Miracles of Hindu Saints – Sri. V. AnanthaNarayanan
வி. அனந்தநாராயணன்,புத்தகத்தின் விலை ரூபாய் 175. பக்கங்கள் 128. பிரதிகள் பெற வி. அனந்தநாராயணன், ஊடூச்t , 108, கோசி டவர்ஸ், வெங்கடசாமி ரோடு (மேற்கு), ஆர்.எஸ். புரம், கோயம்புத்தூர் -640 002. மொபைல் : 75 399 58 159
நண்பர் அனந்த நாராயணன் கோயம்புத்தூரில் வசிப்பவர். நல்லவற்றை ரசிப்பவர். ரசித்தவற்றை பிறருக்கு பயனுள்ள வகையில் சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்.
அவரும் சரி, அவருடைய துணைவியாரும் சரி, அவருடைய பிள்ளைகள், மருமகள்களும் ச,ரி நல்ல பண்பாடு உடையவர்கள். பக்தி மிக்கவர்கள். குறிப்பாக ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தர்கள்.

திரு அனந்த நாராயணன் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், தம்முடைய ஓய்வு காலத்தை வீணே போக்காது ,தான் பெற்றஆன்மீக அறிவை, எளிமையாக மற்றவர்க்கு தரவேண்டும் என்கின்ற நோக்கத்தில் இந்த நூலை எழுதி இருக்கிறார்.
இந்த நூலை அவர் ஆங்கிலத்தில் எழுதியதற்குக் காரணம், பெரும்பாலும் இன்று தமிழைவிட ஆங்கில நூல்களைப் படிப்பவர்கள் உலகெங்கிலும் அதிகம் இருக்கிறார்கள்.
இப்போதுள்ள கல்வி அமைப்பில் ஒரு தமிழ் நூலை படிப்பதைவிட எளிமையாக எழுதப்பட்ட ஆங்கில நூலை படிக்கக்கூடிய குழந்தைகள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பதால், இந்த நூலை அவர் ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கிறார்.
மிக எளிமையான ஆங்கில வார்த்தைகள். ஒரு கதை போல சொல்லப்பட்ட சம்பவங்கள்.

நம்முடைய பாரத தேசத்தின் ஆன்மிகத்தை வளர்த்த , ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர்,ஸ்ரீ வியாச ராஜர்,மத்வாச்சாரியார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், சீரடி சாய்பாபா, காஞ்சி மகாபெரியவர், நாயன்மார்கள், புரந்தரதாசர், போன்ற மகான்களின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களை மிக எளிமையான ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறார்.
இந்தப் புத்தகம் எல்லோரும் படிக்கக்கூடிய பெரிய எழுத்துக்களில் படங்களோடு அச்சிடப்பட்டுள்ளது.
இந்த நூலுக்கு அளிக்கப்படும் வரவேற்பைப் பொறுத்து அடுத்தடுத்த நூல்களை ஆசிரியர் ஆங்கிலத்திலும் தமிழிலும் படைத்தளிக்க இருக்கிறார்.
நல்ல செயல்கள் எப்பொழுது வளரும் என்றால், அச்செயல்களை அங்கீகரித்து ஊக்குவிக்கின்ற போது வளரும்.

ஆசிரியர் தம்முடைய வாழ்வின் மிகச்சிறந்த தொண்டாக , பல நாள் வெகு சிரத்தையோடு எழுதி, இந்த நூலை பதிப்பித்து நமக்கு அளித்திருக்கிறார்.
ஆசிரியருடைய முயற்சி வெற்றிபெற வேண்டும்.
அவருடைய நூல்களை, பல படிகள் வாங்கி, தங்கள் குழந்தைகளுக்கு பிறந்தநாள் பரிசாக அளிக்க வேண்டும். ஆசிரியரின் பணி வாழ்க .
இந்த புத்தகத்தை அமேசான் இல் வாங்க இங்கு கிளிக் செய்யவும். Buy this Miracles of Hindu saints book in Amazon. Click here https://tinyurl.com/5n93uwbc
ஆர்டர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு. தொடர்புக்கு : மொபைல் : 75 399 58 159
- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்

- தேரழுந்தூர் தேவாதிராஜன் Therazendur Devadhirajan

- கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் கலி வடிவமா?

- தினமும் எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi Daily ?

- கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி – Kannadasan – Krishna Bhakthi

- செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சென்ற ஆண்டு நடந்தவை

