*
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்*
அருளொடு பெரு நிலம் அளிக்கும்*
வலம் தரும் மற்றும் தந்திடும்* பெற்ற
தாயினும் ஆயின செய்யும்*
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்*
நாராயணா என்னும் நாமம்
கல்கி இதழில் திருமங்கையாழ்வார் பற்றி முன்பு ஒருமுறை சுஜாதா எழுதிய கட்டுரையில்; வைணவர்களுக்கு மிக முக்கியமான பாசுரம் எது? அதைமட்டும் தெரிந்து கொண்டால் திவ்யப் ப்ரபந்தத்தையே தெரிந்துகொண்ட மாதிரி. அப்படி ஒரு பாசுரம் இருக்கிறதா என்ற இந்த அவசர உலகத்தில் என்னிடம் கேள்விகள் கேட்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் திருமங்கையாழ்வாரின் இந்தப் ¢பாசுரத்தை பரிந்துரைப்பேன்.என் தந்தை, ‘இந்தப் பாசுரம் ஒன்றே போதும். திவ்யப் ப்ரபந்தத்தின் சாரம், திருமந்த்ரார்த்தம் இதுதான்’ என்பார். இறக்கும் தருவாயில் இந்த ஒரு பாசுரத்தை காதில் சொன்னால் போதும் என்று கூடச் சொல்வார்கள்.
இந்த நாள் ஏகாதசி விட சிறந்தது.இந்த நாளில் அவசியம் தாயாரையும் மகாலட்சுமியும் வணங்க வேண்டும் .இதனால் மன அமைதி கிடைக்கும். நிம்மதி கிடைக்கும் .தெளிவு கிடைக்கும். சக்தி அதிகரிக்கும். கேட்கும் வரத்தை எல்லாம் பெருமாள் தருவார். பிறருக்கு நல்லது செய்யும் ஆற்றல் வளரும். உறவுகள் வசப்படும். ஐஸ்வர்யம் அதிகரிக்கும். தீராத குடும்பப் பிரச்சனைகள் தீரும் இன்று காலையில் சுக்கிரனுக்குரிய பூராடம்.பகலில் சூரியனுக்குரிய உத்திராடம். சூரியனுக்குரிய மாதத்தில் வருவது சிறப்பு.
