சனிப்பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் சுருக்கமான பலன்கள் – Sani Peyarchi Palangal
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி 2020 ஜனவரி 24ஆம் தேதி நடக்க உள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி (மார்கழி 12) டிசம்பர் 27ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் உள்ள உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகர ராசியில் உள்ள உத்திரம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
சனிப்பெயர்ச்சி (SaniPeyarchi) 12 ராசிகளுக்கும் சுருக்கமான பலன்கள்.இந்த பெயர்ச்சியின் காரணமாக ஒவ்வொரு ராசியும் பெற உள்ள முக்கிய பலன்களும், அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
1. மேஷ ராசிக்கு சனிப்பெயர்ச்சி சாதகமான பலன்கள் தர உள்ளது. இவர்களுக்கு குரு பெயர்ச்சியும் சாதகமாக இருப்பதால் கூடுதல் பலன்களை பெற உள்ளனர்.வரும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் மிக அருமையாக இருக்கும்.ராகு -கேது பெயர்ச்சியும் மிக நன்றாக இருக்கின்றது. வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். செய்யும் தொழில், திருமண வாழ்க்கையில் மேன்மை அடைவார்கள். இப்படி பல சுப பலன்கள் கிடைக்கும்.10ல் சனி வருவதால் எந்த வேலை பார்த்தாலும் அவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. வேலை இடத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேசாமல் இருந்தாலே போதும், நன்மைகள் நடக்கும். சக ஊழியர்களிடன் கவனம் தேவை. சுய தொழில் தொடங்க திட்டம் வைத்துள்ளவர்களுக்கு, தொழில் தொடங்க உகந்த காலமாக இருக்கும். உங்கள் உழைப்பிற்கேற்ற பலனை நிச்சயம் பெறலாம் என்பதால், எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் தொடங்கலாம்.
மேஷம் ராசி அதிபதி செவ்வாய். அதனால் அடிக்கடி முருகன், ஆஞ்சநேயர் வழிபாடு நம்பிக்கையைத் தரும்.
2. இதுவரை அஷ்டம சனியால் அவதிப்பட்டிருப்பார்கள். உணர்ச்சிவசப்படக்கூடிய ராசியாக ரிஷப ராசியினர் இருந்திருப்பார்கள். இனி அவர்களுக்கு மிக நல்ல பொற்காலமாக இருக்கும். குடும்ப ஒற்றுமையும், பாக்கியங்களும் ஏற்படும். மூத்த மற்றும் இளைய சகோதர்களுக்கு சற்று பாதிப்பு கொடுக்கும். வம்பு, வழக்கு இருக்கும். தொழிலில் பெரிய வெற்றி கிடைக்கும். குரு பெயர்ச்சி ஆன பின் மேலும் வெற்றி கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். மே, ஜூன் மாதங்களில் எதிர்பாராத யோகமாக திருமணம் ஆக வாய்ப்புண்டு. பொருளாதார நிலை உயரும் என்பதால், கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். மேலும் வீடு, மனை போன்ற அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய அற்புத காலமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு போன்ற தூர தேசம் இடங்களுக்கு செல்ல உகந்ததாக இருக்கும்.
பண விஷயங்களில் மிக கவனம் தேவை. வயிறு சார்ந்த பிரச்சினைகள் வரலாம். ஜூலை 17வரை மிக கவனமாக இருக்க வேண்டும்.குல தெய்வ வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் மிக நன்மைகள் தரும்.இரும்பு சத்துக்கள் கொண்ட எள் தானம் செய்தால் நன்மைகள் உண்டாகும்.
3. 8ல் சனி வருவதால் அதாவது அஷ்டம சனி என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்ப ரீதியாக பாதிப்புக்கள் ஏற்படலாம். பயணங்களில் மிக கவனமாக இருப்பது அவசியம். புத்திரர்களும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.சற்று குழப்பங்களுடன் தான் இரண்டரை ஆண்டுகள் செல்லும். பேச்சு, செயல் மூலமாக பல சிக்கல் உண்டாகும். உங்களின் தவறையும், ஒழுக்கமின்மையையும் திருத்துவதாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும். தங்களின் செயலில் கவனமாக செயல்பட்டாலே போதும்.செய்யும் தொழிலில் இடமாற்றம், கடன் தீருதல், கணவன் – மனைவி ஒற்றுமை, பண வரவு என்ற பல நற்பலன்களும் கிடைக்கும். சனி செல்லும் போது நன்மையை கொடுத்துவிட்டுத் தான் செல்வார் கவலை வேண்டாம்.குறிப்பாக மிருகசீரிடம் நட்சத்திரத்தினர் வழிபாடுகள் மூலமாக உங்களை நல்வழிப்படுத்திக் கொள்ளலாம்.தினமும் ஒரு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். திண்டிவனம் – பாண்டிச்சேரி சாலையில் பஞ்சவடி(Panchavadi Hanuman Temple) ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு சென்று வருவது நல்லது. அனுமன் வழிபாடு நன்மையை தரும்.ஆடி மாதம் வரை மிதுன ராசியினர் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
4.சஞ்சலத்தில் இருக்கக் கூடிய கடக ராசிக்கு, சற்று பாதிப்புக்கள் இருக்கும். இருப்பினும் கடமையை சரியாக, நேர்மையாக செய்பவர்களுக்கு நன்மை தான் நடக்கும்.கணவன் – மனைவி, உறவினர் உறவில் சிறு சச்சரவுகள் இருக்கும். தாய், தந்தை உறவுகள் பேதம் ஏற்படும். சந்தேக புத்தி, சோம்பேறித்தனத்தை விலக்கினால் நன்மை கிடைக்கும்.கண் திருஷ்டி அதிகமாகும். வளர்ச்சியை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும். புதிதாக அறிமுகமாபவர்களிடம் கவனமாக இருப்பது அவசியம்.வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆஞ்சநேயர், சனி பகவானை தொடர்ந்து வணங்கி வர நன்மை தரும்.யாரெல்லாம் சுறுசுறுப்புடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு சனி பகவான் நன்மையை தான் செய்வார். அதனால் சோம்பேறித்தனத்தை நீக்க வேண்டும்.
5. சிம்ம ராசிக்கு 6ம் இடமான நோய், எதிரி ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்க உள்ளதால் பல வகையில் ஆட்சி அதிகாரம் கிடைக்கக்கூடிய நிலை இருக்கும். மிக சிறப்பான பலன் பெற வாய்ப்புள்ள காலம் என்பதால் பயன்படுத்திக் கொள்வது நல்லது. புதிய தொழில் தொடங்க சிறந்த காலம். மாணவர்களுக்கு மிக மேன்மையான பலன்களையும், போட்டி தேர்வில் வெற்றி தரக்கூடியதாக அமையும்.
உங்களின் போட்டியாளர், எதிரிகள் நீங்குவார்கள் என்பதால் உங்கள் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பார்க்க முடியும்.
மிகவும் பயனடையக்கூடிய ராசி. காதல் கை கூடும். வக்கில் தொழில் சிறப்புறும். பயணத்தில் கவனம் தேவை, காயங்கள் ஏற்படலாம். நிம்மதி, தூக்கம் கெடும் என சில அசுப பலன்கள் இருந்தாலும், கடன் நிறைய கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டாகுதல், வேலை கிடைத்தல், சுப காரியங்கள் நடத்தல் என பல நல்ல சுப பலன்களும் நடக்கும்.உப்பு அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது.பிள்ளையார்பட்டி சென்று விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு குறிப்பாக கற்பக விநாயகர் வழிபாடு நன்மையை தரும். திருவண்ணாமலை (Tiruvannamalai) செய்து வருவது நல்லது.அவசரத்தை விட்டாலே அனைத்தும் நன்மை தரும்.
6. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். திருமணம், குழந்தை யோகம் உண்டு.சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்பதால் ஜாக்கிரதை. சிறுநீரக பிரச்னை வரலாம் கவனம் தேவை. வண்டி வாகனத்தில் கவனம் தேவை. செய்தொழிலில் வருமானம் நன்றாக வரும்.அனுமன், சனீஸ்வரர் வழிபாடு நன்மையை தரும்.கடவுளை வணங்குவது, நியாயமாக நடந்து கொள்ளுதல், எந்த ஒரு வேலை செய்தாலும் முழு சிரத்தையுடன் செய்வது நல்லது.
7. கடன் தீரும். தொழிலில் அலைச்சல் ஏற்படும். சோம்பேறித்தனம் ஏற்படும். பணியிடத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் வேலையை முடிக்க முயலவும்.
பெற்றோர்கள், மேலதிகாரிகளிடம் தேவையற்ற விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.சக ஊழியர்களிடம் மேலதிகாரிகளைப் பற்றி தவறாக பேசாமல் இருப்பதே நன்மையை தரும்.
தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது. இரும்பு, புரத பற்றாக்குறை இருக்கும்.நரசிம்மர் வழிபாடு மிகவும் நன்மையை தரும்.
8. முயற்சிகள் எது எடுத்தாலும் நன்மை உண்டாகும். அதனால் எதுவாக இருந்தாலும் முயற்சி செய்வது அவசியம்.
ராகு – கேது பெயர்ச்சிக்கு பின் பயணத்தில் கூடுதல் கவனம் தேவை.செய்யும் தொழிலில் மேலதிகாரிகளிடம் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்வது நல்லது. தேவையில்லா வார்த்தை பயன் தரும்.
திருமணம் முடிவானால் உடனடியாக திருமணம் செய்து கொள்வது நல்லது. இல்லையெனில் கூடுதல் தாமதமாகும்.குரு பகவான் வழிபாடு அவசியம். குரு ஸ்தலமான திருச்செந்தூர் முருகன் சென்று வழிபாடு செய்துவருவது அவசியம்.உணர்ச்சிவசப்படாமல் இருந்தாலே அனைத்தும் நன்மை உண்டாகும்.பேச்சில், செயலில் நிதானம் தேவை.
9. தொழில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பாராத திருமணம் யோகம் உண்டு.உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்ப உறவினர்களுடன் பொய் பேசாமல் இருப்பது நல்லது.
வயிறு, மூட்டு சார்ந்த பிரச்னைகள் உண்டாகும். வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுன்னு பேசுவதை தவிர்க்கவும். பணிவாக பேசுவது நல்லது. கூடுமான வரை வாயை கட்டுப்படுத்தி பேசாமல் இருப்பதே சிறந்தது.ஏழரை சனி முடிந்து போகும் போது நன்மை உண்டாகும்.தயிர் சாதத்தில், எள் கலந்து, பெருமாள் கோயிலில் மதிய வேளையில் தானம் செய்வது நல்லது.
10. சோம்பேறித்தனம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் மந்தமாக இருக்கும். வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
பொருளாதார ரீதியில் பாதிப்பு உண்டாகும். மனைவி வழியில் உள்ள உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பார்கள்.வண்டி, வாகனத்தில் கவனம் தேவை. கர்பஸ்திரிகள் குழந்தை வெளியில் வரும் வரை கவனம் தேவை.சோம்பேறித்தனம் தவிர்த்தால் மிக நன்மை உண்டாகும்.இறை வழிபாடு நன்மை தரும்.
11. அடுத்தவர்களின் தவறை சுட்டிக்காடுவதும், அடுத்தவரை திருத்துவதை தவிர்த்து தன் முன்னேற்றத்திற்கு என்ன முயற்சி செய்ய வேண்டுமோ அதை செய்தாலே போதும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது.ஏழரை சனி தொடங்கினாலும் பல வகையில் நன்மையை சனி தருவார்.தன்னம்பிக்கை சார்ந்த கதைகள் படித்தல், குழந்தைகளுடன் விளையாடுதல், சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் நன்மையை தரும்.ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டு வர நன்மை உண்டாகும். சனிக்கிழமைகளில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று ஈசனை வணங்கி அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பின்னர் சனீஸ்வரனை வணங்குவது அவசியம். நவகிரக சன்னதியாக இருந்தால் 8 முறை வலம் வந்து வணங்குவது நல்லது.வாரந்தோறும் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஏற்படும்.
12. மீன ராசிக்கு 11ம் இடமான மூத்த சகோதரர், லாப ஸ்தானமான மகர ராசியி லாப குருவாக சஞ்சரிக்கும் நிலையில், சனி பகவானும் வரும் டிசம்பர் 27ம் தேதி மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.இதன் காரணமாக மீன ராசி நபர்களுக்கு தொழில், வியாபாரத்தில் முயன்றளவுக்கு நல்ல பலனாக லாபம் வந்து சேரும். கல்வியில் மேல்நிலையை அடைவீர்கள். ஆன்மீக சுற்றுலா, செல்ல வாய்ப்பும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் நல்ல வாய்ப்பாக இருக்கும். சனிப்பெயர்ச்சியால் மிக நல்ல பலன்கள் கிடைக்க உள்ளது மீனம் ராசி எனலாம். புதிய வேலைவாய்ப்பு, வெளிநாடு செல்ல முயல்பவர்களுக்கு மிக நல்ல செய்தி கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.கல்வி, வேலைக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. தொழிலில், வியாபாரத்தில் முன்னேற்றம். லாபம் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் கிடைக்கும். ஆன்மிக யாத்திரை செல்வார்கள். 12 ராசிகளில் சனிப்பெயர்ச்சியால் மிக நல்ல பலன்கள் கிடைக்க உள்ள ராசி மீனம் தான்.முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று உதவுதல், நிதி உதவியும் வழங்கலாம். படிப்பிற்கு நிதியில்லாமல் கஷ்டப்படும் ஏழை மாணவார்களுக்கு படிப்பிற்கு உதவலாம்.மீன ராசியினர் இருக்கும் வேலை விடாமல் இருத்தலே நல்லது. புரட்டாசி மாதம் வரை மிக கவனமாக இருப்பது நல்லது.
இந்த ஆண்டு சனி பெயர்ச்சி அனைவருக்கும் நல்ல படியாக அமைய இறைவனை பிரார்த்திப்போம்.
ஆடி மாத ராசி பலன்கள் 2020 (மேஷம், ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி )படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
