திருவெள்ளக்குளம் (Thiruvellakulam)அண்ணன் கோயில் (Annanperumalkoil)தொண்டர் தொண்டன் ஸ்ரீமான் சடகோப கல்யாணராமன் சுவாமிகளின் தேவியார் ஸ்ரீமதி ராஜலட்சுமி அம்மங்கார் ஆசாரியன் திருவடி அடைந்ததை ஒட்டிய வருஷாப்திகம் பிரபந்த கோஷ்டி சேவா காலத்தோடு முறையாக நடைபெற்றது.
இதனை ஒட்டி திருச்சித்ரகூடம் ஏ வீ.ரங்காச்சாரி சுவாமிகள் தலைமையில் வைணவக் கருத்தரங்கம் நடைபெற்றது. திருமங்கையாழ்வார் மிகவும் ஈடுபட்டது திருவரங்கத்திலா ? திருவேங்க டத்திலா?திருக்கண்ணபுரத்திலா? திருநறையூரிலா ? திருநாங்கூரிலா? என்ற தலைப்பில் ஒரு வைணவக் கருத்தரங்கம் பட்டிமன்ற பாணியில் நடைபெற்றது.

சென்னை ஸ்ரீமான் ஆழ்வார்க்கடியான் (மை .பா.நாராயணன்) முன்னிலை வகித்தார் .
ஆன்மீக பலன் ஆசிரியர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வரிச்சிக்குடி கு. அரங்கநாதாச்சாரியார் சுவாமி, முனைவர் காட்டுமன்னார்கோயில் எம்.எஸ். வெங்கடாச்சாரியார் சுவாமி, திருமதி ஹரிப்பிரியா தேவநாதன் அம்மங்கார், திருக்குடந்தை டாக்டர் நா.வெங்கடேஷ், ஆலய தரிசனம் ஆசிரியர் ஆகியோர் உரையாற்றினர். அண்ணன் கோயில் ஸ்ரீமான் ஸ்ரீதர் நன்றி உரையாற்றினார். ததியா ராதனம் சிறப்பாக நடைபெற்றது.
திருவெள்ளக்குளம் அண்ணன் கோயில் வைணவ கருத்தரங்கு காட்சிகள் …….










- அரங்கனைக் கண்டு பெருகும் ஆனந்தக் கண்ணீர்

- தேரழுந்தூர் தேவாதிராஜன் Therazendur Devadhirajan

- கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் கலி வடிவமா?

- தினமும் எதற்கு திருப்பள்ளி எழுச்சி ? Why Thirupalliyezhuchi Daily ?

- கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி – Kannadasan – Krishna Bhakthi

- செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சென்ற ஆண்டு நடந்தவை

