
தனுசு
சாதகங்கள் :
ஏழரை நாட்டு சனி, மூன்றாம் இடத்தில் குரு, 12ஆம் இடத்தில் கேது போன்ற சில முக்கியமான அனுகூலமற்ற கிரக நிலைகளால் தொடர்ந்து பல இடர்பாடுகள் இருந்தாலும் கூட, மற்ற சில கிரகங்களின் ஆதரவினால் எதையும் சமாளிக்கக் கூடிய மனநிலை ஏற்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினர் அதிக ஆதாயத்தை பெறுவார்கள் வருமானத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் உழைப்பு தான் மிக அதிகமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும்.

கவனம் தேவை:
பொதுவாகவே நீங்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படுவதன் மூலம் உங்களுக்கு வருகின்ற எந்த சிக்கல்களையும் தடுத்துக்கொள்ளலாம். உங்களுடன் துணை இருப்ப வர்களே உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களின் போது, உங்கள் பணம் மற்றும் பொருட்களை மிகவும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். சற்று அலட்சியம் இருந்தாலும் கூட, அவைகளை இழக்கக்கூடிய நிலை ஏற்படும். தந்தைவழி உறவுகள் பிரச்சினையைத் தரும் என்பதால் எச்சரிக்கை தேவை. உடல் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரம்:
பிள்ளையாரை வணங்குவதன் மூலமாக பிரச்சனைகள் தீரும். வியாழக்கிழமை ராகவேந்திரரை வணங்குங்கள்.ராயர் உங்களுக்கு துணை இருப்பார்.
மகரம்
சாதகங்கள்:
இதுவரை இருந்துவந்த அனுகூலமற்ற நிலையிலிருந்து திருப்பம் நிகழத் தொடங்கும் வாரம் இது. இதுவரை இருந்த பணக் கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். குடும்ப உறவுகளில் சுகம் இருப்பதால் மனம் நிம்மதியாக இருக்கும். எதிர்பார்த்திருந்த ஒரு செய்தி இவ்வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகத்தில் உங்கள் மீது பழி சுமத்தியவர்கள் தாங்கள் செய்தது தவறு என்று மாற்றிக்கொள்வார்கள். சிலருக்கு வேலையில் புதிய உயர்வுகளும் பாராட்டும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான வாரமாக அமையும் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அது ஏற்படக்கூடிய வாரம்.
கவனம் தேவை
ஜென்ம சனி என்பதால், ஒரு மகிழ்ச்சி வருகின்ற பொழுது அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்யமுடியாத சில தொல்லைகளும் வந்து சேரும். சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். அது அவர்களுக்கு நன்மையை தரும். 29 ,30 ம் தேதி களில் சில காரியங்கள் தடைபடும்.
சந்திராஷ்டமம்:
27ம் தேதி காலை முதல், 29.11.21 காலை 4 மணி வரை சந்தி ராஷ்டமம் உண்டு. வண்டி வாகனம் ஓட்டுவதில் எச்சரிக்கை தேவை. இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்
பெரியோர்களுடைய ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். வியாழக்கிழமை குருபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரையும், சனி பகவானையும் வணங்குங்கள்.
கும்பம்
சாதகங்கள்:
குரு பார்வையால் பல நன்மைகளை உங்களுக்கு செய்வார்.நீங்கள் எதிர்பார்த்திருந்த அரசு உதவிகள் உங்களுக்குச் சுமுகமாக அமையும். உங்கள் மரியாதையும் மதிப்பும் கூடும். கணவன் மனைவி உறவுகளில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் மீது யாரேனும் பழி சொல்லி இருந்தாலும் கூட ,அது எடுபடாமல் போகும். பண வரவு சற்று அதிகரிக்கும். வாகனம், சொத்து முதலிய வற்றில் இருந்த தடைகள் நீங்கி உங்களுக்கு அனுகூலமாகும் . மனதில் தெய்வ பக்தி அதிகரிக்கும் .
கவனம் தேவை
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில தேவையில்லாத மன அழுத் தங்களும், வேலை அழுத்தங்களும் இருக்கும் வாரம் இது. உடல் நிலையில் கவனம் கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். மனதில் கவலையளிக்கும் எண்ணங்களும் உடல் சோர் வும் ஏற்படும். காரணமில்லாமல் பிறர் மீது எரிந்து விழுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
சந்திராஷ்டமம் :
29.11.21 காலை 4 மணி முதல் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி காலை 7.45 மணி வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சிலும் செய லிலும் கவனம் தேவை. பயணங்களை எச்சரிக்கையோடு கையா ளவும். அலைச்சலைக் குறைத்துக் கொள்ளவும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு செய்யுங்கள் . மகான் ராகவேந்திரர் கோயிலுக்கு சென்று வாருங்கள். சுந்தர காண்டம் கடல் தாவு படலம் பாராயணம் செய்யவும்.இந்த வாரத்தை எளிதில் கடந்து விடலாம்.
மீனம்
சாதகங்கள்:
11-ஆம் இடத்தில் உள்ள சனி பகவான் ஆட்சி பலத்தோடு இருப்பது ஒரு அற்புதமான அமைப்பு. அதோடு சூரியன், புதன் மற்றும் கேது போன்ற கிரகங்கள் சாதகமான நிலையில் சஞ்சரிக்கின்றன. உத்தி யோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்றமான திசை யில் நகரும். பொருளாதாரம் ஓரளவு எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்கும். தொழில் போட்டிகளை நீங்கள் சமாளிக்க வேண்டி யிருக்கும்.
கவனம் தேவை
தேவை இல்லாத சிந்தனைகளால் மனம் புலம்புவதை நீங்கள் அனு மதிக்கக்கூடாது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் தவறிப் போகும் என்பதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை. ஆரோக்கியக் குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கவனமாக இருக் கவும்.
சந்திராஷ்டமம்:
1.12.21 காலை 7:45 முதல் 3 .12. 21 இரவு 7 மணி வரை சந்திராஷ் டமம் உண்டு. கவனமாகப் பேசவும். படிகளில் இறங்கும்போதும், சாலையில் நடக்கும் போதும், அல்லது வாகனத்தை ஓட்டும் போதும் கவனத்தோடு இருக்கவும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருங்கள். விநாயகப் பெரு மானை வணங்கி வாருங்கள். சனிக்கிழமைகளில் பக்கத்தில் உள்ள பெருமாள் தாயார் கோவிலுக்குச் சென்று வழிபடவும்.
- ஆடி மாத ராசி பலன்கள் 2020 (மேஷம், ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி )
- ஆடி மாத ராசி பலன்கள் 2020 (துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்) )
- சனிப்பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் சுருக்கமான பலன்கள் Sani Peyarchi Palangal
- புரட்டாசி முதல் வாரம் ராசி பலன் Purattasi Weekly Astrology Predictions in Tamil
- புரட்டாசி முதல் வாரம் ராசி பலன் – பகுதி – 2 Purattasi 1 Week Raasi Plan Weekly Astrology Predictions
- புரட்டாசி முதல் வாரம் ராசி பலன் – பகுதி – 1 Purattasi 2 Week Raasi Palan Weekly Astrology Predictions – Part 1
Pachai Vanna perumal – Pavala vanna perumal – Kanchipuram