அகிலம் ஆளும் நாயகியே ஆண்டாள் தாயாரே
முகில் போன்ற உனைக் காண ஓடி வந்தோமே !
பூமித்தாயின் அவதாரமாய் வந்திருப்பவளே
பூரத்தின் (ஆடி) சீர்மையை சிறக்கச் செய்தவளே! (அகிலம்)
திருத்துழாய் செடியின் கீழ் கிடந்த சேயே
திருமாலை சூடித் தந்த கோதை நாயகியே
வில்லிபுத்தூர் விஷ்ணுசித்தர் திருமகளாம் – நீ
வ்ருந்தாவன (கண்ணன்) லீலைகளை விரும்பி கேட்டவளே (அகிலம்)

மதில் அரங்கனை மணாளனாய் வரித்து வந்த – நீ
மானிடர்க்கு பேச்சுப்படில் மாட்டேன் என்றாயே
மாலிருஞ்சோலை (நம்ம) நம்பிக்கு நேமம் ஏற்ற – நீ
மன்னாரை (ரெங்க) மணம்புரிந்து மகிழ்ந்த மாதே (அகிலம்)

வேயர்குல மாளிகையில் வளர்ந்து வந்தாலும் – நீ
ஆயர்குல சிறுமியாக வலம் வந்தவளே
பெரும்பூதூர் மாமுனியின் தங்கையானவளே
பெருங்கோயில் (வட) பெருமானின் பக்தையானவளே (அகிலம்)
மார்கழியில் நீரோட்டம் மகத்தான காணும் – நீ
மணவாள மாமுனிக்கு தையில் வந்தவளே
ஐந்து வயதில் அற்புதமாய் நோம்பு நோற்றவளே
ஐயமில்லை அனைவருக்கும் பக்தி தந்தவளே (அகிலம்)
அகிலம் ஆளும் ஆண்டாள் தாயே! திருஆடிப்பூர சிறப்பு பாடல்! பாடலை கேட்க இங்கு கிளிக் செய்யவும். https://youtu.be/LsVwMCdSFPQ
திருப்பாவை முப்பதும் செப்பி நின்றவளே
திருமாலடியாரின் (நம்ம) நெஞ்சில் நிற்பவளே
அரங்கன் திருவடியை அடைந்திருப்பவளே
அன்னவயல் (நம்ம) புதுவை நகரில் அருள்புரிபவளே (அகிலம்)
Lyrics : Sri.R.Rangarajan, Madurai | Song : Smt. Vishnupriya Sudharsan
- DR.AVR – 5.அடியேன் பெற்ற நெருக்கம்

- A.V R an Era-Chapter 5

- Naathamunigal-தமிழ் மறை தந்த வள்ளல்

- AVR -An Era அத்தியாயம் 2: ஆத்ம உறவுகளின் கூடாரம்
- DR.AVR -an Era (chapter 2)
- Dr.AVR- ஒரு சகாப்தம்


