AVR
சேலத்தில் நேற்று நமது குரு சித்ர கூடம் ஸ்வாமிக்கு, 89 வது அகவை விழா .
அடியேன் கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
எத்தனை மா மனிதர்…எத்தனை சாதனைகள்..எத்தனை திருப்பணிகள்.எத் தனை உபன்யாசங்கள் ,
அவர் எழுதிய நாதமுனிகள் வைபவம் 600 பக்கங்கள்.அதில் 110 பக்கங்கள்,தமிழ் பண்களைப் பற்றி…
அவர் எழுதிய பிராட்டி வைபவம்,ஸ்ரீ ராமானுஜர் வைபவம்,(இவை அடியேன் பதிப்பித்த நூல்கள்),திருச் சித்ர கூட புராணம்,என எழுதிக் குவித்தவர் …
இன்னும் எழுதிக்கொண்டிருப்பவர்…நாலாயிரத் திவ்ய பிரபந்த பாட பேதங்கள் குறித்து பெரிய ஆய்வு நூல் (ஸ்ரீ எம்.எஸ்.வெங்கடாச்சாரியார் உதவியோடு )வருகிறது.
இலக்கிய நோக்கில் திருமங்கை ஆழ்வாரின் ஆறு பிரபந்தங்கள்…அடடா..அற்புதம்…
ஒவ்வொரு நூலுக்கும் ஒரு D.lit., தர வேண்டும்.இன்னும் தமிழாக அரசின் கலைமாமணி விருது கூட கிடைக்கவில்லை.
ஆட்சியாளர்களுக்கு எப்படித்தெரியும்?சொன்னவர்கள் சொன்னால்தானே புரியும்.
ஒருவருக்கு ஒரு விருது தரும் போது அதே துறையில் விருது பெறுபவரை விட தகுதியானவர் யாராவது இருக்கிறார்களா என்று கொஞ்சம் விசாரிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்…
ஏதோ அடியேன் சொல்லிவிட்டேன்.நேற்று அவரைப் பற்றி சொல்லி மகிழ்ந்தேன்.அப்போது பாடிய கவிதை..
ஆடியில் ரோகிணியில் அவதரித்தவர்
அனவரதம் கோவிந்த னடிபணிந்தவர்
தேடியமாமுதலாக திகழ் கின்றவர்
தெய்வ நெறி திக்கெங்கும் வளர்க்கின்றவர்
கோடியில் ஒருவர் என குவலயத்தில்
குன்றெடுத்த பிரானெனவே நாளும் நாளும்
ஓடி ஓடி உழைக்கின்ற மாமனிதர்
உயர்குரு நம் ஏ வி ஆர் வாழ்க, வாழ்க
மூன்றெழுத்து வைணவத்தின் உயிர் மூச்சு
முப்பொழுதும் சேதனனுக் கதுவே பேச்சு
ஈன்றெடுத்த தாயை விட மேலாம். கருணை
எப்பொழுதும் காட்டுகின்ற திருமகள் கேள்வன்
தோன்றிய நம் ஆழ்வார்கள் பாசுரங்கள்
தொலையாத உடையவரின் பெருமைக்கெல்லாம்
சான்றாகத் திகழ்கின்ற தத்துவ ஞானி
தவம் போலத் திகழ் சித்ரகூடத் தேனீ
வீண் பேச்சு எப்போதும் நாவிலில்லை
விளையாத விதை மணிகள் ஏதும் இல்லை
“காண், இவரைப் போல” என ஊரார் மெச்ச
கறை யில்லா நல்வாழ்வு வாழ்ந்து இன்று
தோன்றுகின்ற வான் சுடராய் சேலம் வந்து
துடிப்பாக பிறந்தநாள் காணும் செல்வர்
சான்றோர், நம் ஏ வி ஆர் க்கு பல்லாண்டு
சரம்சரமாய் சொல்லிடுவோம் வாழ்க என்று
Post Views: 438