
ஐப்பசி IV வாரம் ராசி பலன் – பகுதி – 3 Aippasi 4 Week Raasi Palan Weekly Astrology Predictions – Part 3
தனுசு
சாதகங்கள் :
ராசியில் சுக்கிரன்.வருமானம் குறைவின்றி இருக்கும். குடும்பச் சூழலும் சிக்கலின்றி நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.மேலதிகாரிகளின் கவனத்தை கவர்வீர்கள். கடன் சுமை குறையும்.கோயில் குளம் என ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களின் எதிர்பாராத சந்திப்பும் ஆதரவும் உண்டு. வாழ்க்கை துணைவர் அல்லது துணைவியோடு இணக்க உறவு என்பதால் மகிழ்வான வாரம் இது.
கவனம் தேவை:
சிக்கல் தரும் கோபம் வேண்டாம்! தாயாரின் உடல் நிலையில் கவனம் செலுத்தவும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக் கவும்.10,11 ம் தேதிகளில் அதிக கவனம் தேவை.
பரிகாரம்
7.11.2021 ஞாயிறு காலை சூரிய பகவானுக்குக் கொஞ்சம் சர்க்கரை பொங்கல் வைத்து படைத்து வணங்குங்கள். மாலையில் பெருமாள் கோயிலில் தீபமேற்றி, “ஓம் நமோ நாராயணா” என்று ஒன்பது முறை சொல்லவும் .அனைத்தும் நலமாகும்.

மகரம்
சாதகங்கள்:
சென்ற வாரம் சொன்னது போல் உங்களுக்கு இதுவரை உள்ள கிரகத் தடைகள் மெல்ல மெல்ல விலகுகிறது.நல்ல காலம் கொஞ் சம் கொஞ்சமாக பிறக்கிறது.உங்கள் திறமை விரைவில் வேகம் எடுக்கும். அறிவுத் திறன் கூடும். பலரது உதவிகள் கிடைக்கும் . சுக்கிரன் 12ல் இருந்தாலும் பணம் சேரும். உங்கள் முன்னேற்றத் தடையான எதிர்ப்புகள் அகலும்.தொழில், சாதகமான போக்கில் நகரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உங்கள் முயற்சிகளை தடுத்துக் கொண்டிருந்த ராகுபகவான் மெல்ல விலகுகிறார். தந்தை வழி பாக்கியங்கள் ஆதாயங்கள் கிடைக்கும். பதினொன்றில் கேது, சுக்கிரன் ஆற்றலைத் தருவார்.
கவனம் தேவை
மற்றவர்களை விட்டுத் தள்ளுங்கள். உங்கள் மனசாட்சிப்படி இருங்கள்.அவர்கள் தவறை அவர்களே விரைவில் உணர்வார்கள். தேவையற்ற வாதப் பிரதிவாதம் செய்ய வேண்டாம். பிறரை குறை கூற வேண்டாம்.காரணம் வாக்கு ஸ்தானம் பலமில்லை.
பரிகாரம்
இவ்வாரமும் சனிக்கிழமை வழிபாட்டை தொடர்ந்து செய்யுங்கள். விட்டுவிட வேண்டாம். இஷ்ட தெய்வம், குலதெய்வம் இரண்டையும் பற்றிக் கொள்ளுங்கள். ஸ்ரீ நரசிம்மர் துதி, கவசம் பாராயணம் செய்வது உங்கள் சக்தியை அதிகரிக்கும்.
கும்பம்
சாதகங்கள்:
கர்ம காரகனான சனி ,ராசி, விரயம் இரண்டுக்கும் பொறுப்பு வகிக் கிறார்.வரவுக்கும் செலவுக்கும் தொடர் போராட்டம் இன்னும் சில காலம் நீடிக்கும்.எனவே செய்யும் செலவில் கவனம் தேவை. இந்தக் காலகட்டத்தில் எல்லாக் காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சுக்கிரன் புதிய தொடர்புகளை தந்து திறமை வெளிப்படுத்த உதவுவார்.பல வகையிலும் முன் னேற்றம் உண்டாகும். சுபச் செலவுகள் ஏற்படும். கலைத் துறை யினருக்கு சரியான முயற்சிகள் தேவை. பொறுமை அவசியம். பதற்றம் காரியத்தைக் கெடுக்கும். மேல் அதிகாரிகளிடம் வாக்கு வாதம் வேண்டாம்.
கவனம் தேவை
சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். 12ல் குரு .மன குழப்பங்கள் அலை கழிக்கும். முடிவு எடுப்பதில் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகி உங்களை டென்ஷன் ஆக்கும். 10 மற்றும் 11ம் தேதிகளில் அதிக கவனம் தேவை.
பரிகாரம்:
சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கும், ஆஞ்சநேயர் கோயிலுக்கும் செல்லத் தவறாதீர்கள். ராசிநாதன் சனி பகவான் அருள் உங்களுக்கு வேண்டும்.ஏதேனும் கோயிலுக்கு நல்லெண்ணெய் 1 லிட்டர் வாங்கித் தாருங்கள்.
மீனம்
சாதகங்கள்:
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். உங்கள் செயல்கள் லாபத்தை நோக்கி நகரும். இவ்வாரம் மற்றவர்கள் மூலம் பாராட்டு கிடைக்கும் . வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். பணச் சிக்கல் இருக்காது. தொழில் வியாபாரம் சூடு பிடிக்கும்.நல்ல லாபமும் கிடைக்கும். தொழில் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.சாதகமாகும்.
கவனம் தேவை
சூரியன் ராசிக்கு எட்டில் மறைவது சில சிக்கல்களை மன ரீதியில் தரும் . வேகமான பேச்சு வேண்டாம். புதிய முயற்சிகள் குறித்து இப்போதைக்கு திட்டமிடாதீர்கள். ராகுவின் நிலை 2ல் வரப் போகிறது. பணத்தை பத்திரபடுத்துங்கள்.
பரிகாரம்:
குலதெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லாக் காரியமும் வெற்றியாக முடியும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி படத்திற்கு முன் விளக்கேற்றி,” ஓம் மகாலட்சுமியை நமஹ; என்று மந்தி ரத்தை ஜெபம் செய்து வர, சிரமங்கள் மாறும்.சிக்கல்கள் தீரும்.
- ஆடி மாத ராசி பலன்கள் 2020 (மேஷம், ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி )
- ஆடி மாத ராசி பலன்கள் 2020 (துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்) )
- சனிப்பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் சுருக்கமான பலன்கள் Sani Peyarchi Palangal
- புரட்டாசி முதல் வாரம் ராசி பலன் Purattasi Weekly Astrology Predictions in Tamil
- புரட்டாசி முதல் வாரம் ராசி பலன் – பகுதி – 2 Purattasi 1 Week Raasi Plan Weekly Astrology Predictions
- புரட்டாசி முதல் வாரம் ராசி பலன் – பகுதி – 1 Purattasi 2 Week Raasi Palan Weekly Astrology Predictions – Part 1