Sri Vinayagar 108 Potri Mantram with Tamil Lyrics
ஸ்ரீ விநாயகரின் 108 போற்றி மந்திரங்கள் தமிழ் வரிகளுடன்
அகிலத்தின் முதல்வா போற்றி
அனைத்துயிர் தலைவா போற்றி
அப்பனே அம்மையே போற்றி
அம்மை அப்பனின் பிள்ளையே போற்றி
அகம் தனில் இருப்பாய் போற்றி
அன்புக்கு அருள்வாய் போற்றி
அச்சத்தை நீக்குவாய் போற்றி
அன்பே அருளே போற்றி
அறுமுகன் அண்ணனே போற்றி
அருங்குணம் கொண்டவா போற்றி
அரசர்க்கு அரசனே போற்றி
அரசடி அமர்ந்தவா போற்றி
அகந்தை அழிப்பவனே போற்றி
அருகம்புல் விரும்புவாய் போற்றி
ஆருயிர் காப்பாய் போற்றி
ஆதார வித்தே போற்றி
ஆறு கரை அண்ணனே போற்றி
ஆல மரம் அமர்ந்தாய் போற்றி
ஆட்கொண்ட தெய்வமே போற்றி
ஆனைமுகக் கடவுளே போற்றி
ஆம் பயன் நீயே போற்றி
இன்பத்தின் இன்பமே போற்றி
இம்மைப் பயன் நல்குவாய் போற்றி
இனியநற் கடவுளே போற்றி
இனி துணை நீயே போற்றி
இச்சகம் காப்பாய் போற்றி

இசைபாட அருள்வாய் போற்றி
இடர்களை தீர்ப்பாய் போற்றி
ஈசனின் குமரா போற்றி
ஈடிலா வேந்தே போற்றி
ஈர நெஞ்சினாய் போற்றி
உண்மைப் பொருளே போற்றி
உலகத்தின் தலைவா போற்றி
உள்ளத்தில் உறைபவனே போற்றி
உயர் பொருளாய் ஆனவனே போற்றி
ஊழ்வினையை தீர்ப்பாய் போற்றி
ஊரெங்கும் இருப்பாய் போற்றி
எளிமைக்கோர் இறைவா போற்றி
என்னுயிர் காப்பாய் போற்றி
எங்கும் நிறைந்தவனே போற்றி
என்னுயிர்த் தலைவனே போற்றி
ஏழைப் பிள்ளையார் போற்றி
ஏற்றம் தருபவனே போற்றி
ஏன் என்று கேட்பாய் போற்றி
ஏர் மலர் சூடுவாய் போற்றி
ஐங்கரனே ஐயா போற்றி
ஐயமின்றி தொழுதோம்
ஐந்தெழுத்தான் திருமகனே போற்றி
ஒப்பிலா மணியே போற்றி
உலகத்தின் ஒளியே போற்றி
ஓம் கார திருவே போற்றி
ஓர் தந்தம் உள்ளவா போற்றி
ஒண் தமிழாய் ஆனாய் போற்றி
ஆயுத எழுத்தே போற்றி
ஆயுளைக்காப்பாய் போற்றி
கருணையின் வடிவே போற்றி
கற்கண்டாய் இனிப்பாய் போற்றி
கணங்களின் நாதனே போற்றி
கணேசா விநாயகா போற்றி
கண்கண்ட தெய்வமே போற்றி
கற்பக விநாயகா போற்றி
கலி வலியைத் தீர்ப்பாய் போற்றி
கந்தனிக் தமையனே போற்றி
காருண்ய மூர்த்தியே போற்றி
கார்மேக வள்ளலே போற்றி
கிருபைக்கும் கிருபையே போற்றி
கீர்த்தியை உடையவனே போற்றி
குறையெல்லாம் தீர்ப்பாய் போற்றி
குணக்குன்று நீயே போற்றி
குற்றங்கள் பொறுப்பாய் போற்றி
குறையற்ற வாழ்வு தா போற்றி
கோவிந்தன் மருமகனே போற்றி
கோடு ஒன்று உடையாய் போற்றி
சங்கட ஹரனே போற்றி
சர்வ நலம் தருவாய் போற்றி
சதுர்த்தியின் நாயகா போற்றி
சத்குரு நாயகா போற்றி
சதுர்வேத பொருளே போற்றி
சமய சஞ்சீவியே போற்றி
சங்கரி மைந்தா போற்றி
ங்க்தியின் ங்க்தியே போற்றி
சரணமாய் வந்தோம் போற்றி
சித்தி புத்தி தலைவா போற்றி
சித்தம் நிறைந்தவா போற்றி
கணங்களின் நாயகா போற்றி
சுந்தர உருவமே போற்றி
சுடர்விடும் ஒளியே போற்றி
சுப்ரமணியன் தமையனே போற்றி
தும்பிக்கையான் துணையே போற்றி
நம்பிக்கை கொண்டோம் போற்றி
நானிலம் காப்பாய் போற்றி
நலமுடன் வைப்பாய் போற்றி
நற்பொருள் தருவாய் போற்றி
நன்மையின் நாயகா போற்றி
நலம் தரும் வள்ளலே போற்றி

ஞானத்தின் வடிவே போற்றி
நான்மறை பொருளே போற்றி
ஞானத்தின் முதல்வா போற்றி
தெ#வத்தின் குழந்தையே போற்றி
தேவாதி தேவனே போற்றி
தொந்தி வயிறு கடவுளே போற்றி
தோன்றா நற்துணையே போற்றி
நீதியைக் காப்பாய் போற்றி
நேசனே ஈசனே போற்றி
பக்தரின் துணைவா போற்றி
பரிபூரண தெய்வமே போற்றி
பாரதம் தந்தவா போற்றி
பிரணவப் பொருளே போற்றி
பிள்ளையார் கடவுளே போற்றி
பிறவியை அறுப்பாய் போற்றி
பேசும் தெய்வமே போற்றி
புண்ணிய மூர்த்தியே போற்றி
புகழ் தரும் கருணையே போற்றி
பேரருள் மிக்கவா போற்றி
பெருங் கருணை வள்ளலே போற்றி
மஞ்சளில் வாழ்வாய் போற்றி
மகிமையின் வடிவே போற்றி
மங்கலம் தருவாய் போற்றி
மகா கணபதி அருள்வாய் போற்றி
விக்கினம் தீர்ப்பாய் போற்றி
விநாயகக் கடவுளே போற்றி
முக்கண்ணன் மகனே போற்றி
மூஞ்சூறு வாகனனே போற்றி
வல்லப கணபதியே போற்றி
வரசக்திவி நாயகா போற்றி
விக்னேஸ்வரனே போற்றி
வியாசருக்கு உதவினாய் போற்றி
வெள்ளை மனமே போற்றி
வெற்றியை அளிப்பாய் போற்றி
வேழ முகக் கடவுளே போற்றி
வேலவனின் தமையனே போற்றி
வாழ்வாங்கு வாழவே போற்றி
வையத்தை வாழ்விப்பாய் போற்றி
ஓர் துணை நீயே போற்றி
ஓம் கார பொருளே போற்றி போற்றி
ஸ்ரீ கணேச சரணம்! Sri Ganesa Saranam!



