Bodhaayana Amavasya 2021 புண்ணியம் தரும் போதாயன அமாவாசை 2021
நாளைய தினம்(5.10.21) போதாயன அமாவாசை மற்றும் கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி. அதாவது தேய்பிறை செவ்வாய் சதுர்த்தசி திதியில் வருகின்ற பொழுது அதற்கு இப்படி ஒரு பெயர். நாளை பூமி காரகனாகிய செவ்வாயை வணங்குவதன் மூலமாக பூமிச்செல்வமும் மன தைரியமும் உத்தியோகமும் கிடைக்கும் அல்லது விருத்தியாகும். சகோதரர்கள் ஒற்றுமையுடன் வாழும் பாக்கியம் கிடைக்கும். பூதேவி நாச்சியாரை பூ ஸூக்தம் சொல்லி வணங்க வேண்டும் .
மஹாளய வழிபாட்டில் நாளைய தினம் “சஸ்திரஹத மஹாளயம்” என்பார்கள். அதாவது கூர்மையான ஆயுதங்களால் காயம் அல்லது விபத்து ஏற்பட்டு இறந்த முன்னோர்களை நற்கதி அடையச் செய்யும் நாள். அப்படி நம் குடும்பத்தில் யாரும் இல்லை என நினைக்க வேண்டாம். ஏதாவது ஒரு தலைமுறையில் இருந்தாலும் கூட, அல்லது நமக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் அப்படி இருந்தாலும் சரி, அவர்களை நினைத்து நற்கதி அடைய வழிபடலாம். தில தர்ப்பணம் செய்யும் வாய்ப்பு இருப்பின் அவசியம் செய்யவும்.
அதற்கு அடுத்த நாள் மஹாளயம்.

அமாவாசை படையல் போடுவது என்று ஒரு முறை இருக்கிறது.
அமாவாசை படையல் என்று எளிய மக்கள் போடுகின்ற படையலைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அமாவாசையன்று வீடு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் கோலம் போடக்கூடாது. காரணம் அது பித்ருகளுக்கே உரிய நாள்.
அன்று காலையில் எதுவும் சாப்பிடக்கூடாது.
முன்னோர்கள் புகைப்படம் போட்டு வைத்திருந்தால், அந்தப் படத்தை சுத்தம் செய்து, ஒரு பலகையின் மீது சுத்தமான துணியை விரித்து, அதில் வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு, பூச்சரத்தை சூடி, தெற்கு முகமாக வைக்கவேண்டும்.
வடக்குச் சுவரில் சாய்த்து வைக்கலாம்.

ஒற்றைத் திரி விளக்கை ஏற்றவும். நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றலாம். ஒரு பெரிய நுனி இலையில்( நமக்கு வலது புறமாகவும் படத்துக்கு இடது புறமாகவும்) பிரத்தியேகமாக சமைத்த உணவு பதார்த்தங்களை வைக்கவும்.
காய்கறி, கூட்டு, பொரியல், அரிசிச்சோறு, அப்பளம், வடை, பாயாசம் என என்னென்னவெல்லாம் நீங்கள் படைப்பீர்களோ , அவற்றையெல்லாம் வைக் கவும்.
தூப தீபங்கள் காட்டவும் .
அதற்குப் பிறகு, ஒரு சிறு பாத்திரத்தில் இலைக்கு அருகில் தீர்த்தத்தை வைக் கவும்.
படைத்து முடித்தவுடன் வேறு ஒரு இலையில் இந்தப் பதார்த்தங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்து, கலந்து காகத்திற்கு வைத்துவிட்டு, அதன் பிறகு நீங்கள் சாப்பிடலாம்.
இந்த உணவை முன்னோர்கள் ஏற்றுக் கொள்வதன் குறியீடுதான் காகம் வந்து அந்த உணவை சாப்பிடுவது.
சிலர் குடும்பத்தில் பழக்கம் இருக்காது .
வழக்கப்படி இதனை பின்பற்றலாம்.
எமனுடைய வாசலில் காக்கை யார் யாரெல்லாம் இந்த பூஜையைச் செய்கிறார்கள் என்று பார்க்குமாம்.
காசிக்கு பக்கத்தில் கயா என்று ஒரு தலம் உண்டு. முன்னோர்கள் பிராத்தனைக்கு சிரார்த்தம் என்று பெயர் .
கயா க்ஷேத்ரம் (Gaya Temple) மகிமை வாய்ந்த முக்கியமான பித்ரு தீர்த்தம் ஆகும்.
கயா க்ஷேத்திரத்தில் அனைத்துத் தீர்த்தங்களின் ஸாந்நித்தியம் உள்ளது .
இங்கு உள்ள அக்ஷய வடம் மூன்று உலகங்களிலும் பிரசித்தமானது என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.
கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.
கயையில் பிண்ட தானம் செய்த பிறகு மாதா பிதாக்களின் வார்ஷீக ச்ரார்த்தம் (வருடாந்திர நினைவு நாள் செய்யவேண்டியதில்லை என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. இது சரியன்று.
ஆண்டுதோறும் செய்யும் சிரார்த்தத்தால் மாதா பிதா, மற்ற பித்ருக்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் பெற்றுக்கொண்டு நமக்கு ஆசீர்வாதம் செய்கிறார்கள் கயாவில் பல்குனி நதிக் கரை, விஷ்ணு பாதம், ஜகந்நாத மந்திர் (விஷ்ணு பாதம் சமீபம்) ப்ரேத சீலா, உதயகிரி, அக்ஷய வடம் முதலான இடங்களில் பிண்டப் பிரதானம் செய்யும் வழக்கம் உண்டு.
கயையில் 64 வகையில் முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்கிறார்கள். பல்குநி நதி, அஷயவடம், விஷ்ணுபாதம் தவிர பின்வரும் தலங்கள் தரிசிக்கப் படவேண்டியவை.
(1) ஜகந் நாத மந்திர்- லக்ஷ்மீநாராயணர் (கதாதரர்) கோயில்,
(2) முண்டப்ருஷ்டா– விஷ்ணு பாதத்திற்குத் தென்திசையில் 12 கைகளுடன் அருள்பாலிக்கும் முண்ட ப்ருஷ்டாதேவி.
(3) ஆதி கயா – இங்குள்ள ஒரு சிலையில் பிண்டதானம் செய்கிறார்கள். இங்கு பூமி மட்டத்திற்குக் கீழே பல மூர்த்தங்கள் உள்ளன.
(4) தௌத பாதம் – இங்கும் பிண்டதானம் செய்கிறார்கள்.
(5) காக பலி – இங்கு ஒரு பழைமையான ஆலமரம் உள்ளது. இங்கு காகபலி, இயமபலி ஆகிய சடங்குகள் செய்கிறார்கள்.
(6) பஸ்மகூட்– கோப்ரசார்:
கயையின் தெற்குவாசலின் வைதரணி சரோவர் பக்கம் ஒரு சிறிய குன்றில் ஜனார்த்தனன் கோயில் உள்ளது. சற்று தூரத்தில் மங்களா தேவி கோயில் உள்ளது..
(7)மங்கள கௌரி கோயில் :
தெற்கு வாயிலின் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. சற்று மேலே சென்றால் அவிமுக்தேச்வரநாத் கோயில் உள்ளது. தனக்கு கொள்ளி போட, சிரார்த்தம் செய்ய சந்ததியில்லாதவர்கள் தனக்காக எள் இல்லாமல் தயிர் கலந்த மூன்று பிண்டங்களை இங்கு அளிக்கிறார்கள்.
அங்கே காக்கைக்கு பிண்டம் வைக்க ஒரு பாறை உண்டு.
அதற்கு காகசிலா என்று பெயர்.
அங்கே அவர்கள் நாம் தரும் பிண்டத்திற்கு காத்திருப்பார்களாம்.
இதற்குப் பிறகு நீங்கள் அன்னதானங்களோ மற்ற தானங்களோ தரலாம்.
ஏழை எளியவர்களுக்கு ஆடை வாங்கித் தரலாம் .
எளிய முன்னோர் வழிபாட்டில் தான் எத்தனை மேன்மை!
இந்த மேன்மையை உணர்ந்தால் நாம் இந்த வழிபாட்டை தவிர்க்காமல் செய்வோம்.
இந்த வழிபாட்டைச் செய்வதன் மூலமாக கண்ணுக்குத் தெரியாத செயல் தடை கள் நீங்கி நமக்கு வெற்றி கிடைக்கும் என்பது உண்மையிலும் உண்மை.
- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்

- தேரழுந்தூர் தேவாதிராஜன் Therazendur Devadhirajan

- கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் கலி வடிவமா?

- தினமும் எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi Daily ?

- கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி – Kannadasan – Krishna Bhakthi

- செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சென்ற ஆண்டு நடந்தவை


