சுகங்களைத் தரும் சூரிய சஷ்டி – Soorya Sashti
நாளை ஞாயிற்றுக்கிழமை(12.9.21) ஆவணி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக் கிழமை.
ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை.
எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும்,
அன்று சூரிய பகவானை பிரார்த்தனை செய்வதன் மூலமாக எத்தகைய ஆத்ம வலிமை கிடைக்கும்,

எத்தனை தைரியம் கிடைக்கும், என்பதைப்பற்றியும்,
நாம் சில பதிவுகளில் சொல்லி இருக்கிறோம்.
அதிலும் நாளைய தினம் ஒரு அற்புதமான நாள்.
ஆவணி மாதம் -சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமை -முருகனுக்குரிய விசாக நட்சத்திரம் -முருகனுக்கு உரிய சஷ்டி திதி –
இப்படி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதியோடு அமைந்த அன்றைக்கு, முருக ருடைய தரிசனம் மிக சிறப்பு என்று பெரியவர்கள் சொல்கிறார்கள் .
அன்றைய நாளுக்கு “ஸூர்ய சஷ்டி-“ என்று பெயர். அன்று அவசியம்-குமர தரிசனம். செய்ய வேண்டும். . .
பாத்ர பத மாதம். சுக்ல பக்ஷ சஷ்டி திதியில். காலை சூர்ய உதயத்திற்கு முன்பாக ஸ்நானம் செய்ய வேண்டும்.
பஞ்ச கவ்யம் (Panjakavyam )சாப்பிட வேண்டும்.
பஞ்சகவ்வியம் இப்பொழுது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது .
நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு, கிழக்கு நோக்கி ஸூர்ய நமஸ்காரம், ஸூர்ய கவசம், ஸூர்ய ஹ்ருதயம், ஸூர்ய ஸ்தோத்ரங்கள் , ஆதித்ய ஹ்ருதயம் சொல்லவும். ஸூர்யன் நமஸ்கார ப்ரியன்.
எனவே முடிந்த அளவு நமஸ்காரங்கள் செய்யவும்.
சூரிய நமஸ்கார பிரார்த்தனையின் மூலம், அசுவமேத யாகம் செய்த பலனை விட, அதிகமாக கிடைக்கும் என்கிறது தர்ம ஸிந்து என்னும் நூல்.
“சுக்லே பாத்ரபதே சஷ்டியாம் ஸ்நானம் பாஸ்கர பூஜனம் ப்ராசனம் பஞ்ச கவ்யம் ச அசுவமேத பலாதிகம்”
Shuklaambara Dharam Vishnum
Shashi Varnam Chaturbhujam
Prasanna Vadanam Dhyayet
Sarva Vighnopashantaye”
அன்று மாலை சஷ்டி திதியாகையால் முருகப் பெருமான் ஆலயம் சென்று முருகனையும் வழிபடலாம்.
கோயிலுக்குப் போக முடியாவிட்டால் பரவாயில்லை.
மாலை விளக்கேற்றி வைத்து அருணகிரிநாதர் அருளிச் செய்த இந்த மூன்று கந்தர் அனுபூதி பாடல்களை பாடி ( சக்தி வாய்ந்த பாடல்களை) முருகப் பெருமானை வணங்குங்கள்.
1.காலையில் சூரிய நமஸ்காரம்
2.சஷ்டிவிரதம் மாலையில் முருகன் கோயில் வழிபாடு அல்லது வீட்டில் முருகப்பெருமானை விளக்கை ஏற்றி வழிபடுதல்.
3.அதற்கெல்லாம் மேலாக பாடல்களை பாடுதல்.
முருகன் குமரன் குகனென்று மொழிந்து
உருகுஞ் செயல் தந் து உணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே.
பேராசை யெனும் பிணியிற் பிணிபட்டு
ஓரா வினையே ன் உழலந் தகுமோ
வீரா முதுசூர் பட வே லெறியுஞ்
சூரா சுர லோக துரந் தரனே.
யாமோதிய கல்வியு மெம் மறிவுந்
தாமே பெற வேலவர் தந்தனாற்
பூமேல் மயல் போ யறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீ ரினியே.
இந்தப் பாடலின் கருத்து நம்மை உருக்கும்.
செல்வச் செருக்கைவிட கல்விச் செருக்கு கொடியது.
நாம் நிறைய படித்திருக்கலாம். இறைவனின் திருவருளினால் படித்து அறிவு வாய்க்கப்பெற்றேன் என்கிற உண்மையை உணர்ந்தால் கல்விச் செருக்கு வராது.
முருகன் அருளால் தமக்கு கல்வி அறிவும் ஞானமும் கிடைத்தது என்று உணர்ந்து, ஒழுக்க வாழ்வு பக்தியோடு வாழ வேண்டும்.

முருகப் பெருமானின் திருநாமங்களை ‘மைந்தா குமரா என சதா சர்வ காலமும் ஆர்வத்தோடு சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
அருணகிரிநாதர் தான் முருகனால் ஆட்கொள்ளப்பட்டபொழுதே தனக்கு மெய் யறிவும் சகல வித்தைகளும் கிடைத்தது என்கிறார்.
“அறிவும் அறி தத்துவமும்
அபரிமித வித்தைகளும் அறி என
இமைப்பொழுதில் ஓதுவித்த வேதியன் ..”
(திருவகுப்பு), என்கிறார்.
ஞானசம்பந்தப் பெருமானுக்கு உமாதேவி திருமுலைப்பால் ஊட்டியவுடன் அவருக்கு, ‘உவமை இல் கலை ஞானமும் உணர்வறிய மெய்ஞானமும்’ பெற்றதாக தெய்வச் சேக்கிழார் கூறுகிறார்.
எனவே, நாளைய தினம், நமக்கு உயிர் கொடுத்து, வாழ்வு கொடுத்து, வாழ வைத்துக் கொண்டிருக்கும், அந்த சூரிய பகவானையும், முருகப் பெருமானையும் நினைத்து, நாவால் புகழைப் பாடி வணங்குவதன் மூலமாக நாம் நன்றிக் கடனை செலுத்துகின்றோம் . நல்லறிவைப் பெறுகின்றோம். நல் வாழ்வைப் பெறுகின்றோம். மிக எளிய வழிபாடு.
காலையில் 5 நிமிடம் மாலையில் 5 நிமிஷம்.
அற்புதமான நாள். அவசியம் பின்பற்றுங்கள்.
- திருச்சித்ரகூட ராமாயணம் தமிழில் பதம் பிரித்து

- ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி

- மதுரகவி சுவாமிகள் – Madhurakavi Swamigal – Srirangam

- புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகளின் ஜெயந்தி விழா

- நமக்கான நல்ல நேரம் நாம் ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது?(Dec 3,2022)

- தெளிவு பெறுவோம் (1.6.2025)


