மகா பரணி தீபம் ஏற்றி மங்கள வாழ்வு பெறுங்கள்! Maha Bharani Deepam 2021 in tamil
நாளைய தினம் மகா பரணி (Maha Bharani 2021 ) (24.9.21). இப்பொழுது மகாளயபட்சம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் மகா பரணி மிக விசேஷம். அன்று திருதியை திதி வருகிறது. அற்புதமான நாள். வெள்ளிக்கிழமையாக இருக்கிறது. பரணி நட்சத்திரம் அதைவிட அற்புதம்.
பரணி நட்சத்திரத்திற்கு உரிய கிரகம் சுக்கிரன். சுக்கிரனாகிய வெள்ளிக்கும் மஹாளயத்திற்கும் – பரணிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம்.

தொடர்பு உண்டு.
பரணி கால தேவதையாகிய எமனின் நட்சத்திரம். காலதேவனின் நட்சத்திரமான பரணியில் அவன் காலடியில் உள்ள முன்னோர்களை விடுவிப்பது மிக முக்கியமான விஷயம்.
அன்றைக்கு செய்ய வேண்டியது.
- முன்னோர்களுக்கு தில தர்ப்பணம்.
- முன்னோர்கள் நற்கதி அடையவும் சத்கதி அடையவும் பரணி தீபம் ஏற்றுவது சிறப்பு.
தர்பணத்தால் அவர்கள் பசி தாகம் அடங்கும். ஆனால் பரணி தீபத்தால் அவர்கள் இருக்கும் இருட்டான இடத்திற்கு வெளிச்சம் கிடைக்கும்.

இந்த இரண்டையும் செய்பவர் வாழ்க்கையிலும் வெளிச்சம் கிடைக்கும்.
அவர்களுக்கு தாகசாந்தி செய்வதால், நம்முடைய பசி தாகம் அடங்கும். ஏழ்மை மறையும். நமக்கும் இருட்டில் ஒரு வழி பிறக்கும்.
இதில் இன்னொரு சூட்சுமம் இருக்கிறது.
ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?
விளக்கு ஏற்றினால் இருட்டு போய்விடும். நரகம் என்பது இருட்டு. ஒளி என்பது சொர்க்கம்.
முன்னோர்களுக்கு சொர்க்க வாழ்வு கிடைக்க வேண்டும் என்றால் வெளிச்சம் தேவை. அதற்கு ஒளி ஏற்றுகின்றனர்.
தட்சிணாயன காலம் என்பது இரவு. தட்சிணாயனம் என்பது தெற்கு. தெற்கு திசையை குறிக்கும் இந்த தட்சிணாயனத்தில் தான் புரட்டாசி வருகிறது. எனவேதான் தென்திசை தேவதையான எமனுக்கு பரணி தீபம் ஏற்றுகிறோம்.
முக்கியமாக சிலர் வீட்டில் துர் மரணங்கள், அதாவது தற்கொலை விபத்து போன்ற மரணங்கள், அகால மரணங்கள் போன்றவை நிகழ்ந்திருக்கும். அதிர்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும்.
இப்படிப்பட்டவர்கள் மகா பரணி தர்ப்பணத்தை அவசியம் செய்ய வேண்டும். அன்று எம தீபம் ஏற்ற வேண்டும்.
எங்கே தீபம் ஏற்றலாம்?

1 வீட்டில் உயரமான இடம் இருந்தால் அங்கே ஏற்றலாம். சாயங்காலம் ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் ஏற்றலாம்.
2.வசதி இல்லை என்றால் பரவாயில்லை. வீட்டில் சுவாமி இருக்கும் பூஜை அறையில் , பக்கத்திலேயே முன்னோர்களை நினைத்து அகல் விளக்கு ஏற்றலாம். இது ரொம்ப எளிமையானது. மஹா சக்தி வாய்ந்தது .
ஆலயத்திலோ வீட்டிலோ எட்டு திசைகளிலும் எட்டு தீபம் ஏற்றி அந்தந்த திசைக்கு உரிய தேவதையை வணங்கிச் செய்யலாம்.
கிழக்கே இந்திரன், தென்கிழக்கு அக்கினி ,தெற்கு எமன், தென்மேற்கு நிருதி, மேற்கு வருணன், வடமேற்கில் வாயு, வடக்கு குபேரன், வடகிழக்கு ஈசானன் என்று என்று எட்டு திசைகளை கூறுவர், அன்றைய நாளில் முக்கியமாக தாமரைத் தண்டு திரி விளக்கு ஏற்றுவது நல்லது.
இதனால் ஏற்படும் நன்மைகள் :
திருமணத் தடைகள் நீங்கும். சுபகாரியங்கள் நடக்கும். அகால மிருத்யு, விபத்து போன்ற சம்பவங்கள் நடக்காது.
தொழில் முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல லாபம் வரும். குடும்பம் விருத்தியாகும்.
இதை ஏற்றுவதற்கு என்று சில தலங்கள் உண்டு. ஸ்ரீ வாஞ்சியத்தில் எமதர்மராஜனுக்கு தனி சன்னதி உண்டு .அங்கேயே விளக்கு ஏற்றலாம். மார்க்கண்டேயனுக்காக இறைவன் ஆயுள்விருத்தி வரம் தந்த தலம் திருக்கடையூர். (Thirukadaiyur Temple)அங்கே எமபயம் நீங்க விளக்கு ஏற்றலாம். சனீஸ்வர சன்னதிகளில் விளக்கு ஏற்றலாம். காரணம், சனீஸ்வரனுக்கு அதிதேவதை எமன். திருச்சிக்கு அருகே மண்ணச்சநல்லூர். அந்த மண்ணச்சநல்லூர் கிராமத்துக்கு அருகே உள்ளது திருப்பைஞ்ஞீலி (Thiruppainjeeli Temple) என்னும் தலம். அங்கேயும் கால தேவனுக்கு சன்னதி உள்ளது .அங்கும் விளக்கு ஏற்றலாம்.
எனவே, இந்த அற்புதமான நாளில் மகா பரணி தீபத்தை ஏற்றி நம் முன்னோர்களின் ஆசியை பெறுங்கள். தொடர்ந்து இது போன்ற பல பதிவுகளுக்கு நமது இணைய தளத்தை Subscribe செய்து கொள்ளுங்கள்.
- வாலாஜாபேட்டை ஸ்ரீமத். வெங்கட்ரமண பாகவதர் அவர்களின் 245 வது ஜெயந்தி இசை விழா

- திருச்சித்ரகூட ராமாயணம் தமிழில் பதம் பிரித்து

- ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி

- மதுரகவி சுவாமிகள் – Madhurakavi Swamigal – Srirangam

- புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகளின் ஜெயந்தி விழா

- நமக்கான நல்ல நேரம் நாம் ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது?(Dec 3,2022)


