நாராயண குரு ஜெயந்தி(20 8 2024 செவ்வாய்க்கிழமை)
கேரளத்தின் மறுமலர்ச்சித் தந்தை எனப் போற்றப்பட்டவர்.சிறந்த கல்வி யாளர்.ஸ்ரீ நாராயண குரு கேரள மாநிலம் செம்பழஞ்சி என்ற சிற்றூரில் புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்தார் (1856). பிறந்த ஊரிலேயே கல்வி கற்றார். அய்யாவு ஆசான் என்ற ஹடயோகியிடம் யோகம் கற்றார். ஆன்மிகத்தில் நாட்டம் பிறந்தது.23-வது வயதில் ஊரைவிட்டு வெளியேறி, தமிழ்நாட்டுக்கு வந்து துறவு பூண்டார். வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், அறுவகை மந்திரங்கள், பவுத்த, சமண மரபுகள், மூவகை வேதாந்தங்கள், இந்திய, வெளிநாட்டு தத்துவங்கள் ஆகியவற்றை கற்று நிபுணத்துவம் பெற்றார்.1888-ல் அருவிக்கரை என்ற சிற்றூரில் குருகுலம் நிறுவினார். ஏழை, அநாதைக் குழந்தைகளுக்குப் பல இடங்களில் பள்ளிகளை நிறுவினார்.ஏராளமான சீடர்கள் இவரை நாடி வந்தனர். தன் சீடர்களை ஒன்று சேர்த்து ‘தர்ம சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். 1913-ல் அத்வைத ஆசிரமம் தொடங்கினார்.ஆன்மிகவாதி, சமூக சீர்திருத்தவாதி, சொற்பொழிவாளர், கல்வியாளர் என்பதோடு நல்ல எழுத்தாளராகவும் மிளிர்ந்தார். 1897-ல் மலையாளத்தில் இவர் இயற்றிய ‘ஆத்மோபதேச சதகம்’ சிறந்த இலக்கியமாகவும், இவரது தலைசிறந்த தத்துவ நூலாகவும் போற்றப்பட்டது. இவரது சீர்திருத்த கொள்கைகளின் விளைவாக உருவானதுதான் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபை. மகாத்மா காந்தி இவரை ‘அவதார புருஷர்’ எனப் போற்றினார்.சிறந்த தத்துவஞானியான ஸ்ரீ நாராயண குரு 1928-ம் ஆண்டு தனது 72-வது வயதில் மகா சமாதி அடைந்தார்.அவர் பிறந்த நாள் இன்று.
