புரட்டாசி முதல் வாரம் ராசி பலன் – பகுதி – 2
Purattasi 1 Week Raasi Plan Weekly Astrology Predictions in Tamil – Part – 2
(18.9.2021 முதல் 24.9.2021 வரை)
துலாம் (Libra)
ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்கிறார். அவரோடு 22ம் தேதி பாக்கியாதிபதி புதன் இணைகிறார். இருவரும் ராசிக்கு 7ம் இடத்தைப் பார்க்கிறார்கள் .2ல் கேது. பணவரவு நன்றாக இருக்கும். குரு பகவா னால் பொருளாதார முன்னேற்றம், தொழில் முன்னேற்றம் குறை யில்லை.எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும்.. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.4ம் இடச் சனியால் நற்பலன்கள் உண்டு.குடும்பத்தில் நிம்மதியும் மன மகிழ்ச்சியும் கூடும். வீடு, வாகனம் வாங்கலாம்.
விரயத்தில் சூரியன் செவ்வாயோடு இணைந்து 6ம் இடம் பார்ப்பது நல்லதல்ல.சில நேரங்களில் உடல் சோர்வையும் மனச் சோர் வையும் தரும்.8ல் ராகுவும் இதை உறுதிப் படுத்துகின்றார். தவிர்க்க முடியாத விரயங்கள்,குறிப்பாக அரசாங்க வழியில் அல்லது தந்தை வழியில் ஏற்படுத்தும்.எச்சரிக்கையாக இருக்கவும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை மாலை விளக்கேற்றி “ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.”என்ற ஸ்லோகத்தை சொல்லி வழிபட சுகங்கள் கூடும்.வேதனைகள் குறையும். லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும்.
——————————————————————————————————————–
விருச்சிகம் (Scorpio)
விரயத்தில்(12ல்) சுக்கிரன் .7க்குரிய அவர் 12ல் ஆட்சி என்பதால் மறையவில்லை.எனவே இல்லற வாழ்வில் சிக்கலில்லை. லாபஸ் தானத்தில்,புதனும் செவ்வாயும் சூரியனும் இணைந்து இருக் கிறார்கள்.3ம் இடத்தில் குருவும் சனியும் . இணைந்து இருக் கிறார்கள். பொருளாதார நிலை உங்கள் கட்டுப்பாட்டில் இருக் கும். பெரிய சரிவு ஏற்படாது. புதிய முயற்சிகள் வெற்றியாகும்.கூட்டு தொழில் வாய்ப்பு வரலாம்.உத்தியோகம், தொழில் போன்றவை சிறப்பாகவே இருக்கிறது. காரியத் தடைகள் நீங்கும். குரு பார்வை யால் வேலை உத்தியோகங்களில் சிறந்த உற்சாகமும் மகிழ்ச் சியும் பெறுவீர்கள். முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும்.
ராசியில் உள்ள கேது சிற்சில கவலைகளை உண்டாக்கும்.எதிர்காலம் குறித்து பெரும் யோசனை வரும்.திடீர் திடீர் என்று கோபப்படுவார் கள். அமைதியின்மை அலைக்கழிக்கும். பேச்சிலும் செயலிலும் கவனத்தோடு இருங்கள்.
பரிகாரம்:
மாலை கோயிலுக்குச் செல்லுங்கள்.வீட்டில் விளக்கேற்றி “ மலை யிலங்குஞ் சிலையாக வேகம் மதில் மூன்றெரித்து அலையிலங்கும் புனற் கங்கை வைத்து அவ்வடிகட்கிடம்,இலையிலங்கும் மலர்க் கைதை கண்டல்வெறி விரவலால்,கலையிலங்குங் கணத் தினம், பொலியுங் கடற் காழியே ‘என்ற சீர்காழி பாடலை மனம் உருகப் பாட மகேசன் அருள் கிடைக்கும்.
தனுசு (Saagitarius)
இவ்வாரமும் ராசிக்கு இரண்டில் சனி வக்ர கதியில் இருக்கிறார். அவ ரோடு ராசியாதிபதி குரு வக்கிர நிலைபெற்று இருக் கிறார்.தொழில் ஸ்தானத்தில் செவ்வாயோடு சூரியனும் புதனும் இணைந்து பலமாக இருக்கிறார்கள். உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெறும் வாரம் இது. ராசியாதிபதி சனியோடு இருக்கும் நிலையில் வருமானம் எதிர்பார்த்தபடி இருக் கும். சிக்கல்கள் தீரும். லாபஸ்தானமான 11-ல் உள்ள சுக்கிரனும் சுகத்தையும் வெற்றி யையும் தருவார். பதவி உயர்வு இருப்பினும் பொறுப்புகள் அதிகரிக்கும்.இட மாற்றமும் இருக்கும்
குருவின் பார்வையும் சனி யின் பார்வையும் வக்கிர கதி பார்வைகள் என்பதால் எதிர்பாராத செலவு,ஆரோகியக் குறைவு ஏற்படும். சில காரியத் தடைகளையும் உண்டு.நேவ் திட்டமிடல் அவசி யம். வேலைகளில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற் படும்.சோர்வு விரக்தி கூடாது
பரிகாரம்
தினம் ஓரிரு நிமிடமாவது குலதெய்வத்தை நினைத்துக் கொள் ளுங்கள். “பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாய ச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காம தேனவே”என்ற குரு ராகவேந்திரர் சுலோகத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.துன்பம் வந்தாலும் விலகிவிடும்.
——————————————————————————————————————–
மகரம் (Capricon)
குரு மகரத்தில் நுழைந்து விட்டார்.ஆனால் அங்கே வக்கிரம். சனி ராசியில் ஆட்சி ,வக்கிரம். 9ல் சூரியன். ஒன்பதில் புதனும் செவ்வாயும். இவ்வாரம் சந்திரன் நிலையால் 21,22,23 தேதிகளில் மகிழ்ச்சி ஆரோக்கியம் அதிகரிக்கும்.உத்தியோக உயர்வு கிடைத் தாலும், பொறுப்புகளும் அலைச்சலும் அதிகரிக்கும். சிலர் கூடுதல் பொறுப்புகளும் ஏற்க வேண்டியிருக்கும். 11-ல் உள்ள கேது இவ் வாரம் உங்களுக்கு பல பிரசினைகளை எதிர்கொள்ளும் ஆற்றலைத் தருவார்.. குடும்பத்தில் சந்தோஷமும் குதூகலமும் இருக்கும்.செலவு அதிகரிப்பது போலவே பணமும் கிடைக்கும்.5க் குடைய சுக்ரன் 10ல் ஆட்சி பெறுவதால் பெரியோர் அருள் ,தெய்வ அருள் உண்டு. புதிய முயற்சிகள் வெற்றி யடையும்.
ராசியில் உள்ள வக்கிர சனி , ஐந்தில் ராகு உங்கள் செயல்களில் பிரேக் போட்டு தடைகளை தருவதில் மும்முரமாக இருப்பார். உணவு தான் உங்களுக்கு பிரச்சினை. வேலை விஷயங்களில் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.வயிறு சம்பத்தப்பட்ட கோளா றுகள் வரும்.
பரிகாரம்
புரட்டாசி மாதம் ஏதேனும் ஒரு சனிக்கிழமை திருப்பதி பெருமாளை நினைத்து படையல் போடுங்கள்.மாவிளக்கு போட்டு வழிப்பாடு நடத்துங்கள்.சனி,குரு தோஷங்கள் விலகும்.சஞ்சலங்கள் குறையும்.
——————————————————————————————————————–
கும்பம் (Aquarius)
ராசிநாதன் சனி 12ல்.தற்சமயம் ஏழரை சனி ஆதிக்கம் என்பதால் துன்பங்களைத் தாங்கும் திறன் அதிகரித்திருக்கும்.எனவே துன்பங்கள் பெரிதாகத் தெரியாது. சுக்கிரன் 9 இல் ஆட்சி நிலையில் இருப்பதால் நல்ல தனவரவு ஏற்படுத்துவார். கணவன் மனைவி உறவுகளில் சுமுகமான , இனிமையான நிலையை ஏற்படுத்துவார். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை நடை பெறும். வேலையிலும்,தொழிலிலும் சில புதிய திட்டங்கள்,புதிய பொறுப்புகளும் உருவாகும்.
ராசியாதிபதி 12 ல் உள்ளதால் தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.நாலில் உள்ள ராகு உறவுகளில் விரோதத்தை ஏற் படுத்தும்.உங்கள் செயல்களே உங்களை மாட்ட வைக்கும்.சந்திரனின் நிலை உங்கள் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது. 8ல் உள்ள சூரியனும் இதை உறுதி செய்கிறது. பணிச்சுமையும் ஏற்படும். கடன் வாங்கி புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.இப்போதைக்கு சரியாக வராது.தந்தை வழி உறவுகளிலும் சிக்கல் வரும்.கவனம் தேவை.
பரிகாரம்:
ஒவ்வொரு நாளும் விளக்கேற்றி வைத்து, “சங்கடம் நீக்கிடச் சடுதி யில் வந்திடும் சங்கரி சௌந்தரியே!கங்கண பாணியன் கனி முகங் கண்டநல் கற்பகக் காமினியே!ஜெயஜெய சங்கரி கௌரி க்ரு பாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!”என்ற துக்க நிவாரண துதியைச் சொல் லுங்கள்.துக்கங்கள் தொலையும்.நிம்மதி நிலவும்.
——————————————————————————————————————–
மீனம் (Pisces)
ராசியாதிபதி குரு இதுவரை விரயத்தில் (12ல்)இருந்தார் .இப்போது லாபஸ்தானத்தில்(11ல்) சனியோடு இணைந்து நீச பங்கம் பெறுகிறார் என்பது சாதகமான நிலை.அதோடு 3ல் உள்ள ராகு உங்கள் காரி யங்களில் வெற்றியைத் தருவார். ஏழில் உள்ள புதன் இவ்வார முற் பகுதி மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும். 11ல் சனி ஆட்சியாக இருப்பதும் குரு இணைவதும் உங்கள் புதிய முயற்சிகளை முன் னோக்கித் தள்ளி வெற்றி அடையச் செய்யும். நீங்கள் நினைத்தது நடக்கும். எனவே இவ்வாரமும் உங்களுக்கு ஓர் சீரான வாரமே.
7ல் உள்ள சூரியன் நீங்கள் மனைவியுடன் உள்ள உறவை உங்கள் செயலால் சிக்கலாக்கி கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறது. புதனும் 22ம் தேதி 8ம் மிடம் நகர்கிறார்.எனவே உங்கள் நியா யத்தை பேசாமல் உறவுகளை விட்டுக் கொடுத்துச் செல்ல வேண் டும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரிகாரம்
மாலை விளக்கேற்றி,இந்த துதியைச் சொல்லுங்கள்.”திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர விண் மணியாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்று வாம்!”.இயன்றால் செவ்வாய்க்கிழமை மாலை, பிள்ளையார் கோயில் சென்று, ஒரு அர்ச்சனை செய்யுங்கள்.அனைத்தும் நலமாகும்.

