Mahalakshmi-Varalakshmi Pooja mantram with Tamil Lyrics /
வரலக்ஷ்மி – மஹாலக்ஷ்மி பூஜை மந்திரங்கள் தமிழ் வரிகளுடன்
மகாலட்சுமி தாயார், வரலட்சுமியாக, நம்முடைய இல்லத்துக்கு விரும்பி வருகின்ற நாள் இந்த வரலட்சுமி விரத நாள்.
முதல் நாள் பூர்வாங்கமாக வீட்டை சுத்தப்படுத்துவது, பூஜையறையை சுத்தப்படுத்துவது, சுக்கிர ஹோரையில் அழைக்கலாம்.
பிள்ளையார் பூஜை / விஷ்வக்க்ஷேன ஆராதனை பூஜை எந்தவிதமான தடையும் இல்லாமல் நடைபெற பிள்ளையார் பூஜை செய்ய வேண்டும். வைஷ்ணவர்கள் விஷ்வக்க்ஷேன ஆராதனையை செய்வார்கள். மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து சந்தனம் குங்குமம் இட்டு, தூப தீபங்கள் காட்டி, ” இந்த வரலட்சுமி பூஜையை எந்த தடையும் இல்லாமல்முடித்துக்கொடுக்க வணங்க வேண்டும். சர்வ மங்களங்களும் தருகின்ற மகாலட்சுமி தாயே வரவேற்கிறோம். வரவேற்கும் பொழுது பாட வேண்டிய பாடல் :
அம்மா லட்சுமி தாயே
அடியேன் குடில் வருவாயே
அன்பால் அழைக்க நீயே
அருள் தர வா நீ தாயே
கலசத்தில் மகாலஷ்மி ஆவாஹனம் செய்யும் பொழுது சர்வ நதிகளையும் ஆவாகனம் செய்ய வேண்டும். அப்போது சொல்ல வேண்டிய மந்திரம்.
கங்கையும் யமுனையும் காவிரியும் நர்மதை
சிந்துவும் கோதாவரி சரஸ்வதியும்
சப்த மங்கல நதிகளே வருக
இந்த கும்பத்தில் வந்தருளி நலம் தருக
அம்மா தாயே ஆவாகனம் ஆவாயே
மங்கல கும்பத்திலிருந்து மகிழ்ச்சி தருவாயே
அந்த பாடலை சொல்லி முடித்து விட்டு அலங்காரம் செய்ய வேண்டும்.
அர்ச்சனை செய்வதற்கு உதிரிப்பூக்கள் தயார் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு சாம்பிராணி தூப தீபங்கள் காட்டி வழிபட வேண்டும்.
மகாலட்சுமி ஸ்தோத்திரங்களை, அழகான பாடல்களை, (திரைப்படப் பாடலாக இருந்தாலும்) நல்ல மெட்டில் அமைந்த பாடல்களை நீங்கள் பயன்படுத்தலாம்.லட்சுமி அஷ்டோத்திரம் படிக்கலாம். ஸ்ரீஸ்துதி என்று வேதாந்த தேசிகர் எழுதி இருக்கிறார். அதைப் படிக்கலாம்.
சில போற்றி மந்திரங்களையும் இங்கு கொடுத்துள்ளோம் அதையும் அர்ச்சனையின் போது சொல்லலாம்.
ஓம் வித்யா போற்றி
ஓம் ஸர்வ பூத இனியவளே போற்றி
ஓம் ச்ரத்தையே போற்றி
ஓம் செல்வமே போற்றி
ஓம் சுரர் துணையே போற்றி
ஓம் பரமாத்மயி போற்றி
ஓம் வாசே போற்றி
ஓம் பத்மாலயாயை போற்றி
ஓம் பத்மாயை போற்றி
ஓம் சுசயே போற்றி
ஓம் ஸ்வாஹா தேவி போற்றி
ஓம் ஸ்வதா தேவி போற்றி
ஓம் ஸுதா தேவி போற்றி
ஓம் தன்யா தேவி போற்றி
ஓம் பொன்மயமானவளே தேவி போற்றி
ஓம் திருவே போற்றி
ஓம் அருளே போற்றி
ஓம் அன்பே போற்றி
ஓம் விருந்தே போற்றி
ஓம் ஒளியே போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் உத்தமியே தேவி போற்றி
ஓம் வஸுதாரிண் தேவி போற்றி
ஓம் கமலாதேவி போற்றி
ஓம் காந்தா போற்றி
ஓம் காமாய தேவி போற்றி
ஓம் கருணையே போற்றி
ஓம் அனுக்ரஹ தேவி போற்றி
ஓம் புத்தியே போற்றி
ஓம் அநகாயை போற்றி
ஓம் ஹரிவல்லபையே போற்றி
ஓம் அசோகாயை போற்றி
ஓம் அம்ருதாயை போற்றி
ஓம் தீப்தாயை போற்றி
ஓம் லோக சோகம் அழிப்பவளே போற்றி
ஓம் தர்ம நிலயாவை போற்றி
ஓம் கருணாயை போற்றி
ஓம் லோகமாத்ரே போற்றி
ஓம் பத்மப்ரியாயை போற்றி
ஓம் பத்மஹஸ்தாயை போற்றி
ஓம் பத்மாக்ஷ்யை போற்றி
ஓம் பத்மஸுந்தர்யை போற்றி
ஓம் பத்மனாப ப்ரியாயைதேவி போற்றி
ஓம் ரமா தேவி போற்றி
ஓம் பத்ம மாலா போற்றி
ஓம் தேவ்யை போற்றி
ஓம் பத்மிந்யை போற்றி
ஓம் ப்ரபாயை போற்றி
ஓம் சந்த்ர முகமே போற்றி
ஓம் சந்த்ராயை போற்றி
ஓம் சந்த்ர ஸஹோதரியே போற்றி
ஓம் சதுர்ப் புஜாயை போற்றி
ஓம் சந்த்ர ரூபாயை போற்றி
ஓம் இந்திராதேவி போற்றி
ஓம் சிவாயை போற்றி
ஓம் ஸத்ய தேவி போற்றி
ஓம் விமலாதேவி போற்றி
ஓம் சாந்தாதேவி போற்றி
ஓம் ச்ரியை போற்றி
ஓம் ஹேமமாலிநீ போற்றி
ஓம் ஸித்தயே போற்றி
என்று மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யவும்.நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி பூஜையை முடித்த பிறகு பூஜைக்கு அழைத்து வந்த சுமங்கலிகளை, உபசரிக்க வேண்டும்.
அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், ரவிக்கைத் துண்டு, மஞ்சள் தடவிய தேங்காய், தட்சனை கொடுத்து வணங்கி ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.
அவர்களுக்கு அன்றைக்கு இலை போட்டு பிரசாதங்களைத் தரவேண்டும். நம் வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு மங்கலப்பொருட்களோடு தாம் பூலம் கொடுப்பதால் கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் அன்னை மகாலஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
வீட்டில் உள்ள மூத்த சுமங்கலிகள் கால்களில் விழுந்து ஆசீர்வாதத்தை பெற வேண்டும். நோன்பு கயிற்றை கணவரிடம் தந்து கட்டிக் கொள்ளலாம். மூத்த சுமங்கலிகள் தர கட்டிக்கொள்ளலாம்.
மஹாலக்ஷ்மியை உங்கள் வீட்டில் அழைக்க ஒரு அருமையான பாடல் Bhagyada Lakshmi baramma – Tamil Version பாக்யதா லட்சுமி பாரம்மா – தமிழில் வரிகளுடன்இதையும் பார்க்கலாமே
இந்த பூஜையை முடித்த பிறகு, மறுநாள் அவசியம் புனர் பூஜை செய்ய வேண்டும். “எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு நாள் முழுக்க தங்கி ஆசீர்வதித்த மகாலட்சுமி தாயே! இப்பொழுது நாங்கள் பிரியாவிடை தருகின்றோம். ஆயினும் நீ வருடம் முழுவதும் எங்களோடு இருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று உருக்கமாகச் சொல்லி வழி அனுப்ப வேண்டும். பிறகு கலசத்தில் உள்ள அலங் காரங்களைப் பிரிக்கலாம். ம
கல்யாணமாகாத பெண்களுக்கு வரலஷ்மி விரதமிருந்தால் விரைவில் திருமண பாக்கியம் கூடும் . வ குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வியும் , ஆரோக்கியமும் ஆயுளும் கிடைக்கும். மாமியார் – மருமகள் மட்டுமல்ல குடும்ப உறவுகள் எல்லாமே மேம்படும். விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும். வீட்டில் செல்வம் நிறையும்.
நினைத்த காரியம் நிறைவேறும். இவை அத்தனையும் அந்த மகாலட்சுமி தாயார் வரமாகத் தருவாள்.
mahalakshmi pooja mantra in tamil பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் பகிரலாம் உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.
- DR.AVR – 5.அடியேன் பெற்ற நெருக்கம்
4.அடியேன் பெற்ற நெருக்கம் (c)எஸ்.கோகுலாச்சாரி சுவாமியோடு அடியேனுக்கு உள்ள பழக்கம் சுமார் 40 ஆண்டு காலத்திற்கு மேல் இருக்கும். இந்த 40 ஆண்டு காலத்தை நான்கு பகுதிகளாகப்… - A.V R an Era-Chapter 5
Chapter 5: The Closeness I Was Blessed With (c) S.Gokulachari,Editor,Aalayadharisanam.com My acquaintance with Swami spans over 40 years. This 40-year… - Naathamunigal-தமிழ் மறை தந்த வள்ளல்
தமிழ் மறை தந்த வள்ளல் சே.கோகுலாச்சாரி ஆசிரியர், ஆலய தரிசனம் வைணவ சமயம் மிகத் தொன்மையான சமயம். இதற்குச் சான்று சங்க இலக்கியங்கள் குறிப்பாக பரிபாடல் போன்ற… - AVR -An Era அத்தியாயம் 2: ஆத்ம உறவுகளின் கூடாரம்அத்தியாயம் 2: ஆத்ம உறவுகளின் கூடாரம் S.Gokulachari,Editor,aalayadharisanam.com வாசலில் ஸ்வாமியின் தங்கை மகன், ஆடிட்டர் பரணீதரன் நின்றிருந்தார். முகத்தில் படர்ந்திருந்த பதற்றமும் சோகமும் அவசரமும் அவர் வார்த்தைகளில்…
- DR.AVR -an Era (chapter 2)Chapter 2: The Sanctuary of Soulful Bonds The Auditor, shri Baranitharan ,Swami’s nephew via his sister, stood at the…
- Dr.AVR- ஒரு சகாப்தம்
ஆலமரம் சாய்ந்தது By S.Gokulachari,Editor,aalayadharisanam.com பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். பொன்னையும் பொருளையும் விடவும் மதிப்பில் உயர்ந்த, ஆன்மிகமும் அறிவும் நிறைந்த ஒரு புண்ணியப்… - DR.A.V.R -Passes away on 2.7.2026
The Banyan Tree Has Fallen People often say, “Even if you can find gold, you cannot find a Wednesday.” Our… - 1.ஆன்மிக முன்னேற்றம் என்பது என்ன?
1.ஆன்மிக முன்னேற்றம் என்பது என்ன? By S.Gokulachari,editor,Aalayadharisanam திருக்கோவலூர் என்று ஒரு ஊர். உங்களுக்கு இப்பொழுது ஒரு சந்தேகம் வரும் திருக்கோவிலூர் என்று தானே சொல்கிறார்கள்… - பெரியாரைத் துணைக்கோடல் -திருக்குறள் விளக்க உரை
Author:S.Gokulachari,editor,aalayadharisanam 28.6.2026 ஞாயிற்றுக்கிழமை, மாலை 4:00 மணி அளவில், புவனகிரி திருக்குறள் இயக்கம் நடக்கும் மாதாந்திர திருக்குறள் வகுப்பில் , 45 வது அதிகாரம், பெரியாரைத் துணைக்கோடல்… - வாலாஜாபேட்டை ஸ்ரீமத். வெங்கட்ரமண பாகவதர் அவர்களின் 245 வது ஜெயந்தி இசை விழா
வாலாஜாபேட்டை ஸ்ரீமத். வெங்கட்ரமண பாகவதர் அவர்களின் 245 வது ஜெயந்தி இசை விழா (சென்னை ) மார்ச் 22 .8. 2026 ஞாயிற்றுக்கிழமை வாலாஜாபேட்டை ஸ்ரீமத். வெங்கட்ரமண… - திருச்சித்ரகூட ராமாயணம் தமிழில் பதம் பிரித்து
741 ## அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் * அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி * வெங்கதிரோன் குலத்துக்கு ஓர்… - ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி
ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா Bhuvanagiri Sri Venkata Ramana Bagavathar 244 th Jayanthi Vaizha ஆலயதரிசனம் அறக்கட்டளையின் சார்பில் ஸ்ரீமாந்…
