சிம்மம்
சாதகங்கள் :
குரு ராசியைப் பார்ப்பது பல தோஷங்களை நீக்கும். சூரியன் ஆறில் இருப்பது கோசார ரீதியாக நல்ல அமைப்பு. அரசாங்க கடன்களும் உதவிகளும் கிடைக்கும்..மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். பணவரவு சுமார்தான். கடன் நெருக்கடிகள் கூட வரலாம். தந்தை வழி ஆதரவு உண்டு. உங்கள் கௌரவத்தை பேச்சிலும் செயலிலும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் ஏற்படும். 27ம் தேதி நன்மை ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் இருக்கும். திருமண தாமதம் ஏற்பட்ட வர்களுக்கு வரன் அமையும். சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிப்பதால் கோயில் குளங்களுக்கு சென்று வருவீர்கள்.
கவனம் தேவை:
தொழில் முயற்சிகளில் கவனம் தேவை. தவறான சிந்தனைகளை புறம் தள்ளுங்கள் மன அழுத்தம் வேண்டாம்.பெரிய எதிர்பார்ப்பு வைத்துக் கொள்ள வேண்டாம்.எதிலும் நம்பிக்கையுடன் இருங்கள். வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கையோடு கையாளுங்கள்.

பரிகாரம்
சூரிய நாராயணன் மற்றும் விஷ்ணுவை வணங்குங்கள். வேதனைகள் குறையும்.
கன்னி
சாதகங்கள்:
சுக ஸ்தானம் வலுவாக இருப்பதால் எந்த சிக்கல்களையும் நிதானமாக அணுகுவதன் மூலமாக தவிர்த்து விடலாம்.பொதுவாக வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பணவரவு ஓரளவு வரும். தந்தை வழி உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.அதிக செலவுகள் ஏற்படும் . வியாபாரப் போட்டிகள் உண்டு. அண்டை அயலார் விஷயத்தில் அதிக கவனம் தேவை. 24 மற்றும் 28 தேதிகள் உங்களுக்கு நன்மையைத் தரும். 10-ஆம் இடத்தை குரு பார்ப்பதால், பத்திரிக்கை துறை, எழுத்து, ஆசிரியர் மற்றும் ஆடிட்டர் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல சாதகமான பலன்கள் நடக்கும். கலைத் தொழிலில் உள்ளவர்களுக்கும் அரசியலில் உள்ளவர்களுக்கும் ஆதா யமான வாரம் இது.
கவனம் தேவை
கணவன் மனைவி உறவுகள் சற்று உரசல்களோடு இருக்கும். கவனமாகக் கையாளுங்கள். சகோதர சகோதரிகள் உறவு சீர் கெடலாம்.எச்சரிக்கை தேவை. செயல்களில் பதற்றம், டென்ஷன் ஏற்படும். நிதானம் தேவை. உங்கள் எண்ணங்கள் நிறைவேற உங்கள் உள்ளம் ஒத்துழைக்க வேண்டும். குரு 12 இல் பார்ப்பதால், சில தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. அக்கம் பக்கம் உள்ளவர்களோடு சுமுகமாக இருப்பதன் மூலமாக பல பிரச்சி னைகளைச் சமாளிக்கலாம்.
பரிகாரம்
ராகவேந்திரரை வழிபடுங்கள். நலம் கிடைக்கும்.
துலாம்
சாதகங்கள்:
குரு 5ல் இருப்பது சாலச் சிறந்தது. எதிலும் நன்மை கிடைக்கும் நேரமிது. புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். சிந்தனைகள் வளம் பெறும். புது புது ஐடியாக்கள் தோன்றும். தொழில் வியாபாரம் முதலியவை நல்லவிதமாக நடக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலை இல்லாதோருக்கு எதிர்பார்த்த நல்ல வேலைகள் மாற்றங் கள் வாழ்க்கையில் உருவாகும். ஆரோக்கியம் மேம்படும். பண வரவுகள் ஓரளவுக்கு உங்கள் தேவைக்கேற்றவாறு வரும். மூத்த உடன் பிறப்புகள் உதவுவார்கள். இதுவரை தடைபட்ட வீடு கட்டும் பணி துவங்கிவிடும். 25ஆம் தேதி உங்களுக்கு நன்மைகளை தரும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் .ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.
கவனம் தேவை
பணியிட மாற்றம் இருக்கும். வார்த்தைகளில் சிக்கனம் தேவை. வண்டி வாகனங்களை கவனமாகக் கையாளவும். கண்களை கவன மாக பார்த்துக் கொள்ளுங்கள். கண் நோய்கள் வரும் வாய்ப்பு உண்டு. எச்சரிக்கையோடு இருக்கவும்..
பரிகாரம்
அனுமனை வழிபடுங்கள் அற்புதமான பலன்கள் நடக்கும்..
விருச்சிகம்
சாதகங்கள்:
குரு தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார். நல்ல தொழில் விருத்தி உண்டு.புது ஒப்பந்தங்கள் கிடைக்கும்.இரண்டில் செவ்வாய், சுக்கிரன் இணைப்பு இருப்பதால்,கணவன் மனைவி உறவுகள் அன்பு கொண் டதாக இருக்கும். மனைவி வழியிலும் உங்களுடைய பொருளாதாரம் மேம்படும். ஊக்கம் அதிகரிக்கும். பிரச்சனைகளை தைரியமாக சமா ளிப்பீர்கள். எதிலும் மந்த நிலை மாறும். உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள். அரசாங்க அலுவல்களை கவனமாக கையாளுங்கள். 22,26 தேதிகள் நல்லது. வெளியூர் பயணங்கள் லாபகரமாக இருக்கும் . பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும்.
கவனம் தேவை
வாகனத்தில் செல்பவர்கள் கவனத்தோடு செல்வது நல்லது. பிறரை நம்புவதன் மூலம் தொழில் தொல்லைகள் ஏற்படலாம். நண்பர் களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் எந்த வாக்குறு தியும் தர வேண்டாம் .செலவுகளை யோசித்துச் செய்வது நல்லது.
பரிகாரம்:
முருகனை வழிபடுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.
- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்

- தேரழுந்தூர் தேவாதிராஜன் Therazendur Devadhirajan

- கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் கலி வடிவமா?

- தினமும் எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi Daily ?

- கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி – Kannadasan – Krishna Bhakthi

- செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சென்ற ஆண்டு நடந்தவை

