திருமாலிருஞ்சோலை அழகன் – பக்தி பாடல்
திருமாலிருஞ்சோலை அழகன் – அவன்
திருவடி தொழுவோர்க்கு அமுதன் (திருமாலிருஞ்சோலை அழகன்)
பரமசாமி யாய்நிற்கும் பரமன் – அவன்
பாமரர்க்கு பரம் தரும் வரதன்
பார்புகழும் மாமலை வாசன்
அவன் பாடிடும் அன்பரின் நேசன் (திருமாலிருஞ்சோலை அழகன்)
மருத்துவராய் நிற்கும் சேயன் – அவன்
மக்களின் மருள் நீக்கும் மாயன்
வடமதுரை பிறந்த ஆயன் – அவன்
தென் மதுரை சென்றருளும் ஐயன் (திருமாலிருஞ்சோலை அழகன்)

ஆழ்வார்கள் அனுபவித்த கன்னல் – அவன்
ஆண்டாளின் நேமம் ஏற்ற அண்ணல்
அடியார்க்கு அருள் புரியும் அமலன் – அவன்
அழகர் மலை வாழும் விமலன் (திருமாலிருஞ்சோலை அழகன்)
சுந்தரவல்லிக்கு இனியன் – அவன்
சுதபரின் சாபம் தீர்த்த தனியன்
சுந்தரத் தோளுடை செல்வன் – நம்
சிந்தை கொள்ளை கொள்ளும் கள்வன் (திருமாலிருஞ்சோலை அழகன்)
சோலை மாமலை ஏற்றான் – அவன்
சோமசந்த விமானம் பெற்றான்
பட்டர்பிரானுக்கு பரம் தந்தான் – அவன்
பதினெட்டானுக்கும் இடம் ஈந்தான் (திருமாலிருஞ்சோலை அழகன்)
சிலம்பாற்றில் நீராடும் நம்பி – நாம்
சிரம் தாழ்த்தி வணங்குவோம் நம்பி
கார்முகில் உலாவும் மாமலை – அது நம்
கர்மங்கள் போக்கிடும் சீர்மலை (திருமாலிருஞ்சோலை அழகன்)
பாடல் வரிகள்: திரு. மு.வெ.இரா.ரங்கராஜ ராமானுஜதாசன், மதுரை
Thirumaaliruncholai azhagan – English Lyrics
Thirumaaliruncholai azhagan – avan
Thriuvadi thozhuvorkku amuthan (Thirumaaliruncholai azhagan)
Paramasaamiyai nirkkum paraman – avan
Paamararkku param tharum varadhan
Paapugazhum maamalai vaasan – avan
Paadidum anbarin nesan (Thirumaaliruncholai azhagan)
Maruthuvaraai nirkkum seyan – avan
Makkalin marul neekum maayan
Vadamadhurai pirandha aayan – avan
Thenmadhurai sendrarulum iyyan (Thirumaaliruncholai azhagan)
Azhwaargal anubavitha kannal – avan
Aandalin nemam ettra annal
Adiyaarku arulpuriyum amalan – avan
Azhagar maamalai vaazhum vimalan (Thirumaaliruncholai azhagan)
Sundaravallikku iniyan – avan
Sudhabarin saabam theertha thaniyan
Sundhara tholudai selvan – nam
Sindhai kollai kollum kalvan (Thirumaaliruncholai azhagan)
Solai maamalai ettraan – avan
Somasandha vimaanam pettraan
Pattarbiraanukku param thandhaan – avan
Pathinettaanukkum idam eendhaan (Thirumaaliruncholai azhagan)
Silambattril neeradum nimbi – naam
Siram thaazhthi vananguvom endrum nimbi
Kaarmugil ulaavum maamalai – adhu nam
Karmangal pokkidum seermalai (Thirumaaliruncholai azhagan)
– Sri. Mu. Ve. R. Rengarajan Swami, Madurai
ஸ்ரீ ராமானுஜ முனி பாடல் வரிகள் (காவடி சிந்து மெட்டு)

அகிலம் போற்றும் ஆசாரியர்
ஆதிசேஷன் அம்சமடி
அரங்கனுக்கன்பனடி- கிளியே
நம் இராமாநுஜ முனிவரடி-கிளியே
ஸ்வாமி யதிராஜரடி!
பெரும்புதூர் அவதரித்தார்
காஞ்சியில் கல்விகற்றார்
கருணையின் வடிவமடி -கிளியே ( நம்.. ஸ்வாமி)
ஆசாரியர் ஐவர் கொண்ட
அரும் பெரும் சீடரடி
ஆளவந்தார்க்கு அன்பனடி -கிளியே ( நம்.. ஸ்வாமி)
அரங்கம் வந்தாரடி
அரும்பணிகள் செய்தாரடி
அடியார்க்கு அடியாரடி-கிளியே ( நம்.. ஸ்வாமி)
கோட்டியூர் சென்றாரடி
மறை பொருள் கொண்டாரடி
மற்றவர்க்கும் தந்தாரடி-கிளியே ( நம்.. ஸ்வாமி)
திருமலை சென்றாரடி
சங்காழி தந்தாரடி
திருமலையப்பனுக்கடி -கிளியே ( நம்.. ஸ்வாமி)
குறுங்குடி நம்பிக்கடி
குருவாக ஆனாரடி
குணங்களின் குன்றமடி-கிளியே ( நம்.. ஸ்வாமி)
நலந்தரும் நூல்களடி
நவநிதியாய் தந்தாரடி
நம்மாழ்வார் அடியாரடி- கிளியே ( நம்.. ஸ்வாமி)
வையகம் வாழ்ந்திடவே
வைணவம் வளர்த்தாரடி
வரதனின் அன்பனடி-கிளியே ( நம்.. ஸ்வாமி)
சரணாகதி மார்க்கமடி
சாதி பேதமில்லையடி
சாமானியர்க் எளியதடி -கிளியே ( நம்.. ஸ்வாமி)
உடையவர் என்பவரடி
உலகு வாழ வந்தவரடி
உலாவும் பெருமாளடி-கிளியே ( நம்.. ஸ்வாமி)
எல்லாரும் வாழ்ந்தாரடி
எமனாரும் வீழ்ந்தாரடி
எம்பெருமானார் வரவாலடி -கிளியே ( நம்.. ஸ்வாமி)
Sri Ramanuja Muni Song (Kavadi Chindhu Tune)
– Sri Mu. Ve. R. Rangarajan Swami, Madurai
Akilam pottrum aachariyar
Aadhiseshan amsamadi
Aranganukku anbanadi – kiliyae
Nam Ramanuja munivaradee – Kiliyae
Swami Ethiraajaradi
Perumbudhoor avadharithaar
Kaanchiyil kalvi kattraar
Karunaiyin vadivamadi – kiliyae
Nam Ramanuja munivaradee – Kiliyae
Swami Ethiraajaradi
Aachariyar ivar konda
Arumperum seedaradi
Aalavandhaarkku anbanadi – kiliyae
Nam Ramanuja munivaradee – Kiliyae
Swami Ethiraajaradi
Arangam vandhaaradi
Arumpanigal seidhaaradi
Adiyaarku adiyaaradi – kiliyae
Nam Ramanuja munivaradee – Kiliyae
Swami Ethiraajaradi
Kottiyur sendraaradi
Maraiporul kondaaradi
Mattravarkkum thandhaaradi – kiliyae
Nam Ramanuja munivaradee – Kiliyae
Swami Ethiraajaradi
Thirumalai sendraaradi
Sangaazhi thandhaaradi
Thirumalai appanukkadi – kiliyae
Nam Ramanuja munivaradee – Kiliyae
Swami Ethiraajaradi
Kurungudi nambikkadi
Guruvaaga aanaaradi
Gunangalin kundramadi – kiliyae
Nam Ramanuja munivaradee – Kiliyae
Swami Ethiraajaradi
Nalantharum noolgaladi
Navanidhiyai thandhaaradi
Nammaazhwar adiyaaradi – kiliyae
Nam Ramanuja munivaradee – Kiliyae
Swami Ethiraajaradi
Vaiyagam vaazhndhidavae
Vainavam valarthaaradi
Varadhanin anbanadi – kiliyae
Nam Ramanuja munivaradee – Kiliyae
Swami Ethiraajaradi
Saranaagathi maargamadi
Saadhi bedhamillaiyadi
Saamaniyarkku eliyadhadi – kiliyae
Nam Ramanuja munivaradee – Kiliyae
Swami Ethiraajaradi
Udaiyavar enbavaradi
Ulagu vaazha vandhavaradi
Ulaavum perumaaladi – kiliyae
Nam Ramanuja munivaradee – Kiliyae
Swami Ethiraajaradi
Ellarum vaazhndharadi
Emanaarum veezhndhaaradi
Emperumaanar varavaaladi – kiliyae
Nam Ramanuja munivaradee – Kiliyae
Swami Ethiraajaradi
பாடல் வரிகள்: திரு. மு.வெ.இரா.ரங்கராஜ ராமானுஜதாசன், மதுரை
———————————————————————————————————————————

அருமையான வரிகள். ஸ்ரீ மது இராமானுஜாய நமஹ