சிறுநீரகங்களை எப்படிக் காப்பாற்றுவது. கொரானா நோய்த்தொற்று காலத்தில் கொரானா எப்படி சிறுநீரகங்களை பாதிக்கிறது என்பதைப் பற்றி எல்லாம் மிகவும் விளக்கமாக நம்முடைய அன்பர்கள் அறிந்து கொள்வதற்காக ஒரு தொடர் கட்டுரையில் எழுத முன்வந்திருக்கிறார் நம்முடைய ஆலய தரிசன வாசகரான மருத்துவர் ஸ்ரீமாந்.கே. சம்பத்குமார் Dr. K. Sampath Kumar, MD., DNB, D.M (Nephro)., – Senior Consultant & HOD.
இவர் மதுரை மீனாட்சி மிஷன்(Meenakshi Misson Hospital & Research Center) ஆஸ்பத்திரியில் சிறுநீரகத் துறையில் தலைமை பொறுப்பில் இருப்பவர். பல பட்டங்களை வாங்கியவர். உலகளவில் அதிக ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவர். இதனாலேயே வெளிநாடுகளில் உள்ள மருத்துவ அறிஞர்களால் பாராட்டப்பட்டவர். இதுவரை இவர் வெற்றிகரமாக 1700 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைச் (1700 Kidney re plantation Surgeries)செய்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான (சுமார்4.5லட்சம்) சிறுநீரக ரத்த சுத்திகரிப்பை வெற்றிகரமாக செய்திருக்கிறார். நம்முடைய ஆலய தரிசனத்தின் நீண்டகால வாசகரும் புரவலருமான ஸ்ரீமான். கிருஷ்ணசாமி அவர்களுடைய திருக்குமாரன் தான் இவர். கொரானா காலத்தில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட பலரை வெற்றிகரமாகக் கையாண்டு பிழைக்க வைத்திருக் கிறார்.

இந்தச் சாதனைக்காக அரசாங்கத்தினுடைய விருதுகளை பெற்றிருக்கிறார். முதலமைச்சர் கையால் பதக்கம் பாராட்டு வழங்கப்பட்டி ருக்கிறது. அதைப்போலவே மதுரை கலெக்டர் அவர்கள் இவரை மிகவும் பாராட்டி கௌரவித்திருக்கிறார். இந்த இதழில் இருந்து அவருடைய கட்டுரை தொடர்ந்து ஆலய தரிசனத்தில் வெளியிடப்பட இருக்கிறது. அனைவரும் படித்துப் பயன்பெறலாம்.
சிறுநீரகம் (KIDNEY) kidney problem symptoms in Tamil
பொதுவாக மக்களிடம் இருதய வியாதிகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் பற்றிய புரிதல் உண்டு. ஆனால், சிறுநீரக நோய்கள் பற்றிய விழிப்புணர்வு குறைவு.இது வருந்தத்தக்கது. ஏனெனில் சிறுநீரக நோய்கள் 10ல்ஒருவருக்கு ஒளிந்து இருக்கிறது.
“நீரின்றி அமையாது உலகு” என்றார் வள்ளுவர். “சிறுநீரின்றி அமையாது உயிர்” என்பது உண்மை. பல கோடி வருடங்களுக்கு முன் உயிரினங்கள் நமது பூமியில் தோன்றி பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று மனித குலமாக நடமாடுகிறோம். இவை அனைத்துக்கும் அடிநாதமாக அமைந்தன சிறுநீரகங் கள் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கிறது அல்லவா! ஆனால் அதுதான் உண்மை.

சிறுநீரகங்கள் உயிரினங்களுக்கு உயிர் வாழ, உடலின் சீதோஷ்ண நிலை மற்றும் பௌதிக ரசாயன கலவைகளை சீராக வைத்துக் கொள்ள உதவும் என்ற முக்கியமான உறுப்புகள் ஆகும். (Guardians of internal environment).
இவை நாள்தோறும் 150 லிட்டர் இரத்தத்தை சுத்திகரித்து அதிலிருந்து யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருள்களை சிறுநீர் மூலம் வெளியேற்று கின்றது. நமது உணவில் புரதச் சத்துக்கள், முட்டை, பால், பருப்பு வகைகள், இறைச்சி, மீன் முதலியவைகளில் அதிகமாகச் செரிந்து காணப்படுகின்றன. இவை உடலுக்கு வலுவூட்டும் சத்துக்கள்.ஆனால் இந்தப் புரதச் சத்துக்களின் கழிவுப் பொருள்தான் யூரியா போன்ற உப்புக்களும், கிரியாட்டின் போன்ற கழிவுகளும். இந்தக் கழிவுகள் உடனுக்குடன் உடலில் இருந்து வெளியேற வேண்டும்.இந்தப்பணியைத்தான் சிறுநீரகங்கள் செய்கின்றன.
சிறுநீரகங்களின் அமைப்பு (Structure of Kidneys):
சிறுநீரகங்கள் நமது வயிற்றின் முன் பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக அவரை விதை வடிவில் அமைந்துள்ளன. இந்தச் சிறுநீரகங்களின் உள்ளே ஏறத்தாழ 10 லட்சம் மிக மெல்லிய நெப்ரான்கள் எனப்படும் நுண் சல்லடைகள் உள்ளன. இதன் மூலம் ரத்தம் செல்லும் பொழுது கழிவுப் பொருள்கள் மிகத்துல்லியமாக பிரித்தெடுக்கப்படுகின்றன.
சிறுநீரகங்கள் உடல் ஆரோக்கியத்திற்குச் செய்யும் முக்கிய பணிகள்.
Important Activities of Kidneys for Healthy Life :
1.கழிவு பொருள் வெளியேற்றம்.
2.ரத்த அணுக்கள் உருவாக்குதல், எரித்ரோ புரோட்டின் மூலமாக (erythro protein).
3.ரத்தத்தின் ரசாயனக் கலவை அளவை துல்லியமாக சீரமைத்தல்.
4.ரத்த அழுத்தத்தை அனுமானித்து ஒரே சீராக வைத்தல்.
5.உடலின் எலும்புகளை சக்தியுடனும் பலமுடனும் வைத்திருத்தல். இதற்கு வைட்டமின் டி(Vitamin D) என்ற வேதிப்பொருளை ஊக்கப்படுத்தி வேலை செய்ய வைக்கின்றன.
6.(Klotho) க்ளாத்தோ என்ற புரதம் மூலம் மனிதனின் ஆயுள் காலத்தை நீட்டிக்கும் பணியைச் செய்கின்றன.
7.ரத்தத்தில் சோடியம், பொட்டாசியம் என்ற உப்புக் கரைசலின் அளவை ஒரே சீராக வைத்திருக்க உதவுகின்றன.
8.நாம் அருந்தும் தண்ணீரின் அளவு உடலில் அதிகமாகி விடாமல் பாதுகாக்கின்றன.
சிறுநீரகங்கள் பழுதடைந்தால் ஏற்படும் அறிகுறிகள்:
Symptoms for Problems in Kidneys & How to Avoid it
1.எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பது. சிறுநீரகங்கள் 90% பழுதடை யும் வரை வெளியே அறிகுறிகள் தோன்றாமலேயே இருக்கலாம். இதனால் இதற்கு சைலன்ட் கில்லர் என்ற பட்டப் பெயர் கொடுத்து அழைக்கிறார்கள்.
2.கால் மற்றும் முகம் வீக்கம்- இது சிலருக்கு பல மணி நேரங்கள் உட்கார்ந்து பயணம் செய்தாலும் வரலாம். இவ்வாறு இருந்தால் சிறுநீரக பரிசோதனை செய்தல் அவசியம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. ரத்தம் தேக்கமடைதல் (வரிகோஸ் வெயின்ஸ் (varicose veins) என்பார்கள்). இருதய வியாதி, கல்லீரல் பாதிப்பு மருந்து போன்றவற்றாலும் கூட இது ஏற்படலாம்.
3.சிறுநீரில் ரத்தப்போக்கு, சிறுநீரில் கற்கள் அழற்சி நோய் (Nephritis), தொற்று (infection) புற்று நோய் முதலிய காரணங்களால் ரத்தம் வெளியாகும். உடனே மருத்துவரை அணுகி ஸ்கேன் (scan) டெஸ்ட் செய்து பார்க்கவேண்டும்.
4.சிறுநீர் எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள். (Urine infection) இதனை ஆன்டி பயாடிக்ஸ் மூலமாகக் குணப் படுத்தலாம்.
5.பசியின்மை, வாந்தி, மயக்கம் இவை சிறுநீரக வியாதிகளில் முற்றிய நிலையில் உருவாகின்றன. இந்த அளவுக்கு நோய் முற்றி விட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும்.
6.ரத்த சோகை (அனீமியா) Anemia: இதனால் உடலில் அசதி சோர்வு உண்டாகும். இதற்கு இரும்புச்சத்து மாத்திரை, ஊசிகள் மூலமும் எரித்ரொ புரோட்டின் (erythropoietin) என்ற ஹார்மோன் ஊசி செலுத்தியும் சிகிச்சை அளிக்கலாம்.
7.தண்ணீர் சத்து அதிகமாதல்: இதற்கு ஹைபோநெட்ரி மியா (Hyponatremia) என்று பெயர். இது மூளை பாதிப்பு ஏற்படுத்தி மயக்கம், கை கால் வெட்டு, கோமா நிலைக்குக் கொண்டு சென்று விடும். இதற்கு உப்புக்கரைசல் சிகிச்சை உடனே செய்ய வேண்டும்.
8.இருதய வியாதிக்கு காரணி: சிறுநீரகங்கள் பழுதடைந்தால் இருதயம் பலவீனமடையும். மாரடைப்பு (Heart Attack)இருதய செயலிழப்பு முதலியவை ஏற்படும்.
9.மூளை பாதிப்படையும். ஸ்ரோக் (Stroke) என்று சொல்லப்படும் பாரிச வாயு நோய் உருவாகும்.
10.உயர் அழுத்தம் மருந்துகள் பலமுறை உபயோகித்தும் கட்டுப்படாமல் இருந்தால் சிறுநீரகங்கள் பலவீனம் அடைந்து விட்டன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
– தொடரும்.
பதிவுகள் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Deduct kidney problems in earlier stage – kidney failure early symptoms in Tamil – Signs of Kidney Disease – Chronic Kidney Disease –
சிறுநீரக பாதிப்பு… அடையாளம் காட்டும் 10 அறிகுறிகள்..! சிறுநீரக நோயின் அபாயகரமான சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!
சிறுநீரக நோயின் அபாயகரமான சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்! இன்னும் ஏராளமான விஷயங்கள் நமது இணையதளத்தில் விரைவில் இணைந்திருங்கள்!
நீங்கள் நமது இணையதளத்திற்கு புதிதாக பார்ப்பவராக இருந்தால் மேலே தெரியும் Notification ஐ Allow செய்து கொள்ளுங்கள். நல்ல பதிவுகள் உங்களுக்கு செய்திகளாக கிடைக்கும்.


