மஹாளய பட்சம் (Mahalaya Paksham)நடந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 16 நாட்கள். எந்தச் சிரார்த்தம் செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒருவன் மகாளய சிரார்த்தத்தை செய்யத் தவறக் கூடாது. காரணம் அன்று பித்ருக்கள் நேரடியாகவே நம்மைத் தேடி வந்து நாம் தருகின்ற பிதுர் நிவேதனத்தை எடுத்துக்கொண்டு நமக்கு ஆசி வழங்குகின்றார்கள்.
வேறு நாட்களில் நாம் தருகின்ற தர்ப்பணம் எள்ளும்நீரும் அவர்களைத் தேடிப் போகின்றன.. அவர்களே நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளும் காலம் மஹாளயம் .இது வருடத்திற்கு ஒரு முக்கியத்துவம் தரும் நிகழ்வாகும்..
ஒருவர் வீடு தேடி வந்து பசி தாகத்தோடு நிற்கும் பொழுது உணவு தராவிட்டால் எத்தனை பிழை?அதுதான் சாபமாக மாறுகிறது.
இப்பொழுது பொதுவாக மஹாளயத்தில் சிரார்த்தம் செய்ய வேண்டுமா? இல்லை தர்ப்பணம் செய்ய வேண்டுமா? என்ற ஒரு கேள்வி எழும்.
மஹாளய சிரார்த்தம் என்றுதான் பெயர். தினசரி எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் செய்தாலும் ஒருநாள் முழுமையான சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுகின்றார்கள்.
அன்றைக்கு 6 பேருக்கு இந்த சிரார்த்தம் செய்யவேண்டும். ஒன்று மாத்ரு வர்க்கம், இரண்டு பித்ரு வர்க்கம், மூன்றாவது காருண்ய வர்க்கம். நான்காவது மாதாமக வர்க்கம், ஐந்தாவது விஸ்வே தேவர். ஆறாவது மகா விஷ்ணு.
பகவான் விஷ்ணு சிரார்த்தத்தை காக்கும் பெருமாள்(சிராத்த தேவதா சிராத்த ஸம்ரக்ஷக ) என்பதால் இலைகளை போடும்பொழுது ஒருபக்கம் விஸ்வ தேவரையும் ஒருபக்கம் விஷ்ணுவையும் வைத்து இடையில் பித்ரு வர்க்கத்தை வைப்பார்கள்.
இதற்கு சில வழிமுறைகள் எல்லாம் உண்டு. இதிலும் தினசரி என்னென்ன காய்கறிகள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் ? எதை விலக்கலாம்? என்றெல்லாம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன . இந்த 15 நாட்கள் மட்டுமாவது அதனை விலக்குவது நல்லது.
விலக்க வேண்டிய காய்கறிகள்:
முட்டைகோஸ், நூல்கோல், முள்ளங்கி, கீரை, உருளைக்கிழங்கு, கேரட், கத்தரி, வெண்டை, காலிஃபிளவர், பட்டாணி, வெங்காயம், பூண்டு, பெருங்காயம், தக்காளி, சௌசௌ, சுரைக்காய், வெண்பூசணி, முருங்கைக்காய், பீட்ரூட், பச்சை மிளகாய்.
சேர்க்க வேண்டியது
அவரைக்காய், புடலங்காய், பயத்தங்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், சக்கரவள்ளி கிழங்கு, சேனைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, பிரண்டை, மாங்காய், இஞ்சி, நெல்லி, மாங்காய் இஞ்சி, பாகற்காய், மிளகு, கருவேப்பிலை, பாசி பருப்பு, உளுந்து, கோதுமை, வெல்லம்.
இதை மனதில் கொண்டு நம்முடைய தினசரி உணவை இந்த 15 நாட்களுக்கு நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்
- வாலாஜாபேட்டை ஸ்ரீமத். வெங்கட்ரமண பாகவதர் அவர்களின் 245 வது ஜெயந்தி இசை விழா

- திருச்சித்ரகூட ராமாயணம் தமிழில் பதம் பிரித்து

- ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி

- மதுரகவி சுவாமிகள் – Madhurakavi Swamigal – Srirangam

- புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகளின் ஜெயந்தி விழா

- நமக்கான நல்ல நேரம் நாம் ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது?(Dec 3,2022)


