ஐப்பசி IV வாரம் ராசி பலன் – பகுதி – 2 Aippasi 1 Week Raasi Palan Weekly Astrology Predictions – Part 2
சிம்மம்
சாதகங்கள் :
ராசிநாதன் சூரியன் நீசத்தில் இருந்து மீள்வதால் இழந்த மன தைரியம் கிடைத்துவிடும். கலைத்துறையினருக்கும் அரசியல் வாதிகளுக்கும் முன்னேற்றமான வாரமே. சுக்கிரன், சனி, புதன் கிரக சஞ்சாரம் சாதகமாக வேலை செய்யும்.வேலை, பதவிகள் போன்ற நிலைகளில் பிரச்சனைகள் இல்லை. சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். திருமணம் சுப காரியம் உறுதியாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு வெகு காலம் எதிர்பார்த்த குழந்தை பாக்கியம் கை கூடி வரும்.

கவனம் தேவை:
வார இறுதியில் சந்திரன் நிலையால் ஆரோக்கிய குறைவு ஏற்படலாம்.உடல் நிலையில் மிக மிக கவனம் தேவை .வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ளவும்.தியானம் செய்யுங்கள்.திடமாக மன அமைதியோடு இருங்கள். கோயில்களுக்குச் செல்லுங்கள்.
பரிகாரம்
காலை பூஜை அறையில் கொஞ்சம் காய்ச்சிய பசும் பால் வைத்து நிவேதனம் செய்து, குலதெய்வத்தை நினைத்து, வணங்குங்கள். நிம்மதி அடைவீர்கள்.
——————————————————————————————————–
கன்னி
சாதகங்கள்:
ராசிக்கும் பத்துக்குடையவன், 2ல் செவ்வாய் சூரியனோடு இருப்பதால் குடும்பத்தில் குதூகலம் இருக்கும்.மகிழ்ச்சியான மன நிலை உற்சாகம் களை கட்டும். தள்ளிப்போன சுப காரியம் நடைபெறும் . சுக்கிரன் பார்வை உங்களுக்கு சந்தோஷத்தையும் வருமானத்தையும் தரும். அலுவலக வேளைகளில் உற்சாகம் இருக்கும்.புதிய வேலை வாய்ப்புகள் சிலருக்கு அமையும் .வேறு நல்ல வேலை என முயற்சி செய்தவர்களுக்கு சாதகமான பதில் வரும். லாபம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் உண்டு.
கவனம் தேவை
இவ்வாரமும் அலைச்சல் அதிகரிக்கும். வயிற்று உபாதைகள் வரலாம். சிறு மனக்குறை இருந்து கொண்டே இருக்கும்.செவ்வாய் சூரியன் இணைந்துள்ளதால் கோபம், டென்ஷன் அதிகரிக்கும். பேசும் போதும் நிதானம் அவசியம். முடிந்தால் அமைதியாக இருப்பதே நல்லது.8 முதல் 11ம் தேதிவரை இதில் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்
காலை சூரிய பகவானை தவறாது நமஸ்காரம் செய்யுங்கள். ஒரு அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி,மாலைநேரம் சுந்தரகாண்டம் அல்லது நாராயணியம் அல்லது அனுமன் கவசம் படியுங்கள்.
——————————————————————————————————–
துலாம்
சாதகங்கள்:
சுக்கிரன் மூன்றில் நல்ல நிலையில் உலவுவதால்(கோசாரப்படி 3 நல்ல இடம் ) வருமானம் திருப்திகரமாக இருக்கும்.ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.குடும்பத்தில் இணக்கமான சூழல் மலரும். புதிய வாகனங்கள் , வீடு போன்றவை வாங்கும் வாய்ப்பு சிலருக்கு உரு வாகும்.உங்களது பணித் திறன் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். மன குழப்பங்கள் நீங்கி வாழ்வில் நம்பிக்கை பிறக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும். கலைத்துறையினருக்கு சாதகமான வாரம். உறவுகள் நண்பர்களிடம் ஆதாயம் உண்டு. அரசியல் துறையி னருக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
கவனம் தேவை
வீண் அலைச்சல் ஏற்படலாம். கவலைகளை ஒதுக்கித் தள்ளுங் கள்.மனைவி மற்றும் குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். மனதைக் குழப் பிக் கொள்ளாதீர்கள். தேவையற்ற வாக்குறுதிகளை யாருக்கும் தர வேண்டாம். இரவுப் பயணத்தைத் தவிர்க்கவும்.8,9 ம் தேதிகளில் மிக கவனம் வேண்டும்
பரிகாரம்
இவ்வாரமும் தினமும் காலை மாலை இரு வேளையிலும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். ஸ்ரீ மகாலட்சுமியின் ஸ்தோத் திரங்களைச் சொல்லுங்கள். மங்களங்கள் பெருகும்.
——————————————————————————————————–
விருச்சிகம்
சாதகங்கள்:
மூன்றில் உள்ள குரு, புத்தி சாதுர்யத்தை தந்து வெற்றியைத் தேடிக் கொடுப்பார்.உங்கள் ராசிநாதன் செவ்வாய் நல்ல நிலையில் உள்ளார்.எதையும் சமாளிக்கும் திறன் உண்டு.2ல் சுக்கிரன், குரு வீட்டில் இருப்பதால் வருமானத்திற்கும் குறைவில்லை. சேமிப் புக்கும் வழி உண்டு .இவ்வாரமும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உறுதியாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.புதிய முயற்சிகளில் கவனம் போகும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு நிலம் அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் விருந்தினர் வருகை புரிவர்.
கவனம் தேவை
தந்தை உடல்நிலையில் கவனம் தேவை.காரணம், சூரியன் 12ல் நீசம். புதிய முயற்சிகள் இன்னும் சிறிது காலம் தள்ளி வைக் கவும். குடும்பத்தில் சிறு உரசல்கள் வரலாம்.8,9 தேதிகளில் கவனம் தேவை. வயிறு மற்றும் குடல் சம்மந்தப்பட்ட சிறு உடல் உபா தைகள் வர வாய்ப்புகள் உள்ளது. உணவு விஷயத்தில் கட்டுப் பாட்டுடன் இருங்கள்.சிறு சிறு உடற்பயிற்சி மூலம் ஆரோக் கியத்தை காத்துக் கொள்ளுங்கள்.அலட்சியம் வேண்டாம்.
பரிகாரம்:
மாலை நேரத்தில் ஒரு அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, திரிபோட்டு, பூஜை அறையில் பெருமாள் தாயாரை வைத்து வழிபடுங்கள். லக்ஷ்மி ஸ்தோத்திரம் சொல்வது மிகுந்த நன்மையைத் தரும்.
- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்

- அலகிலா விளையாட்டு – Alagila Vilayattu

- வடநாட்டு திவ்ய தேச புனிதப் பயண அனுபவம்

- வராக அவதாரம் ஏன் சிறப்புடையது? ஸத்ஸங்கம் கேள்வி – பதில்

- ஸ்வாமி தேசிகன் உபதேசங்கள் Desikan Upadesangal – Sri.D.K.Srinivasan

- சிறுநீரகங்களை பாதுகாப்போம்! Protect your Kidney – Dr K Sampathkumar

