
கார்த்திகை II வாரம் ராசி பலன் – பகுதி – 1 Kaarthigai 2 Week Raasi Palan Weekly Astrology Predictions – Part 1
இந்த வாரம் இப்படித்தான்
((27.11.2021 முதல் 3.12.2021 வரை)
இவ்வார கிரகநிலைகள்:
ரிஷபத்தில் ராகு ,துலா ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் புதன், சூரியன்,கேது, தனுசு ராசியில் சுக்கிரன், மகரத்தில் சனி, கும்பத்தில் குரு
மேஷம்
சாதகங்கள்:
குரு பகவான் தன்னுடைய நீச ராசியில் இருந்து கும்பராசிக்கு பெயர்ந்து விட்டார். ஒருவிதத்தில் இது லாப ராசி, நட்பு ராசி என்றாலும் இன்னொரு விதத்தில் மேஷத்துக்கு இந்த இடம் பாதகஸ்தானம் என்பதை நினைவில் கொண்டு மேஷராசிக்காரர்கள் செயலாற்ற வேண்டும். 10-ஆம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று இருப்பதும் செவ்வாய் பகவான் உங்களுடைய 7-ஆம் இடத்தில் இருக்க, சனி பார்ப்பதாலும், நீங்கள் நடத்துகின்ற தொழில் முன்னேற்றத்தை நோக்கி நகரும். குடும்ப பிரச்சனைகள் சுமுகமாக இருக்கும். அது உங்கள் செயல் திறனை அதிகப்படுத்தும். பணப் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மேல் அதிகாரிகளின் ஆதரவு நீடிக்கும்.
கவனம் தேவை:
எட்டாம் இடத்தில் கேது, அதோடு சூரியன் என்பதால் சில எதிர்பாராத துன்பங்களை ஏற்படுத்தும். நண்பர்கள் சிலரால் மன கஷ்டம் ஏற்படும். 27 மற்றும் 28ம் தேதிகளில் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. அன்றைய தினம் நீங்கள் விரும்பத்தகாத சில சம்பவங்களும் உடல்நலக் குறைபாடும் ஏற்படக்கூடும்.தந்தை பிள்ளைகளின் உறவில் சிறு கருத்து வேறுபாடு ஏற்படலாம். பூர்வீக சொத்தில் பாதிப்பு இருக்கும். பொருள் இழப்பும் ஏமாற்றமும் ஏற்படலாம்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை மாலை நேரங்களில் முருகன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்...

—————————————————————————————————————
ரிஷபம்
சாதகங்கள்:
இதுவரை இருந்த கடுமையான நெருக்கடிகளிலிருந்து விடுதலை ஆகும் காலம் இது. ஆனால் பத்தாம் இடத்தில் உள்ள குரு தொழில் ரீதியாக சில சங்கடங்களைத் தரும் என்பதால் எதையும் நன்கு திட்டமிட்டுச் செய்ய வேண்டும். சனி அனுகூலமான இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு.உங்கள் உழைப்புக்கேற்ற பலனை பெறு வீர்கள். கலைஞர்கள் அதிக வாய்ப்பினை பெறுவார்கள். அரசியல் வாதிகளுக்கும் சற்று சாதகமான வாரம் இது.
கவனம் தேவை :
நிதிப்பற்றாக்குறை ஏற்படும் என்பதால் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். அவசியமில்லாத செலவுகளைத் தவிர்க்க வேண்டும். உடல் நலத்தில் மிகவும் கவனம் தேவை. 27,28ம் தேதிகளில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். 29, 30 தேதிகளில் சில காரியத் தடைகள் ஏற்படலாம். பிறரை நம்பும் போது எச்சரிக் கையோடு இருக்கவேண்டும். குடும்பத்திலும் நண்பர்களிடத்திலும் சின்ன சின்ன சண்டைகளும் பிரச்சினைகளும் ஏற்படும். வாகனங் களை ஓட்டும் போது மிகுந்த கவனம் தேவை.
பரிகாரம்:
பிரதோஷ வேளையில் சிவன் சன்னதிக்குச் சென்று வணங் குங்கள்.பசுவுக்கு கீரை,பழங்கள் தரவும்.
————————————————————————————————————-
மிதுனம்
சாதகங்கள்:
வாரத்தின் முதல் இரு தினங்களில் நீங்கள் எதிர்பார்த்த பணவரவு வரும். மனதில் தைரியம் பிறக்கும்.சுக்கிரன், ஒன்பதில் உள்ள குரு குடும்ப உறவுகளை மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்ள உதவுவார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது. வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். குரு உங்களுக்கு சில சாதகங்களையும் தருவார். நீங்கள் பட்ட துன்பங்களுக்கு குரு பெரிய ஆறு தலை தருவார். தந்தையின் வழி உதவிகளும் கிடைக்கும். கலைத் துறையினர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும்.
கவனம் தேவை
எட்டுக்குரிய சனி ஆட்சி பலத்தோடு இருப்பதால் சில வீணான வதந்திகளால் பாதிக்கப்படுவீர்கள். மேலதிகாரிகளிடம் தேவையற்ற உரசல்கள் ஏற்படும் என்பதால் அவசியமில்லாத பேச்சு தவிர்க்கப்பட வேண்டும். தேவையில்லாத அலைச்சல் ஏற்படும் என்றாலும், திட்டமிட்ட அதனை குறைத்துக் கொள்ள வேண்டும். 29 மற்றும் 30ம் தேதிகளில் உடல்நலத்தில் மிகுந்த கவனம் தேவை .
பரிகாரம்:
சனிக்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் பெருமாள் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்து வாருங்கள். மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவது நல்லது .
———————————————————————————————————-
கடகம்
சாதகங்கள்:
கும்பத்தில் இருக்கும் குரு பகவான் உங்கள் விரய ஸ்தானத்தையும், இரண்டாம் இடத்தையும் பார்ப்பதால் வரவும் செலவும் சரியாகவே இருக்கும். நீங்கள் முயன்று சேமித்தால் தான் உண்டு. 29 மற்றும் 30 தேதிகளில் நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு நிகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆயினும் இந்த வாரம் சற்று சுமாரான வாரமே.
கவனம் தேவை:
ஏழாம் இடத்தில் சனி, எட்டாம் இடத்தில் உள்ள குரு, நாம் விரும்பாவிட்டாலும் சில கஷ்டங்களை இழுத்து வந்து விடும். குடும்பத்தில் இணக்கம் இல்லாத சூழல் வெளியிடங்களிலும் துன்பத்தை ஏற்படுத்தும். டிசம்பர் மாதம் 1,2 தேதிகளில் உடலில் ஆரோக்கிய குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்க எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இவ்வாரம் சற்று தடைபடும். அலுவலகத்தில் எதிர்பாராத வம்புகள் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் எச்சரிக்கையோடு வேலை செய்யவும். யாரையும் நம்பி பணத்தைத் தர வேண்டாம். பிறர் தரும் உறுதிமொழிகளை நம்பி காரியத்தில் இறங்க வேண்டாம்.
பரிகாரம்:
மாலையில் பூஜை அறையில் ஏற்கனவே ஏற்றிய விளக்கோடு ஒரு சிறு அகல் விளக்கு ஏற்றுங்கள். உங்கள் குலதெய்வத்தை நினைத்து வழி விடுங்கள். நரசிம்மர் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.