துளசித் தூது – Tulasi and Perumal
அலமேலு மங்கையினை ஆள்கின்ற நாதன்
சில காலம் என்னையும் தான் சேர -நிலத்தில்
உளமலரின் மேலுயர்ந்து உத்தம மேயான
துளசியே நீ போய்ச் சொல் தூது.
வேங்கடத்தின் மீதமர்ந்த வேந்தனவன் பேரழகில்
ஏங்கி மனம் சாய்ந்திட்டேன் இங்கே நான்; – தீங்கும்
களங்கமெதும்இல்லாயென் காதலையே ஆங்கே
துளசியே நீ போய்ச் சொல் தூது
புரட்டாசித் திங்கள் புனித சனி நாளில்
இரட்டிப்பாய் என்னுளம்தான் ஏங்கும்:- மரத்தில்
இளங்குயில்கள் கூவிடுமுன் ஏழுமலையோன் முன்
துளசியே நீ போய்ச் சொல் தூது
திருப்பதிக்குச் சென்றால் திருப்பமளிப் போனை
விருப்புளத்துள் கொண்டேன் விழைந்து;-கருத்தை
இளவிடியல் நேரத்தில் ஏற்றபடியாகத்
துளசியே நீ போய்ச் சொல் தூது
மாலவனைக் கண்டு மயங்கி ட்ட தாலிங்கே
கோலமெல்லாம் கெட்டே குலைந்திட்டேன்;- காலம்
வளர்ந்தென்னை மாய்த்திடுமுன் வாடுமெந்தன் நெஞ்சைத்
துளசியே நீ போய்ச்சொல் தூது.
பெருமாளாய் நின்றங்கே பேருலகைக் காக்கும்
உருவழகில் வீழ்ந்தேன் உவந்து;- திருவின்
இளமார்பைச் சேர்ந்தே இளைப்பாற வேண்டும்;
துளசியே நீ போய்ச் சொல் தூது
- கே. பி .பத்மநாதன், கோவை
- தினமும் எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi Daily ?
எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi ? வேதம், பரம புருஷனான ஸ்ரீ மந் நாராயணனை திருப்பள்ளி எழுச்சி பாடி மகிழ்கிறது. “உத்திஷ்ட புருஷ் ஹரீலோஹித… - பாவமும் புண்ணியமும் (ஆன்மிகம்)
பாவமும் புண்ணியமும் (ஆன்மிகம்) – Paavamum Puniyamum – Aanmeegam நம்முடைய வாசகரின் (ஆக்கூர் பெருமாள்) விரிவான கடிதம். அவசியம் அனைவரும் படிக்கவும். மார்ச் 2020 ஆலயதரிசன… - திருக்குறள் ஆய்வரங்கம் – Thirukkural Meaning Research Forum
திருக்குறள் ஆய்வரங்கம் – பேராசிரியர். எஸ் கோகுலாச்சாரி Thirukkural Meaning Research Forum – Prof. S. Gokulachari 6.6.2020 சனிக்கிழமை அன்று புவனகிரி தமிழ்ப் பேரவையில்… - Aalayadharisanam Silver Jubilee ஆலய தரிசனம் வெள்ளி விழாஆலய தரிசனம் வெள்ளி விழா Aalayadharisanam Silver Jubilee Celebrations 7.3.2021 அன்று புவனகிரி(Bhuvanagiri) சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அருகிலுள்ள தேவாங்கர் மகாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்று…
- யார் இந்த கடோத்கஜன்? Who was Ghatotkacha ?
கடோத்கஜன் Ghatotkacha – in Tamil Who was Ghatotkacha? What was role of Gatotkacha in Mahabharatha ? முனைவர். இரா.வ.கமலக்கண்ணன், காஞ்சிபுரம். வீமனுக்கும்… - ஆலினிலையாய்… ஆலிலைக் கண்ணன் Alilai Kannan
ஆலினிலையாய்… – Aalilai krishnan – ஆலிலைக் கண்ணன் -கு.அரங்கநாதாச்சாரியார் திருப்பாவை (Thirupaavai) இருபத்தாறாம் பாசுரம், பாவை நோன்பிற்குத் தேவையானவற்றைக் கேட்கும் பாசுரமாக அமைந்துள்ளது. அவற்றை நல்கும்…
