கடோத்கஜன் Ghatotkacha – in Tamil
Who was Ghatotkacha? What was role of Gatotkacha in Mahabharatha ?
முனைவர். இரா.வ.கமலக்கண்ணன், காஞ்சிபுரம்.
வீமனுக்கும் இடும்பிக்கும் இடும்ப வனத்தில் பிறந்தவன் இவன். ஐவரும் ஷேத்திரகீயம் செல்லப் பிரியும்போது, கடோற்கசன் வணங்கி,“நான் என் தாயுடன் இடும்பவனம் செல்வேன்; நீங்கள் நினைக்கும் போது வந்து உதவுவேன்” – என்று கூறி விடைபெற்றான்.
பின்னர் இந்திரப் பிரத்த நகரில் தருமர் இராசசூய யாகம் செய்ய 4 திக்கிலும் தம்பியரை ஏவி, அரசர்களை வென்று வரச் சொன்னார். அதன்படி தெற்குத் திக்குக்குச் சென்ற சகாதேவன் அங்குள்ள அரசரை வென்று தென் கடலை அடைந்து கடோற்கசனை நினைத்தான். (Ghatotkacha) அவன் உடனே அங்கு வர,’மகனே! இலங்கை சென்று வீபீடணரிடம் கப்பம் வாங்கி வா” எனக்கூற, அவனும் சென்று கேட்டான். விபீடணரும் மகிழ்ந்து, யாக சாலையில் வைக்க 14 தங்கப் பனைமரங்களைக் கொடுத்தனுப்பினார்.
அதன்பின் வனவாச காலத்தில் திரௌபதி விரும்பியபடி குபேரனுடைய சைத்ர ரதம் என்னும் நந்தவனத்தில் உள்ள சௌகந்திக மலரைக் கொணர வீமன் தருமரிடம் சொல்லாமல் சென்று, அங்கு பாதுகாவலராக இருந்த ஓர் இலட்சம் அரக்கருடன் போரிட்டான். சிலர் குபேரனிடம் சென்று இவ்விதம் கூற, அவன் தன் மகன் உருத்திரசேனனை அனுப்பி வீமன் விரும்பிய மலர்களைக் கொடுத்துவிட்டு வரச் சொன்னான்.
இந்நிலையில் தம்பியைக் காணாத தருமர் வருந்தி, கடோற்கசனை நினைக்க, அவன் வந்து தருமரைத் தூக்கிச் சென்று குபேரனின் நந்தவனத்தில் சேர்த்தான். பின் அனைவரும் வனத்திற்குத் திரும்பினர். இதே போல மீண்டும் ஒரு முறை கடோற்கசன் வந்து உதவினான்.
பாரதப் போரில் 13 ஆம் நாள் அபிமன்யு வீர மரணம் அடைய, விசயன் வருந்தி,“செயத்திரதனை மறுநாள் மாலைக்குள் கொல்வேன்” – எனச் சபதம் செய்ய, அன்று இரவு கண்ணபிரான் விசயனை அழைத்துக் கொண்டு கயிலையை அடைந்து, புதிய வில்லையும், பாசுபதக் கணையையும் பெற்று வந்தார். இதற்கிடையில் தருமர் கடோற்கசனைப் பார்த்து, “நாளை மாலைக்குள் செயத்திரதனைக் கொல்வதாக விசயன் சபதம் செய்திருப்பதைத் துரியனிடம் சொல்லிவிட்டு வா” என்று தூதாக அனுப்ப எண்ணிக் கூறியபோது, அவன்,“பெரியப்பா! இது அறமா? என் தம்பி அபிமன்யுவை இன்று பகலில் நடந்த போரில் பலரும் சேர்ந்து கொன்றார்களே! இப்போது இச்செய்தியை நான் சென்று சொன்னால், அவர்கள் செயத்திரதனை எங்காவது ஒளித்து வைத்து விடுவார்களே, என் சித்தப்பா என்ன செய்வார்? அவர் செய்த சபதம் தவறுமே!” என்றான்.
அது கேட்ட தருமர்,“மகனே! நீ தயங்க வேண்டாம். பகைவராயினும் நாம் உண்மையைச் சொல்வதே தருமம்.; விசயன் நாளை எவ்வாறேனும் செயத்திரதனைக் கொல்வான்; ஐயம் வேண்டாம்” – என்று அறத்தைக் கூறி அனுப்பி வைத்தார்.
கடோத்கஜன் தூது
அதன்படி அவன் துரியனின் பாசறையை அடைந்து,”நாளை மாலைக்குள் என் சிற்றப்பா சயத்திரதனைக் கொல்வார்; இல்லையெனில் தீயில் விழுந்து மாள்வார்” என்று கூறினான். அது கேட்ட துரியன்,”ஏ! அரக்கனே! என் மைத்துனன் கணையால் நாளை விசயன் மாள்வது உறுதி என்று போய்ச் சொல்” – என்றான். கர்ணன் நான் ஒருவனே அனைவரையும் அழிப்பேன் என்றான்.
அது கேட்ட கடோற்கசன், “மூடர்களே! உங்கள் அனைவரையும் நான் ஒருவனே அழிப்பேன்; ஆனால் தருமர் என் வலிமையைக் காட்ட வேண்டாம் என்று கூறினார். அதனால்தான் பொறுக்கிறேன்” என்றான். அது கேட்ட துரியன், “அரசர்களே! இவன் அரக்கி மகன். எனவே அரசராகிய நாம் இவனுடன் பேசுவது தகாது” என்று கேவலமாகக் கூறினான். அது கேட்ட கடோற்கசன் நகைத்து,“ஆம் நான் அரக்கி மகன்தான்; ஆனால் அரக்கராகிய நாங்கள் என்ன செய்ய மாட்டோம் தெரியுமா?”
அந்த உரை மீண்டிவன் கேட்டாங்கவனை நகைத்துரைப்பான்
அரக்கரேனும்சிந்தனையில் விரகெண்ணார்
செருமுகத்தில் வஞ்சனையும் செய்யாரையா
வெந்திறல் கூர் துணைவருக்கு விடமருத்தார்
நிரைக்கழுவில் வீழச்செல்லார்
உந்து புனலிடைப் புதையல் ஓரூரில்
இருப்பகற்றார் உரையும் தப்பார்
செழுந்தழல்வாழ் மனைக் கொளுவார்
செய்ந்நன்றி கொன்றறியார் தீங்கு பூணார்
அழுந்து மனத்தழுக்குறார்
அச்சமுமறடறருளின்றிப் பொய்ச்சூதாடார்
கொழுந்தியரைத் துகிலுரியார்
கொடுங்கானம் அடைவித்துக் கொல்லஎண்ணார்
எழுந்தமரில் முதுகிடார் இவை எல்லாம்
அடிகளுக்கே ஏற்ப என்றான்.
(வில்லிபாரதம் – 13 ஆம் போர்ச்சருக்கம், 243, 244.)
துரியோதனன் செய்த தீய செயல்களை எல்லாம் வரிசையாகக் கூறி, இவை எல்லாம் அடிகளுக்கே” ஏற்பவை என்று எள்ளி நகைத்துக் கூறித் திரும்பினான். (பாரதத்தில் 4 தூது. 1) உலூகன் 2) சஞ்சயன் 3) சுவாமி 4) கடோற்கசன்). பின்னர் மறுநாள் (14) சயத்திரதனை அருச்சுனன் கொல்ல, வெகுண்ட துரியன் இரவிலும் போர் செய்யச் சொன்னான். அவ்விரவில் கடோற்கசன், அலம்பன், அலாயுதன் ஆகிய அசுரர்களைக் கொன்றான். கர்ணனை எதிர்த்து மாயையால் நெருப்பு மழையைச் சிந்தினான்.
பல ஆயுதங்களை வானிலிருந்து விழச் செய்தான். அவனுடைய ஆற்றலை ஒருவனாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. எனவே கர்ணனிடம், “கர்ணா! இன்று இரவு கழிவதற்குள் இந்தஅரக்கன் நம் சேனை முழுவதையும் அழித்து விடுவான்; எனவே இந்திரன் உனக்குத் தந்த சக்தி ஆயுதத்தை இவன் மேல் ஏவிக் கொல் – என்று வெகுண்டு கூறினான். அதன்படி கர்ணன் செய்ய, கடோற்கசன் மாண்டு வீழ்ந்தான். இங்ஙனம் வீரப்போர் புரிந்து இவன் வீர மரணம் எய்தினான்.
The story of Bhima Mahabharata
வீமன் – பீமன் – மஹாபாரதம்
குந்தி தேவிக்கு வாயுவின் அருளால் பிறந்தவன். துரியோதனனை விட ஒரு நாள் பெரியவன். மிகுந்த பலம் உடையவன். எனவே இவனை சிறு பருவத்திலேயே கொல்வதற்குத் திட்டமிட்டான் துரியன். கண்ணன் அருளால் அவற்றினின்றும் தப்பினான் வீமன்.
வீமனுக்கு முரட்டு சுபாவம் உண்டு. துரியன் பாண்டவர்களை அழிக்க அரக்கு மாளிகையை அமைத்தான். வீமன் (Bheema) அதற்குத் தீயிட்டுவிட்டு தா குந்திதேவி உட்பட அனைவரையும் சுரங்கப்பாதை வழியே வெளிக்கொணர்ந்து காத்தான்.
இடும்பனைக் கொன்றான். அவன் தங்கை இடும்பியை மணந்து கடோர்கஜன் என்கிற புதல்வனைப் பெற்றான். பகாசுரனைக் கொன்றான்.
பாண்டவர் ஐவரும் திரௌபதியை மணந்தனர். இந்திரப்பிரஸ்தம் நகரில் இருக்கும் பொழுது சுவாமி (கண்ண பரமாத்மா) துணையுடன் சென்று ஜராசந்தனைக் கொன்றான்.
திக்விஜயம் செது கிழக்கு திசையிலுள்ள மன்னர்களை வென்று நிரம்ப நிதிகளைக் கொணர்ந்தான். ராசசூய யாகம் முடிந்த பின் துரியன் அரண்மனையைச் சுற்றிப் பார்க்கையில் ஓர் குழியில் தவறி விழுந்தான்.
அதுகண்ட வீமனும் திரௌபதியும் எள்ளிச் சிரித்தனர்.இது பகையை வளர்த்து.
பின் சூது போரில் தருமர் அனைத்தையும் இழந்த போதும் அவர் உரையை ஏற்று அமைதியானான். திரௌபதிக்கு நேர்ந்த அவமானம் கண்டு துரியன் முதலிய நூறு பேரையும் கொல்வதாகச் சபதம் செதான். பின் வனவாசகாலத்தில் திரௌபதி விரும்பிய சௌகந்திக மலரைக் கொணர குபேரன் நகருக்குச் செல்லும் வழியில் அனுமனுடைய ஆசியைப் பெற்றான்.
பின் சைத்ர ரதம் என்னும் நந்தவனத்தை அடைந்து மலர்களைக் கொயும் போது பலரைக் கொன்றான். பின் தருமர் அவனை கடோர்கஜன் துணையுடன் வந்து அழைத்துச் சென்றார். இதன் பின் சடாசுரனைக் கொன்றான்.
பின் மீண்டும் ஒரு மலரைக் கொண்டு வர குபேரனின் நகரை அடைந்தான். அங்கு குபேரனின் சேனாதிபதி மணிமாறன் என்பவனைக் கொன்றான். தருமர் மீண்டும் வந்து அவனை அழைத்துச் சென்றார்.
வனவாசத்தில் இருந்த இவர்களை அவமானப்படுத்த வந்த துரியனையும் பிறரையும் கந்தர்வர்கள் பிணித்து அழைத்துச்செல்ல தமையன் சோல்படி அவர்களை மீட்டான்.
ஐவரும் அமித்ரமுனிவனத்தில் தங்கியிருந்தபோது அந்த முனிவருக்கு உரிய நெல்லிக்கனியை அர்ஜூனன் பறித்தான்.
அங்கிருந்த முனிவர்கள் அமித்ரமுனிவர் சாபமிடுவாரே என்று கூற ஐவரும் கண்ணபிரானை வேண்ட, அவர் எழுந்தருளி உங்கள் ஒவ்வொருவரின் உள்ளக் கருத்தை கூற, இப்பழம் மறுபடி சென்று பொருந்தும் என்று கூறினார்.
அதன் படி வீமன் சோன்ன கருத்து.
பிறன் மனையவரைப் பெற்ற தா எனவும் பிறர் பொருள் எட்டியே எனவும்
பிறர் வசைஉரைத்தல் பெருமை அன்று எனவும் பிறர் துயர் என் துயர் எனவும்
இறுதியே வரினும் என்மன கிடக்கை எம்பிரான் இவை என உரைத்தான்
மறலியும் மடியுமாறு மல்லியற்கை வலிமை கூர் வாயுவின் மைந்தன்
இப்படி தன்னுடைய உள்ளக் கருத்தை ஒவ்வொருவரும் கூறியதால் கண்ணன் திருவருளோடு அப்பழம் மறுபடி மரத்தில் போப் பொருந்தியது. அவர்கள் சாபத்திலிருந்து தப்பித்தனர்.
பின் விராட நாட்டில் அரண்மனை சமையல்காரனாக இருந்தான். பல மல்லர்களை வென்றான். திரௌபதியிடம் தவறாக ஆசைப்பட்டு அவளுக்கு தீங்கு செய முனைந்த கீசகனையும் அவன் தம்பிகளையும் கொன்றான்.
பின் பாரதப் போர் நடைபெற்றது. தான் சபதமிட்டபடி நூற்றுவரையும் கொன்றான். போர் முடிந்தபின் ஐவரும் கண்ண
னோடு அத்தினாபுரம் சென்று திருடராட்டிரனைப் பணியும் பொழுது, ்பெரியப்பா! நான் வீமன் வணங்குகிறேன்சு என்று கூற, தன் 100 புதல்வர்களையும் கொன்றவன் என்று திருதராட்டிரன் வெகுண்டான்.
வீமனை இறுக்கமாகத் தழுவிக்கொன்று விட வேண்டும் என்று நசுக்க முனையும்போது, கண்ணன் வீமனை விலக்கி இரும்புப் பதுமையை அவன் எதிரே நகர்த்த, குருடன் அதை வீமன் என எண்ணி ஆவேசத்துடன் தழுவ, அது பொடிப்பொடி ஆயிற்று. திருதராட்டிரன் பின் வருந்தி பீமனை உள்ளபடி தழுவினான்.
பின் அனைவரும் அபிமன்யு மகன் பரீக்ஷித்துக்கு முடி
சூட்டிவிட்டு வனத்தை அடைந்து சுவர்க்கம் செல்லும் வழியில் திரௌபதி சகாதேவன் நகுலன் விசயன் முதலியோர் வரிசையாக இறக்க வீமன் அதன் காரணத்தை தருமரை வினவினான். அப்போது தருமர் சொன்னார்.
திரௌபதி அர்ஜுனனுக்கு அதிக அன்பு கொண்டிருந்தாள். சகதேவனுக்குத் தான் மிகவும் கற்றவன் என்ற எண்ணம்.
நகுலன் தான் அழகன் என்ற கர்வம் கொண்டிருந்தான். விசயன் தானே பெரிய வில்லாளி என்ற செருக்குடன் இருந்தான் என்று பதில் கூறினார்.
பின் வீமனும் சாயும் பொழுது நீமிகுந்த பலசாலி என்ற கர்வம் கொண்டிருந்தாய் என்று கூற அவனும் சாந்தான். பின் அனைவரும் பரமபதம் அடைந்தனர்.
