பொதுவாகவே இந்த அக்டோபர் மாதம் சற்று நெருக்கடியான, நம்மை மிரட்டுவதற்கான மாதமாகவே இருக்கிறது.
12 மாதங்களில் அக்டோபர் மாதம் பத்தாவது மாதம்.
பத்தாவது ராசி மகர ராசி.
கர்மவினைகளைச் சொல்லுகின்ற ராசி.
ஏதோ ஒரு காரியத்தின் எதிர் மறை விளைவையும்(negative) பலனையும் தருகின்ற மாதம் பத்தாவது மாதம்,சனிக்குரிய மகர மாதம்.
இந்த மாதத்தில் பல இடங்களில் வெள்ளம் வந்தது. புயல் வந்தது…….. இரண்டு ஹெலிகாப்டர் விபத்துகள் நிகழ்ந்தன.

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் (kedarnath helicopter accident) தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்று (அக்.21) விபத்திற்கு உள்ளானதில் அதில் பயணித்த 5 பேரில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சூரிய கிரகணம் ராகுவினுடைய சுவாதி நட்சத்திரத்தில் துலா ராசியில் நடந்தது. அந்த கிரகணத்துக்கு ஓர் இரண்டு தினங்களுக்கு முன்னர் முன்னோட்டமாக கோவையில் ஒரு விபரீதம் நடைபெற்று விசாரணையில் இருக்கிறது. 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தென் கொரியா தலை நகரத்தில் சியோல் நகரத்தில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் 153 பேர் நெரிசலில் சிக்கி மாண்டனர்.அதே நாள் குஜராத் நடை பாலத்தில் விபத்து நடைபெற்று 141 பேர் பலியாகினர். சோமாலியாவில் பயங்கரவாத கார் குண்டு வெடிப்பு நடந்து பலர் பரிதாபமாக மாண்டு போயினர். அடுத்தடுத்து இத்தனை சேதங்களேன்?உயிர் இழப்புக்களேன்?
இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்தால் நமக்கு பல வியத்தகு செய்திகள் கிடைக்கிறது.
சூரிய கிரகணத்தை ஒட்டி முன்னும் பின்னுமாக இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நடங்திருப்பதைப் பார்க்கவேண்டும்.

பொதுவாகவே ஒரு விபத்து நடைபெறுவதற்கு சனி செவ்வாய் ராகு கேது போன்ற கிரகங்களின் பங்கு அதிகம் இந்த கிரகங்கள் தனித்தோ இணைந்தோ பெரும் தாக்குதலை நடத்துகின்றன.
இதில் ஆயுள்காரகன் சனி.
செவ்வாய் விபத்து தாக்குதல் முதலியவற்றை செய்யக்கூடிய கிரகம்
கேது கண்ணுக்குப் புலனாகாத பல ரகசிய விஷயங்களைச் செய்வதுண்டு. எதையும் வெட்டி துண்டாகச் சிதறச் செய்வது.
ராகு என்பது எதையும் பிரம்மாண்டமாகச் செய்வது
இந்த கிரகங்களின் பார்வையைப் பெற்ற கிரகங்களும் பாவி ஆகின்றனர்.
முப்பதாம் தேதி(30.10.22) உள்ள கிரக நிலையைப் பாருங்கள் .
செவ்வாய் வக்ரமாகி, எட்டாம் பார்வையால் சனியைப் பார்க்கிறது.
செவ்வாயின் பார்வையைப் பெற்ற சனி இன்னும் தீவிரமாகிறது.
இரண்டும் இணைந்து அதாவது செவ்வாயின் எட்டாம் பார்வை பெற்ற சனி தனது பத்தாம் பார்வையாக கிரகணம் நிகழ்ந்த துலா ராசியைப் பார்வையிடுகிறது.
அந்த ராசியில் உள்ள கிரகங்களைப் பாருங்கள். சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இரண்டு பாகை வித்தியாசம் சூரியனும் புதனும் 6 பாகை வித்தியாசம். சூரியனுக்கும் கேதுவுக்கும் 7 பாகை வித்தியாசம். சூரியன் கேது சுக்கிரன் 3-ம் ராகுவால் பார்க்கப்படுகிறார்கள்.
ஆக, அந்த ராசியே கிரகத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
செவ்வாயின் பார்வையைப் பெற்ற சனி, அதைப் (துலா ராசி) பார்ப்பதால் இன்னும் எதிர்மறை ராசி ஆகிறது. காலச்சக்கரத்தின் எட்டாவது ராசிக்கு உரிய செவ்வாயின் நட்சத்திரத்தில், ஆறாவது ராசிக்குரிய புதன் (அதாவது சித்திரை நட்சத்திரத்தில் புதன்) துலா ராசியிலேயே இருந்து சூரியனால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்.
சூரியன் கேதுவால் பீடிக்கப்பட்டிருக்கிறது.
ராகுவால் பார்க்கப்படுகிறது.
சனியால் பார்க்கப்படுகிறது.
செவ்வாயின் தொடர்பு இருக்கிறது.
30.10.22 ஞாயிற்றுக்கிழமை.
சூரியனுக்குரிய நாள்.
சூரியன் இராகு நட்சத்திரத்தில்(சுவாதி) தான் இருக்கிறார். சந்திரன் சுக்கிரனுக்குரிய பூராட நட்சத்திரத்தில் இருக்கிறார். ஆனால் நட்சத்திர நாதன் சுக்கிரன் ராகுவின் நட்சத்திரத்தில் இருக்கிறார். கர்ம ராசியில் உள்ள சனி செவ்வாயால் பார்க்கப் பட்டது மட்டுமல்ல, சனியும் செவ்வாயின் நட்சத்திரமான அவிட்ட நட்சத்திரத்தில் இருப்பதால் அது செவ்வாயாகவே மாறுகிறது .

செவ்வாய் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சுய சாரம் பெற்று மிக பலமாக இருக்கிறார்..
அவர் அமர்ந்த ராசிநாதனான புதன் செவ்வாயின் நட்சத்திரத்திலேயே (சித்திரை) இருக்கிறார் .
ஆக விபத்தை ஏற்படுத்துகின்ற கிரகமான செவ்வாயின் ஆதிக்கம் மிக மிக ஓங்கி மற்ற கிரகங்கள் எல்லாம் பலவீனப்பட்ட நிலையில் இந்த மோசமான விபத்து நடந்து இருப்பதை நாம் பார்க்கின்றோம்.
இதற்கு ஒரே பரிகாரம் நம்முடைய பிரார்த்தனையைப் பலப்படுத்துவது தான்.
அந்தப் பிரார்த்தனை ஓரளவு இருந்ததால்தான் கோவையில் கூட மிகப்பெரிய உயிரிழப்பு நடை பெறா வண்ணம் காப்பாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதையும் உணரவேண்டும். தொடர்ந்து இறையருளை வேண்டுவோம்.
– ஆலய தரிசனம் ஜோதிட ஆய்வு மையம்.
- திருச்சித்ரகூட ராமாயணம் தமிழில் பதம் பிரித்து

- ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி

- மதுரகவி சுவாமிகள் – Madhurakavi Swamigal – Srirangam

- புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகளின் ஜெயந்தி விழா

- நமக்கான நல்ல நேரம் நாம் ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது?(Dec 3,2022)

- தெளிவு பெறுவோம் (1.6.2025)

