இந்த வரலக்ஷ்மி விரதத்தில் மஹாலக்ஷ்மியை வரவேற்கும் போது பாட வேண்டிய அருமையான பாடல்!
Varalakshmi Vratham / Pooja 2021 – Mahalakshmi Song
மகாலட்சுமியை வரவேற்பதற்கு ஒரு அழகான பாடல் எளிமையான தமிழில்…..
இந்த பாடல் கர்நாடக சங்கீதத்தின் தந்தை என்று அழைக்கப்படும் புரந்தரதாசர்(PurandaraDasa) அவர்களால் இயற்றப்பட்டது.
புகழ்பெற்ற இந்த கீர்த்தனையில் புரந்தரதாசர் மிகவும் பயபக்தியுடன் செல்வத்திற்கும், அதிர்ஷ்டத்திற்கும், செழிப்பிற்கும் அதிபதியான லட்சுமி
தேவியை மிகவும் அழகான கவிதை நயமான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது வீட்டிற்கு அழைப்பது போல் இந்த பாடலை இயற்றி இருக்கிறார்.
இந்த பாடல் பொதுவாக மத்தியமாவதி அல்லது ஸ்ரீ ராகத்தில் பாடப்படும். இந்த பாடலை நீங்கள் மனதார கேட்கும்பொழுது உங்களுடைய கற்பனையில் மகாலட்சுமி தாயார் அனைத்து விதமான நகைகளாலும் அலங்கரிக்கப்பட்டு அழகான புன்னகையோடு உள்ளே செல்வது போல் இந்தப் பாடல் உங்களுக்கு தோன்றும்.
இப்படி அனைத்து விதமான செல்வத்திற்கும் அதிபதியான மங்களங்களை தரும் மகாலட்சுமி தாயை அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், முக்கியமான பூஜை நாட்களிலும் இந்த பாடலை பாடி வீட்டிற்குள் வரவேற்கலாம். முக்கியமாக மஹாலக்ஷ்மி தாயாருக்கு சிறப்பு வாய்ந்த நாளான வரலட்சுமி நோன்பு நாள் அன்று இந்த பாடலை பாடி அவளை இல்லத்திற்கு அழைப்பதன் மூலம் நாம் சகல செல்வங்களையும், லட்சுமி தேவியின் அருளையும் பெறலாம்.
திருமணமான பெண்கள் நல்ல ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் கொடுக்க லட்சுமி தேவியை வரலக்ஷ்மி நோன்பு நாளன்று பூஜை செய்கிறார்கள். அவர்கள் செய்யும் பூஜையில் மற்றவர்களையும் அழைத்து அவர்களுக்கும் மஹாலக்ஷ்மி தாயாரின் அருள் கிடைக்கும்படி செய்வது தான் இந்த பூஜையின் நோக்கம்.

பாக்யம் தர வந்திடு வாயே – நீ
பாக்யம் தர வந்திடு வாயே -லஷ்மி தாயே (பாக்யம்)
எங்கள் இல்லம் நோக்கி நீ வருவாய்
இனிமை பொங்கக் காட்சியைத் தருவாய்
அன்பு பூஜையை ஏற்று நீ அருள்வாய்
அம்மா உந்தன் காலடி எடுத்து (பாக்யம்)
செல்வம் கல்வி சிறப்புடன் ஆயுள்
நல்ல பிள்ளை நட்புடன் உறவு
அல்லல் நீக்கி அருளிட வெள்ளிக்
கிழமை அன்று விரதம் இருக்க (பாக்யம்)
பகவான் ஹரியின் பத்தினி நீயே
உலகம் உந்தன் ஆட்சியில் தாயே
எதுவும் உந்தன் அருளின்றி இல்லை
எம்மை காக்க வந்து நிற்பாய் (பாக்யம்)
பாற் கடல் பிறந்த பாவையும் நீயே
பரமன் மார்பில் இடம் பிடித்தாயே
காப்பது உந்தன் கடமையாய் எண்ணி
கண்ணைத் திறந்து எம்மிடம் தேடி (பாக்யம்)
வரிகள் : ஸ்ரீ.S. கோகுலாச்சாரி
பாடல்: ஸ்ரீமதி. விஷ்ணுபிரியா சுதர்சன்
Lord Mahalakshmi Welcome Song During Pooja
Bhagyam thara vandhiduvaaye – Bhagyada Lakshmi baramma – Tamil Version
Bhagyam thara vandhiduvaaye – Sri Lakshmi thaye
Bhagyam thara vandhiduvaaye (Bhagyam thara)
Engal illam nokki nee varuvai
Inimai ponga kaatchiyai tharuvai
Anbu poojaiyai ettru nee arulvaai
Amma undhan kaaladi eduthu (Bhagyam thara)
Selvam kalvi sirappudan aayul
Nalla pillai natpudan uravu
Allal neekki arulida vellikizhamai
andru viradham irukka (Bhagyam thara)
Bagavaan hariyin pathini neeyae
Ulagam undhan Aatchiyil thaaye
edhuvum undhan arulindri illai
emmai kaaka vandhu nirpaai (Bhagyam thara)
Paarkadal pirandha paavaiyum neeye
paraman maarbil idam pidithayae
kaapadhu undhan kadamaiyai enni
kannai thirandhu emmidam thedi (Bhagyam thara)
Tamil Lyrics : Sri. S. Gokulachari
Song : Smt. Vishnupriya Sudharsan
Varalakshmi Viratham 2021 – varalakshmi Pooja 2021 – Song for Mahakshmi Pooja
- திருச்சித்ரகூட ராமாயணம் தமிழில் பதம் பிரித்து

- ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி

- மதுரகவி சுவாமிகள் – Madhurakavi Swamigal – Srirangam

- புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகளின் ஜெயந்தி விழா

- நமக்கான நல்ல நேரம் நாம் ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது?(Dec 3,2022)

