சிம்மம்
சாதகங்கள் :
இவ்வாரம் குரு பார்வையால் குடும்ப உறவுகள் மிகச்சிறப்பாகவும் உங்களுக்கு ஆறுதலாகவும் இருக்கும். வருமானத்தில் பிரச்சனை இருக்காது. கடன்கள் அடைபடும். சிலருக்கு இடமாற்றங்கள் இருக்கும். வேலை செய்யுமிடத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இவ்வாரம் சிறப்பான பலன்களைத் தரும். கலைத்துறை அன்பர்கள் சிறப்பான வாய்ப்பினை அடைவார்கள். குடும்ப உறவுகள், கணவன் மனைவி அன்னியோன்னியம் போன்றவை சிறப்பாக இருக்கும். வருமானம் கூடுதலாக கிடைக்கும். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிந்தனைத்திறன் ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர் வுகள் கிடைக்கும்.
கவனம் தேவை:
தாயாரின் உடல் நிலையில் கவனம் கொள்ள வேண்டும். அதிகமான அலைச்சலும் உழைப்பும் இருக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வயிற்று உபாதைகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு. 29, 30 ஆகிய தேதிகளில் தேவையில்லாத பல பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு. வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ளவும்.
பரிகாரம்
தினமும் மாலை விளக்கு வைத்து, ஒரு அத்தியாயம் சுந்தரகாண்டம் படித்து வரவும். பெருமாள் கோயிலுக்கு சென்று துளசிமாலை சாத்தி வழிபடுங்கள் .

கன்னி
சாதகங்கள்:
குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் கூடும் .பணவரவு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நிச்சயமாகும். தொழில் முன்னேற்றமாக நடைபெறும். கலைத்துறை அன்பர்கள் ஆதாயம் பெறுவார்கள். அதிகாரிகளால் பாராட்டும் ஆதாயமும் பெறு வீர்கள். மறைமுக போட்டிகள் விலகும். வியாபார விருத்திக்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கும். சுக்கிரன் பார்வை உங்களுக்கு சந்தோஷத்தை தரும்.
கவனம் தேவை
பணிகளில் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். உங்களைப் பற்றி தேவையில்லாத பிரச்சனைகளை சிலர் ஏற்படுத்தி தொல்லை தரக்கூடும். கவனம் தேவை. குறிப்பாக 27, 28 மற்றும் டிசம்பர் 1,2 தேதிகளில் கவனமாக நடந்து கொள்ளவும்.
பரிகாரம்
அஷ்டமி நாளில் சிவன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுங்கள். பைரவரை அர்ச்சனை செய்வதன் மூலமாக, உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
துலாம்
சாதகங்கள்:
பணப் பிரச்சினைகள் இம்மாதம் சிக்கல் இல்லாமல் இருக்கும் .சிலர் கூடுதலான ஆதாயம் பெறுவீர்கள். குடும்ப சூழலும் உங்களுக்கு சுமுகமாகவே இருக்கும். சுப நிகழ்ச்சிகளும் ,சுபச் செலவுகளும் இருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமாக வேலை செய்யும் வாரமாக இந்த வாரம் அமையும். தொழிலில் லாபமும் முன்னேற்றமும் ஏற்படும். கூட்டுத்தொழில் சுமுகமாக நடைபெறும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும் .அரசியல் துறையினருக்கு முன் னேற்றம் கிடைக்கும்.
கவனம் தேவை
உழைப்பும் அலைச்சலும் இருக்கக்கூடிய வாரம் இது. பிறருடைய வேலையையும் நீங்கள் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. தாய்மாமன் உறவுகளில் விரிசல் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. தேவையில்லாத பேச்சுக்களால் சில எதிர்பாராத மனக் கஷ்டங்கள் வரும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பதும் உங்களுக்கு நல்லது. சிலர் மன அழுத்த கஷ்டங்கள் உணர்வார்கள்.
பரிகாரம்
சென்ற வாரம் சொன்னது போலவே தியானம் தான் அருமருந்து. காலை நேரத்தில் மன அமைதியோடு ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்து மனதை அமைதியாக்கி கொள்ளுங்கள் .வியாழன் தட்சிணா மூர்த்தியை வணங்குங்கள்.
விருச்சிகம்
சாதகங்கள்:
இவ்வாரம் நல்ல உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். உடன் பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்ப வர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். கலைத் துறை அன்பர்களுக்கு வாய்ப்புக்கள் அதிகமாகும். வீட்டில் சுபநிகழ்ச் சிகள் நடக்கும். நண்பர்கள் மூலம் நல்ல உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரமும் பொருளா தாரமும் அதிகரிக்கும். சிலருக்கு நிலம் அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.
கவனம் தேவை
வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் கூட, திட்டமிட்டு சேமிக்கும் பழக்கம் இல்லாவிட்டால் கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை இவ்வாரம் சவாலாகவே இருக்கும். பார்த்து ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். பிறர் விஷயங்களில் எக்காரணத்தை முன்னிட்டும் தலையிட வேண்டாம். டிசம்பர் 1 மற்றும் 2 ம் தேதிகளில் சில எதிர்பாராத ஏமாற்றங்கள் ஏற்படும் .சிலருக்கு மனதில் எப்பொழுதும் கவலை இருக்கும் .
பரிகாரம்:
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் விளக்கு ஏற்றி துர்க்கை அம்மனை வழிபடுங்கள். வராகப் பெருமாள் தரிசனம் செய்வதும் நல்லது சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்குத் தவறாமல் செல்லுங்கள்.





